ஃபோக்ஸ்வேகன் புதிய எஸ்யூவி -வுக்கு டெரா என்று பெயரிட்டுள்ளது: இந்தியாவுக்கு வருமா ?
published on நவ 05, 2024 09:49 pm by dipan for வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
- 86 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோக்ஸ்வேகன் டெரா, MQB A0 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டைகுன் போன்ற 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் -ல் உள்ள நிறைய விஷயங்கள் இதிலும் இடம் பெறவுள்ளது.
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விரைவில் புதிய சப்-4 மீ மீட்டர் எஸ்யூவியான கைலாக் -கை அறிமுகப்படுத்த உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இருப்பினும் ஃபோக்ஸ்வேகனின் உடன்பிறப்பு நிறுவனமான ஸ்கோடா கைலாக்கை அடிப்படையாகக் கொண்ட இதேபோன்ற சப்காம்பாக்ட் எஸ்யூவியைக் கொண்டுவருமா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்னர் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களின் அறிமுகத்தின்போதே டைகுன் மற்றும் விர்ட்டஸ் கார்களின் வருகை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இப்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உலகளாவிய சந்தைக்காக ஒரு புதிய எஸ்யூவியை (சப்-4m பிரசாதமாக) ஒன்றை உருவாக்கி வருகிறது. மேலும் அந்த காருக்கு டெரா என்று பெயரிடப்பட்டுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ஆகவே இதன் மூலமாக இந்த புதிய கார் ஆனது இந்திய சந்தையில் வரவிருக்கும் டெரா -வை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது. அதற்கான காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்:
ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் டெராவை கட்டாயமாக அறிமுகம் செய்யும் என்பதற்கு முக்கியமான சில காரணங்கள்
ஃபோக்ஸ்வேகன் நிறைய காரணங்களுக்காக டெராவை இந்தியாவிற்கு கொண்டு வருவதை பரிசீலிக்க வாய்ப்புள்ளது. முதலாவதாக ஃபோக்ஸ்வேகன் -ன் உடன்பிறப்பான ஸ்கோடா அதன் கைலாக் சப்-4மீ எஸ்யூவி -யை விரைவில் உலகளவில் வெளியிடத் தயாராகி வருகிறது. அந்த கார் 2025-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு போலோ -வை விற்பனையில் இருந்து நிறுதியது அதன் பின்னர் ஃபோக்ஸ்வேகன் எந்த 4மீ கார்களையும் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. ஆகவே போலோ -வை போலவே புதிய 4மீ கார் நிறைய வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடும்.
ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் இடையேயான பிளாட்ஃபார்ம்-பகிர்வு நன்மையே டெராவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான மற்றொரு காரணமாக இருக்கலாம். கைலாக் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்பாக இருப்பதால் நாட்டில் தற்போதுள்ள விர்ட்டஸ், ஸ்லாவியா, குஷாக் மற்றும் டைகுன் போன்ற ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் மாடல்களின் அதே கட்டமைப்பு தளம், இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸை பயன்படுத்துகிறது. இந்த பகிரப்பட்ட டெக்னாலஜி ஃபோக்ஸ்வேகன் டெராவை உள்நாட்டில் அறிமுகப்படுத்துவதை எளிதாக்கும் மற்றும் அதன் தயாரிப்பு செலவு குறைவாகவே இருக்கும். ஏனெனில் இந்த கார்களின் கட்டமைப்பு தளம் மற்றும் பவர்டிரெய்ன் குறைந்த விலையில் தயாரிக்கப்படும். டெராவை இந்தியாவிற்குக் கொண்டுவருவது இந்தியாவில் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும். மேலும் இது ஃபோக்ஸ்வேகன்,ஸ்கோடா கூட்டமைப்பு சப்-4m எஸ்யூவி கட்டமைப்பு தளத்தில் செய்த முதலீட்டை ஈடு செய்யும் வகையிலும் இருக்கும்.
மேலும் படிக்க: நாளை வெளியாகவுள்ளது புதிய ஸ்கோடா கைலாக் கார்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ரூ.10 லட்சத்திற்கும் குறைவான தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டெரா இந்தியாவில் மிகவும் விலை குறைவாக கிடைக்கும் காராக இருக்கும். இது ஃபோக்ஸ்வேகன் கார்களை வாடிக்கையாளர்கள் எளிமையாக அணுகக்கூடியதாக மாற்றும். ஃபோக்ஸ்வேகன் போலோ விட்டுச் சென்ற வெற்றிடத்தையும் இது நிரப்பக்கூடும். பிரபலமான சப்-4 மீ மாடலாக இருந்த போலோ -வின் விற்பனை 2022 ஆண்டில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான ஃபோக்ஸ்வேகனின் சப் -4 மீ இடம் காலியாகவே உள்ளது.
உலகளவில் ஃபோக்ஸ்வேகன் EV -களில் இருந்து சற்று பின்வாங்குவது போல் தெரிகிறது. இப்போது இன்டர்னல்-கம்பஸ்டன் கார்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இந்தியாவிலும் ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் தாமதமாகி வருகிறது. இந்தியாவில் இன்டர்னல்-கம்பஸ்டன் வாகனங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான ஃபோக்ஸ்வேகனின் உத்தியின் ஒரு பகுதியாக டெரா இருக்கலாம். டெராவை இந்தியாவிற்குக் கொண்டு வருவது எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு முழுமையாக மாறுவதற்கு முன் இன்டர்னல்-கம்பஸ்டன் வாகனங்களை மூலமாக ஃபோக்ஸ்வேகனை பிரபலப்படுத்த உதவும்.
இந்தியாவில் கடைசியாக புதிய அறிமுகமாக 2022 ஆம் ஆண்டு விர்ட்டஸ் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சிறிய அப்டேட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் வரிசையைப் புதுப்பிக்கவும் இந்திய சந்தையில் ஆர்வத்தைத் தூண்டவும் டெரா உதவும்.
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால் அதற்கு முன் ஃபோக்ஸ்வேகன் டெரா எஸ்யூவி பற்றி இங்கே மேலும் தெரிந்து கொள்வோம்.
ஃபோக்ஸ்வேகன் டெரா பற்றிய கூடுதல் தகவல்கள்
ஃபோக்ஸ்வேகன் டெரா காரின் டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன் மூலமாக வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டெரா பற்றிய ஒரு சில தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதன் முன் வடிவமைப்பு புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுனை போலவே ஹெட்லைட் செட்டப், கிரில் மற்றும் பம்பர் போலவே இருக்கும் என்பது தெரிய வருகிறது. இருப்பினும் டிகுவான் போலல்லாமல், டெரா கிரில் வழியாக பவர்டு எல்இடி லைட்டை கொண்டிருக்காது.
இது MQB A0 என்ற கட்டமைப்பு தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போலோ, டி-கிராஸ் மற்றும் நிவஸ் போன்ற வெளிநாடுகளில் கிடைக்கும் மாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது டி-கிராஸுக்கு கீழே (இந்தியாவில் டைகுன் என்று அழைக்கப்படும்) விற்பனை செய்யப்படலாம்.
பிரேசில்-ஸ்பெக் டெரா 115 PS மற்றும் 178 Nm வழங்கும் டைகுன் மற்றும் விர்ட்டஸின் லோவர் வேரியன்ட்களை போலவே, 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் கொடுக்கப்படலாம். இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஆன் ரோடு விலை