2024 நவம்பரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
published on அக்டோபர் 31, 2024 05:15 pm by anonymous for மாருதி டிசையர்
- 118 Views
- ஒரு கருத்தை எழுதுக
வரும் நவம்பர் மாதம் நெக்ஸானுக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள ஸ்கோடாவின் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாருதி அதன் பிரபலமான செடானின் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான பெரும்பாலான புதிய கார்கள் பிரீமியம் அல்லது பெர்ஃபாமன்ஸ் சார்ந்த பிரிவில் இருந்தவையாகும். மேலும் பெரும்பாலானவை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டவை. பட்ஜெட் மார்கெட்டில் விற்பனைக்கு வந்த நிஸான் மேக்னைட் ஒரு முக்கிய காராக இருந்தது. மேலும் பண்டிகை கால விற்பனையை அதிகரிக்க கார் நிறுவனங்கள் பிரபலமான மாடல்களின் ஸ்பெஷல் பதிப்புகளையும் அறிமுகப்படுத்தின.
இருப்பினும் அடுத்த மாதம் சற்று வித்தியாசமாக இருக்கும். 2024 நவம்பர் மாதம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் கார்களின் விவரங்கள் இங்கே.
2024 மாருதி சுஸூகி டிசையர்
வெளியீட்டு தேதி: நவம்பர் 11, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
மாருதி புதிய தலைமுறை டிசையர் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. நவம்பர் 4, 2024 அன்று மாருதி 2024 மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். நவம்பர் 11 அன்று விலை விவரங்கள் வெளியிடப்படும். அப்டேட்டட் வடிவமைப்புடன் நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் ஏற்கனவே பலமுறை சோதனை செய்யப்படும்போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.
புதிய டிசைரின் கேபின் 2024 ஸ்விஃப்ட்டை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இன்ட்டீரியர் தீம் வேறுபட்டிருக்கலாம். அடுத்த ஜென் டிசையரில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கலாம். டிசையர் புதிய 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 82 PS மற்றும் 112 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா, மற்றும் டாடா டிகோர் போன்ற செடான்களுக்கு போட்டியாக இருக்கும்
ஸ்கோடா கைலாக்
உலகளாவிய அறிமுக தேதி: நவம்பர் 6, 2024 (இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை)
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஸ்கோடா தனது சப்-4எம் எஸ்யூவி -யான கைலாக்கை நவம்பர் 6 ஆம் தேதி உலகளவில் வெளியிட உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய வெளியீட்டை எதிர்பார்க்கலாம். ஸ்பை ஷாட்களில் இருந்து, அதன் வடிவமைப்பு குஷாக் போலவே இருக்கும், ஸ்பிளிட்டட் ஹெட்லைட்கள், சிக்னேச்சர் பட்டர்ஃபிளை கிரில் மற்றும் ரேப்பரவுண்ட் டெயில் லைட்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாகவே ஸ்கோடா இந்த காரிலுள்ள சில வசதிகள், அளவுகள் மற்றும் இன்ஜின் விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளது. கைலாக்கில் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் இருக்கைகள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும். இது 1.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், 115 PS மற்றும் 178 Nm டார்க்கை அவுட்புட்டை கொடுக்கும். மேலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். விலை ரூ. 8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Skoda Kylaq காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 சிறப்பான வசதிகள்
2024 எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ 40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
எம்ஜி நிறுவனம் நவம்பரில் குளோஸ்டர் எஸ்யூவியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல், பெரிய கிரில், வெர்டிகல் எல்இடி ஹெட்லைட்கள், கனெக்டட் LED டிஆர்எல்கள் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட பம்பர்களுடன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் வரும்.
உள்ளே பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய வடிவிலான சென்டர் கன்சோலுடன் கூடிய அதிக பிரீமியம் கேபினை நீங்கள் எதிர்பார்க்கலாம். அப்டேட்டட் குளோஸ்டர் இரண்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து வழங்கப்படும். இதில் 2-லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட யூனிட் 161 PS மற்றும் 374 Nm மற்றும் 216 PS மற்றும் 479 Nm அவுட்புட்டை கொடுக்கும் அதிக சக்திவாய்ந்த 2-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு யூனிட் ஆகியவை அடங்கும். விலை ரூ.40 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் போன்ற 7 இருக்கைகள் கொண்ட மற்ற எஸ்யூவிகள் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனருடன் போட்டியிடும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.1.5 கோடி
நீங்கள் அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட செடானை தேடினால் மெர்சிடிஸ்-பென்ஸ் அடுத்த மாதம் AMG C 63 S E ஃபெர்பாமன்ஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிளக்-இன் ஹைப்ரிட் மாடலாகும், இது 2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகிறது. இவை ஒன்றாக 680 PS மற்றும் 1,020 Nm டார்க்கை கொடுக்கின்றன.
C 63 S E பெர்ஃபாமன்ஸ் நவீன தொழில்நுட்பத்துடன் ஒரு ஆடம்பரமான கேபினை கொண்டுள்ளது. 12.3-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்டு முன் வரிசை இருக்கைகள் ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்களாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள மாடல்களில் எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றி கீழே உள்ள கமென்ட் பகுதியில் உங்கள் கருத்துகளை பகிரவும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful