நாளை அறிமுகமாகவுள்ள Volkswagen Taigun மற்றும் Virtus சவுண்ட் எடிஷன் கார்களின் டீஸர் வெளியானது

published on நவ 20, 2023 07:09 pm by rohit for வோல்க்ஸ்வேகன் டைய்கன்

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஸ்பெஷல் எடிஷன் மூலமாக இரண்டு ஃபோக்ஸ்வேகன் கார்களின் நான்-GT வேரியன்ட்களுக்கு சப்வூஃபர் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவை கொடுக்கப்படலாம்.

Volkswagen Virtus and Taigun Sound edition

  • ‘சவுண்ட்’ எடிஷன் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட எஸ்யூவியின் புதிய கான்செப்ட் ஸ்பெஷல் எடிஷனாகும்.

  • GT எட்ஜ் டிரெயில் பதிப்பில் காணப்படுவது போல் இரண்டு கார்களும் ஸ்பெஷல் எடிஷன் டீக்கால்களை பெறலாம்.

  • இயந்திர மாற்றங்கள் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை; ஃபோக்ஸ்வேகன் டூயோ 1-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது.

ஜிடி எட்ஜ் டிரெயில் பதிப்பை அறிமுகப்படுத்திய சிறிது நேரத்திலேயே ஃபோக்ஸ்வாகன் டைகுன், ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனம் இப்போது சிறிய எஸ்யூவியின் மற்றொரு ஸ்பெஷல் எடிஷனின் டீஸரை வெளியிட்டுள்ளது. 'சவுண்ட​' எடிஷன் என்று அழைக்கப்படும், இது ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் உடன் நாளை அறிமுகப்படுத்தப்படும்.

டீஸர் எதைப் பற்றியது ?

பெயரின் அடிப்படையில், ஃபோக்ஸ்வேகன் அதன் காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் செடான் கார்களின் சிறப்பு எடிஷன்களுடன் சில ஆடியோ அல்லது மியூஸிக் சிஸ்டத்தில்-குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைக்கு, டைகுன் மற்றும் விர்ட்டஸின் ஜிடி பிளஸ் மற்றும் ஜிடி எட்ஜ் வேரியன்ட்கள் மட்டுமே சப்வூஃபர் மற்றும் ஆம்ளிபையரை பெறுகின்றன, இது டைனமிக் லைனின் கீழ் உள்ள ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு கொடுக்கப்படலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

இது ஒரு ஸ்பெஷல் எடிஷன் என்பதால், டைகுன் இன் GT எட்ஜ் டிரெயில் பதிப்பில் நாம் பார்த்தது போன்ற சில சிறப்பு டீக்கால்கள் போன்ற சில ஒப்பனை மாற்றங்களையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். ஃபோக்ஸ்வேகன் ஆண்டின் முதல் பாதியில் வெளியிட்ட மாடல்களின் தொகுப்பிலிருந்து இந்த சிறப்பு எடிஷன் வேறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மற்ற கார் தயாரிப்பாளர்கள் காஸ்மெட்டிக் மாற்றங்களை மையமாக கொண்டு சிறப்பு எடிஷன்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தினாலும், ஃபோக்ஸ்வாகன் மட்டுமே ஒலியை மையமாக வைத்த பதிப்பை வெளியிடுகிறது.

ஹூட்டின் கீழ் எந்த மாற்றமும் இல்லை

Volkswagen 1-litre turbo-petrol engine

இந்த எடிஷன் எந்த இயந்திர மாற்றங்களையும் கொண்டிருக்காது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸ் இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகின்றன: 1-லிட்டர் 3-சிலிண்டர் யூனிட் (115 PS/178 Nm) மற்றும் மற்றொன்று 1.5-லிட்டர் இன்ஜின் (150 PS/250 Nm). இரண்டு இன்ஜின்களிலும் 6-ஸ்பீடு மேனுவல் ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது. முந்தையதை ஆப்ஷனலான  6-ஸ்பீடு AT உடன் கிடைக்கும், பிந்தையது 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை பெறுகிறது.

மேலும் படிக்க: ரூ. 20 லட்சத்தில் உள்ள இந்த 5 SUVகள் டிரைவருக்கான முழுமையான டிஜிட்டல் டிஸ்பிளேவை பெறுகின்றன

போட்டியாளர்கள் மற்றும் விலை

Volkswagen Taigun and Virtus

ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் -க்கு நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்: ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா, மற்றும் மாருதி சியாஸ். மறுபுறம், ஃபோக்ஸ்வேகன் டைகுன் -க்கு போட்டியாக கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர் மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்கள் இருக்கும்.

செடான் விலை ரூ.11.48 லட்சம் முதல் ரூ.19.29 லட்சம் வரையிலும், ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி ரூ.11.62 லட்சம் முதல் ரூ.19.76 லட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது வோல்க்ஸ்வேகன் டைய்கன்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience