2023 Hyundai Verna: குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது
published on அக்டோபர் 03, 2023 06:41 pm by rohit for ஹூண்டாய் வெர்னா
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
வெர்னா காரின் பாடி ஷெல் ஒருங்கிணைப்பு மற்றும் ஃபுட்வெல் பகுதி 'நிலையற்றது' என்று மதிப்பிடப்பட்டது.
-
ஹூண்டாய் வெர்னா கார் பெரியவர்கள் மற்றும் குழந்தை பயணிகளின் பாதுகாப்பிற்காக 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.
-
பாதுகாப்பு மதிப்பீட்டில் முழு 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹூண்டாய் கார் இதுவாகும்.
-
வயது வந்தோருக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளில் 34 புள்ளிகளில் 28.18 புள்ளிகளைப் பெற்றது.
-
குழந்தை பயணிகளின் பாதுகாப்பிற்காக ஹூண்டாய் செடான் கார் 49-புள்ளிகளுக்கு 42 புள்ளிகள் பெற்றுள்ளது.
-
6 ஏர்பேக்குகள், ESC மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஹை-பீம் அசிஸ்ட் உள்ளிட்ட சில ADAS அம்சங்களையும் பெறுகிறது.
குளோபல் NCAP 2024 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கான கார்களின் சோதனையை நிறுத்தும் அதே வேளையில், ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட ஒரு காருக்கான மற்றொரு கிராஷ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட்டுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் செடான் ஐந்து நட்சத்திரங்களை பெற்றுள்ளன இது அதன் மிகவும் பேசிக் பதிப்பில் சோதிக்கப்பட்டது, இது ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்களுடன் வருகிறது. புதிய வெர்னா கார், முழு 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்ற முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் கார் ஆகும்.
பெரியவர்களுக்கான பயணிகள் பாதுகாப்பு
முன்பக்க தாக்கம் (மணிக்கு 64 கி. மீ)
வயது வந்த பயணிகளின் பாதுகாப்பில் புதிய வெர்னா, 34 புள்ளிகளில் 28.18 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது ஓட்டுநர் மற்றும் பயணியின் தலை மற்றும் கழுத்துக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்கியது. ஓட்டுநரின் மார்புக்கான பாதுகாப்பு 'ஓரளவு பாதுகாப்பு' என்று மதிப்பிடப்பட்டாலும், பயணியின் மார்புக்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. ஓட்டுநர் மற்றும் பயணிகளின் முழங்கால்களு "ஓரளவு" பாதுகாப்பு இருப்பதைக் காட்டின.
டிரைவரின் கால் முன்னெலும்புகளுக்கு "போதுமான " பாதுகாப்பு இருப்பதை காட்டியது, அதே நேரத்தில் பயணிகளின் முன்னெலும்புகளுக்கு "நல்ல மற்றும் போதுமான " பாதுகாப்பைக் காட்டியது. அதன் ஃபுட்வெல் பகுதி 'நிலையற்றது' என்று கருதப்பட்டது, அதே போல் பாடிஷெல்லும் இருந்தது. இந்த கார் மேலும் சுமைகளை தாங்கும் திறன் அற்றதாக கருதப்பட்டது.
பக்கவாட்டு தாக்கம் (மணிக்கு 50 கி. மீ )
பக்கவாட்டு தாக்க சோதனையின் கீழ், தலை, வயிறு மற்றும் இடுப்புக்கு பாதுகாப்பு 'நல்லது' என மதிப்பிடப்பட்டது, ஆனால் மார்புக்கு அது 'போதுமானது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைடு போல் தாக்கம் (மணிக்கு 29 கிமீ)
கர்டெய்ன் ஏர்பேக்குகளை பொருத்துவதும் தேவையான நெறிமுறைகளின்படி இருப்பதாகக் கூறப்பட்டது. சைடு போல் இம்பேக்ட் சோதனையில், தலை மற்றும் இடுப்புக்கு கர்டெய்ன் ஏர்பேக்கிலிருந்து 'நல்ல' பாதுகாப்பும், மார்புக்கு 'ஓரளவு பாதுகாப்பும்' , அடிவயிற்றிற்கு 'போதுமான' பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)
ஹூண்டாய் செடானின் ESC ஃபிட்மென்ட் விகித தேவைகளை பூர்த்தி செய்தது, மேலும் சோதனையில் காட்டப்பட்ட செயல்திறன் குளோபல் NCAP -யின் புதிய தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொடர்புடையவை: 2023 ஹீண்டாய் வெர்னா கார்வகைகள் விளக்கம் இதோ உங்களுக்காக: எந்த காரை நீங்கள் வாங்க வேண்டும்?
பயணம் செய்யும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு
முன்பக்க தாக்கம் (மணிக்கு 64 கி. மீ)
3 வயது குழந்தைக்கான குழந்தை இருக்கை பின்புறமாகப் பார்த்தவாறு நிறுவப்பட்டது, மேலும் இதனால் முன்பக்க தாக்கத்தின் போது தலை வெளிப்படுவதைத் தடுக்க முடிந்தது மற்றும் முழு பாதுகாப்பை வழங்கியது. மறுபுறம், 1.5 வயது டம்மி (போலியானது) இருக்கையும் பின்புறமாக இருந்தது, மேலும் இது தலைக்கும் முழு பாதுகாப்பை வழங்க முடிந்தது.
பக்கவாட்டு தாக்கம் (மணிக்கு 50 கி. மீ)
பக்கவாட்டு தாக்கத் சோதனையின்போது இரண்டு குழந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளும் (CRS) முழு பாதுகாப்பை வழங்கின.
புதிய ஹூண்டாய் வெர்னா காரில் பாதுகாப்பு கிட்
ஹூண்டாய், புதிய வெர்னா காரில் 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டாக பொருத்தியுள்ளது . இவற்றில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC), வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM) மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
முன்பக்க மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர்-பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் லேன்-கீப் அசிஸ்ட், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவையும் உள்ளன.
புதிய வெர்னா நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: EX, S, SX மற்றும் SX(O). இதன் விலை ரூ.10.96 லட்சத்தில் இருந்து ரூ.17.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.
மேலும் படிக்க: ADAS உடன் இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் 5 கார்கள் இவைதான்
மேலும் தெரிந்து கொள்ள: ஹூண்டாய் வெர்னா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful