Skoda Kylaq காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 சிறப்பான வசதிகள்
published on அக்டோபர் 31, 2024 04:38 pm by dipan for ஸ்கோடா kylaq
- 98 Views
- ஒரு கருத்தை எழுதுக
பவர்ஃபுல்லான டர்போ-பெட்ரோல் இன்ஜின் முதல் சன்ரூஃப் வரை ஃபிரான்க்ஸ் மற்றும் டெய்சர் கார்களை விட கைலாக் காரில் கொடுக்கப்படவுள்ள 7 வசதிகளின் விவரங்கள் இங்கே
இந்தியாவில் ஸ்கோடாவின் மிகவும் குறைவான விலையில் ஸ்கோடா கைலாக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என ஸ்கோடா உறுதி செய்துள்ளது. இன்ஜின் தவிர இந்த பிரிவில் உள்ள சப்காம்பாக்ட் எஸ்யூவி -களான மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டெய்சர் மற்றும் சில கிராஸ்ஓவர்களுடன் போட்டியிடும் வேரியன்ட்யில் இது பல வசதிகளுடன் வரும். ஏற்கனவே பிரிவின் இந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாருதி ப்ரெஸ்ஸாவை விட கைலாக் பெறும் வசதிகளின் பட்டியலை விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இப்போது மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் என இரண்டு கார்களை விட விட இது எந்த வசதிகளை அதிகமாக பெறக்கூடும் என்பதைப் பார்ப்போம்.
அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின்
கைலாக் ஆனது ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் உள்ள 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று ஸ்கோடா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இன்ஜின் 115 PS மற்றும் 178 Nm அவுட்புட்டை கொடுக்கிறது மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இது கிடைக்கும்.
ஒப்பிடுகையில் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவை 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளன. ஆனால் இவை 100 PS மற்றும் 148 Nm அவுட்புட்டை மட்டுமே கொடுக்கின்றன. இது கைலாக் -ன் இன்ஜினை விட 15 PS மற்றும் 30 Nm குறைவாகும்.
6 ஸ்டாண்டர்டான ஏர்பேக்ஸ்
மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சரை போலவே ஸ்கோடா கைலாக் 6 ஏர்பேக்குகளுடன் வரும். இருப்பினும் கைலாக் ஆனது ஃபிரான்க்ஸ் மற்றும் டெய்சர் கார்களை போலல்லாமல் டெல்டா பிளஸ் (O) மற்றும் G வேரியன்ட்களில் இருந்து அதன் அடிப்படை வேரியன்ட் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிரான்க்ஸ் மற்றும் டெய்சர் இன் லோவர் வேரியன்ட்களில் டூயல் முன் ஏர்பேக்குகள் மட்டுமே உள்ளன.
வென்டிலேட்டட் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் இருக்கைகள்
கைலாக் வென்டிலேட்டட் ஃபங்ஷன் கொண்ட பவர்-அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவை மேனுவலாக அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் உயரத்தை சரிச் செய்து கொள்ளும் வசதியை ஓட்டுநர் இருக்கைக்கு மட்டுமே வழங்குகின்றன.
மேலும் படிக்க: ஸ்கோடா கைலாக் மற்றும் போட்டியாளர்கள்: அளவுகள் ஒப்பீடு
லெதரைட் சீட் அப்ஹோல்ஸ்டரி
கைலாக் கார் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய பிரீமியம் இருக்கையை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் லெதரெட் பேடிங்கையும் டோர் பேட்களில் காணலாம். மறுபுறம் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவை ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களிலும் கூட ஃபேப்ரிக் இருக்கைகளுடன் மட்டுமே வருகின்றன.
பெரிய டச் ஸ்கிரீன்
கைலாக் பெரிய குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்ற 10-இன்ச் டச் ஸ்கிரீன், இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவை 9-இன்ச் யூனிட்டை வழங்குகின்றன. இது பிரெஸ்ஸாவிலும் உள்ளது.
டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே
கைலாக், குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்ற ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவை ஸ்பீடோமீட்டர் மற்றும் டேகோமீட்டருக்கான அனலாக் டயல்களை உள்ளடக்கிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் வருகின்றன, மேலும் கூடுதல் தகவலுக்கான மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (எம்ஐடி) உடன் வருகிறது.
மேலும் படிக்க: வெளிப்புறம் மறைக்கப்பட்ட ஸ்கோடா கைலாக்கின் 5 படங்கள் அதன் வெளிப்புற வடிவமைப்பைப் பற்றிய ஒரு யோசனையை கொடுக்கின்றன.
சிங்கிள் பேன் சன்ரூஃப்
மாருதி பிரெஸ்ஸா சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வந்தாலும், மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகிய கார்களில் இந்த பிரபலமான வசதியை கிடைக்கவில்லை. இருப்பினும் கைலாக்குடன் சிங்கிள்ப் பேன் சன்ரூஃப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி ஃபிரான்க்ஸ் ரூ.7.51 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரையிலும், டொயோட்டா டெய்சர் ரூ.7.74 லட்சம் முதல் ரூ.13.08 லட்சம் வரையிலும் விற்பனை இருக்கிறது.
ஸ்கோடா கைலாக் விலை ரூ.8.50 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வென்யூ மற்றும் சோனெட் ஆகிய சப் காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4மீ கிராஸ்ஓவர்ளுடனும் போட்டியிடும்.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஃபிரான்க்ஸ் AMT