• English
  • Login / Register

Maruti Brezza -வை விட Skoda Kylaq கூடுதலாக 5 வசதிகளுடன் வரலாம்

published on அக்டோபர் 21, 2024 06:46 pm by shreyash for ஸ்கோடா kylaq

  • 54 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கைலாக் அதிக பிரீமியம் வசதிகளைக் கொண்டிருப்பதோடு, பிரெஸ்ஸாவை விட அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும்.

ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியாவுக்கான முதல் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யான ஸ்கோடா கைலாக் நவம்பர் 6 ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக உள்ளது. கைலாக், மாருதி பிரெஸ்ஸாவுடன் நேரடியாக போட்டியிடும். இந்தியா அதிகமாக விற்பனையாகும் சப்காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றாக பிரெஸ்ஸா உள்ளது. பிரெஸ்ஸாவை விட ஸ்கோடா கைலாக் காரில் கிடைக்கப்போகும் சிறப்பான 5 விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

பெரிய 10 இன்ச் டச் ஸ்கிரீன்

Skoda Kushaq 10-inch touchscreen

மற்ற ஸ்கோடா மாடல்களான ஸ்லாவியா மற்றும் குஷாக் போன்றவற்றில் இருப்பதைப் போலவே ஸ்கோடா கைலாக் 10-இன்ச் டச் ஸ்கிரீனை கொண்டிருக்கும். இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கிறது. மறுபுறம் மாருதி பிரெஸ்ஸா -வில் சிறிய 9-இன்ச் டச் ஸ்கிரீன் மட்டுமே இருக்கிறது. இது வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியை வழங்குகிறது.

ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே

Skoda Slavia digital driver's display

மாருதி பிரெஸ்ஸாவில் உள்ள அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் போலல்லாமல் ஸ்கோடா கைலாக் 8 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுடன் வர வாய்ப்புள்ளது. இந்த பிரிவில் உள்ள போட்டியாளர்களான டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO மற்றும் கியா சோனெட் ஆகியவை சற்று பெரிய டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (10.25 இன்ச் அளவு) கொண்டுள்ளன.

மேலும் பார்க்க: 2024 நிஸான் மேக்னைட்: எது சிறந்த வேரியன்ட்?

பவர்டு மற்றும் வென்டிலேட்டட் சீட்கள்

Skoda Kushaq sunroof

ஸ்கோடா சமீபத்தில் வரவிருக்கும் கைலாக் எஸ்யூவி பற்றிய சில தகவல்களை வெளியிட்டது. வென்டிலேஷன் செயல்பாடுகளுடன் 6-வே பவர்டு முன் சீட்களை இந்த கார் பெறும் என்பதை ஸ்கோடா உறுதிப்படுத்தியுள்ளது. ஒப்பிடுகையில் மாருதி பிரெஸ்ஸா மேனுவல் சீட் அட்ஜெஸ்ட்மென்ட்டை கொண்டுள்ளது மேலும் வென்டிலேட்டட் முன் சீட்கள் இல்லை.

ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள்

Skoda Kushaq six airbags

மற்ற ஸ்கோடா கார்களை போலவே கைலாக் அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் உடன் வரும். பிரெஸ்ஸா -வுடன் ஒப்பிடுகையில், அதன் டாப்-ஸ்பெக் ZXi பிளஸ் வேரியன்ட் உடன் 6 ஏர்பேக்குகளை மட்டுமே கிடைக்கும். மற்ற டிரிம்கள் டூயல் முன்பக்க ஏர்பேக்குகளுடன் மட்டுமே வருகின்றன.

டர்போ-பெட்ரோல் இன்ஜின்

Skoda sub-4m SUV rear spied

ஸ்கோடா கைலாக்கை 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கும். இது 115 PS மற்றும் 178 Nm 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

மாருதி பிரெஸ்ஸாவை 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கொடுக்கிறது. இது 103 PS மற்றும் 137 Nm அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரெஸ்ஸா லோவர் பவர் அவுட்புட் உடன் (88 PS/121.5 Nm) உடன் ஆப்ஷனலான CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனையும் பெறுகிறது, மேலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, சோனெட், மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுடனும் போட்டியிடும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: பிரெஸ்ஸா ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Skoda kylaq

2 கருத்துகள்
1
V
vijender singh
Oct 23, 2024, 1:39:46 PM

What will be Standard average.

Read More...
    பதில்
    Write a Reply
    1
    R
    rajesh masurkar
    Oct 23, 2024, 9:46:05 AM

    Still no info about the mileage in kylaq

    Read More...
      பதில்
      Write a Reply

      explore similar கார்கள்

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trending எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      • க்யா syros
        க்யா syros
        Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • டாடா சீர்ரா
        டாடா சீர்ரா
        Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • பிஒய்டி sealion 7
        பிஒய்டி sealion 7
        Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • டாடா பன்ச் 2025
        டாடா பன்ச் 2025
        Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • நிசான் பாட்ரோல்
        நிசான் பாட்ரோல்
        Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
        அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      ×
      We need your சிட்டி to customize your experience