மார்ச் 2020 இல் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 மாருதி கார்களில் உங்களால் எந்தளவு சேமிக்க முடியும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

published on மார்ச் 14, 2020 02:45 pm by rohit for மாருதி வேகன் ஆர் 2013-2022

 • 47 பார்வைகள்
 • ஒரு கருத்தை எழுதுக

இந்த முறையும் நெக்ஸா மாதிரிகள் சலுகைகள் பட்டியலிலிருந்து விலகியுள்ளது

Here’s How Much You Can Save On BS4 & BS6 Maruti Cars In March 2020

 

மாருதியின் அநேக மாதிரிகளுக்கான பல சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. ஆயினும், இந்த சலுகைகள் பிப்ரவரியில் பார்த்தபடி அரேனா மாதிரிகளுக்கு மட்டுமே பொருந்தும். மாருதியானது பி‌எஸ்4 மாதிரிகளின் டீசல் வகைகளுக்கும் சலுகைகளை வழங்குகிறது. ஆகையால், பிஎஸ்4 மாதிரிகளை வாங்குவதற்கு இதுவே கடைசி மாதம் ஆகும், பிஎஸ்6 உடைய கால அவகாசம் ஏப்ரல் 1, 2020 என்பதால், இந்த தேதிக்குப் பிறகு இவைகளைப் பதிவு செய்ய முடியாது. மாதிரி வாரியான சலுகைகளின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

ஆல்டோ 800

Maruti Suzuki Alto 800

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 30,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 15,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 3,000

மொத்த சலுகைகள்

ரூபாய் 48,000 வரை

 • மாருதியானது ஆல்டோ 800-ன் பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி ஆகிய இரு வகைகளுக்கும் சலுகைகளை வழங்குகிறது.

 • பி‌எஸ்6 விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டவுடன் ஆல்டோ கே10 மாதிரியின் தயாரிப்பு நிறுத்தப்படும்.

எஸ்-பிரெஸ்ஸோ

Maruti Suzuki S-Presso

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 20,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 20,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 3,000

மொத்த சலுகைகள்

ரூபாய் 43,000 வரை

 • எஸ்-பிரெஸ்ஸோ அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே பி‌எஸ்-6 இணக்கத்துடன் காணப்படுகிறது.

 • இதன் சி‌என்‌ஜி வகை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்கோ

Maruti Suzuki Eeco

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 20,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 20,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 3,000

மொத்த சலுகைகள்

ரூபாய் 43,000 வரை

 • ஈக்கோ மாதிரியானது எஸ்-பிரெஸ்ஸோவில் வழங்கப்பட்ட அதே சலுகைகளுடன் வருகிறது.

 • மாருதி பி‌எஸ்6 ஈக்கோவை ஜனவரி 2020-ல் அறிமுகப்படுத்தியது.

 • அனைத்து சலுகைகளும் ஈக்கோவின் பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி ஆகிய இரு வகைகளுக்கும் பொருந்தும்.

செலிரியோ

Maruti Suzuki Celerio

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 30,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 20,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 3,000

மொத்த சலுகைகள்

ரூபாய் 53,000 வரை

 • இந்த சலுகைகள் செலிரியோவின் பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி ஆகிய இரு வகைகளுக்கும் செல்லுபடியாகும்.

 • மாருதியானது செலிரியோ எக்ஸ் உடைய அனைத்து வகைகளுக்கும் இதே சலுகைகளை வழங்குகிறது.

 • இதன் பி‌எஸ்6 பதிப்பு ஜனவரி 2020-ல் அறிமுகப்படுத்தப்படும்.

வாகன் ஆர் 

Maruti Suzuki WagonR

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 15,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 20,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 2,500

மொத்த சலுகைகள்

ரூபாய் 37,500 வரை

 • தற்போது வாகன் ஆர் மாதிரியின் பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி ஆகிய இரு வகைகளும் பி‌எஸ்6-இணக்கத்துடன் காணப்படுகிறது.

 • மாருதியானது மேலே கூறப்பட்ட சலுகைகளை இதன் பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி ஆகிய இரு வகைகளுக்கும் வழங்குகிறது.

ஸ்விஃப்ட் (அனைத்து பெட்ரோல் வகைகளுக்கும்)

Maruti Suzuki Swift

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 30,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 25,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 5,000

மொத்த சலுகைகள்

ரூபாய் 60,000 வரை

 • மாருதி மேலுள்ள சலுகைகளை பெட்ரோல் மூலம் இயங்கும் ஸ்விஃப்ட்டின் கைமுறை மற்றும் ஏஎம்டி ஆகிய இரு வகைகளுக்கும் வழங்குகிறது.

 • ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை ஜூன் 2019 லிருந்து பி‌எஸ்6-இணக்கத்துடன் அளிக்கப்படுகிறது.

 • இன்னும் கூடுதலாக, 1,500 ரூபாய் நுகர்வோர் சலுகை, 25,000 ரூபாய் பரிமாற்றத்திற்கான போனஸ், மற்றும் 5,000 ரூபாய் நிறுவன தள்ளுபடி கொண்ட ஸ்விஃப்ட்டின் சிறப்புப் பதிப்பையும் வழங்குகிறது.

ஸ்விஃப்ட் (அனைத்து டீசல் வகைகளுக்கும்)

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 20,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 20,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 10,000

 • இந்த சலுகைகள் ஸ்விஃப்ட்டின் எம்‌டி மற்றும் ஏ‌எம்‌டி ஆகிய இரு வகைகளுக்கும் பொருந்தும்.

 • ஸ்விஃப்ட்டின் டீசல் வகையை வாங்கும் போது, 17,700 ரூபாய் வரை மதிப்பு கொண்ட 5-வருடம் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாத தொகுப்பை அல்லது 15,750 ரூபாய் வரை பண தள்ளுபடியை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 • இதனால், ஸ்விஃப்ட் டீசல் வகைக்கான மொத்த சேமிப்புகளின் அளவு 67,700 ரூபாய் வரை உள்ளது.

 • மாருதி ஸ்விஃப்ட்டின் டீசல் வகை பி‌எஸ்4-இணக்கம் கொண்டது, மேலும் இதன் விற்பனை ஏப்ரல் 2020-ல் நிறுத்தப்படும்.

டிசைர் (அனைத்து பெட்ரோல் வகைகளுக்கும்)

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 35,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 25,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 5,000

மொத்த சலுகைகள்

ரூபாய் 65,000 வரை

 • இந்த சலுகைகள் செடானின் எம்‌டி மற்றும் ஏ‌எம்‌டி ஆகிய இரு வகைகளுக்கும் பொருந்தும்.

 • அதே பரிமாற்றத்திற்கான போனஸ் மற்றும் நிறுவன தள்ளுபடி போன்றவை இருந்தாலும், டிசைரின் சிறப்புப் பதிப்பு 6,500 ரூபாய் உடைய நுகர்வோர் சலுகையுடன் வருகிறது.

 • மாருதியானது பி‌எஸ்6-இணக்கமான டிசைர் பெட்ரோல் வகையை ஜூன் 2019-ல் அறிமுகப்படுத்தியது.

 • முகப்பு மாற்றப்பட்ட டிசைர் சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது, இது விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைர் (அனைத்து டீசல் வகைகளுக்கும்)

Maruti Suzuki Dzire

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 25,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 20,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 10,000

 • டிசைரின் டீசல் வகையை வாங்கும் போது, 19,100 ரூபாய் வரை மதிப்பு கொண்ட 5-வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாத தொகுப்பையோ அல்லது 17,000 ரூபாய் வரையிலான பணத் தள்ளுபடியையோ நீங்கள் தேர்வு செய்யலாம்.

 • இதனால், டிசைரின் டீசல் வகையின் மொத்த சேமிப்புகள் 74,100 ரூபாய் வரை இருக்கும்.

 • மாருதி டிசைர் டீசல் பி‌எஸ்4-இணக்கம் கொண்டது, மேலும் இதன் விற்பனை ஏப்ரல் 2020-ல் நிறுத்தப்படும்.

விட்டாரா பிரெஸ்ஸா (முன்பே-முகப்பு மாற்றம் செய்யப்பட்ட டீசல் மாதிரி)

Pre-facelift Maruti Suzuki Vitara Brezza

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

ரூபாய் 35,000

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 20,000

நிறுவன தள்ளுபடி

ரூபாய் 10,000

 • முன்பே முகப்பு மாற்றம் செய்யப்பட்ட டீசல் மூலம் இயங்கக்கூடிய விட்டாரா பிரெஸ்ஸாவை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் 21,200 ரூபாய் வரை மதிப்பு கொண்ட 5-வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாத தொகுப்பையோ அல்லது 19,500 ரூபாய் வரையிலான பணத் தள்ளுபடியையோ தேர்வு செய்யலாம்.

 • மொத்த சேமிப்புகள் 86,200 வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 • டீசல் மூலம் இயங்கக்கூடிய மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா பி‌எஸ்4-இணக்கம் கொண்டது.

 • விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூபாய் 7.34 லட்சம் முதல் ரூபாய் 11.4 லட்சம் வரை இருக்கும் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

எர்டிகா (டீசல்)

Maruti Suzuki Ertiga

 

சலுகைகள்

தொகை

நுகர்வோருக்கான சலுகை

-

பரிமாற்றத்திற்கான போனஸ்

ரூபாய் 20,000

நிறுவன தள்ளுபடி

-

 • மாருதியானது எம்‌பி‌வியின் பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி ஆகிய இரு வகைகளுக்கும் எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை. 

 • 20,000 ரூபாய் உடைய பரிமாற்ற போனஸ் எர்டிகாவின் டீசல் வகைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

 • மாருதி எர்டிகா டீசல் பி‌எஸ்4-இணக்கமுடையது, மேலும் இதன் விற்பனை ஏப்ரல் 2020-ல் நிறுத்தப்படும்.

 • எம்‌பி‌வியின் பெட்ரோல் மற்றும் சி‌என்‌ஜி ஆகிய இரு வகைகளும் இப்போது பி‌எஸ்6-இணக்கம் கொண்டது.

மேலும் படிக்க: வாகன் ஆர் ஏ‌எம்‌டி

 

 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி வேகன் ஆர் 2013-2022

Read Full News
 • மாருதி ஆல்டோ 800
 • மாருதி ஆல்டோ கே10
 • மாருதி எஸ்-பிரஸ்ஸோ
 • மாருதி செலரியோ
 • மாருதி ஸ்விப்ட்
 • மாருதி டிசையர்
 • மாருதி இகோ
 • மாருதி எர்டிகா

trendingஹாட்ச்பேக்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience