ஜனவரி 2025 முதல் மாருதி கார்களின் விலை உயரவுள்ளது
published on டிசம்பர் 09, 2024 07:09 pm by gajanan for மாருதி ஸ்விப்ட்
- 60 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி தனது கார்களுக்கு நான்கு சதவீதம் வரை விலை உயர்வை அமல்படுத்த உள்ளது. இதில் அரீனா மற்றும் நெக்ஸா ஆகிய இரண்டு கார் மாடல்கள் அடங்கும்
மாருதி நிறுவனம் தனது கார்களின் விலையை ஜனவரி 2025 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி விலை உயர்வு நான்கு சதவிகிதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த விலை உயர்வானது மாடல்களைப் பொறுத்து மாறுபடும். அரீனா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்கப்படும் 17 மாடல்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த விலை உயர்வு?
தயாரிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பை எதிர்கொள்ள வரவிருக்கும் விலை உயர்வு அவசியம் என்று மாருதி தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு ஆல்டோ K10, டிசையர், ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா, ஃப்ரோன்க்ஸ், எர்டிகா, பலேனோ, வேகன் R, செலிரியோ, XL6, இக்னிஸ், ஈகோ, ஜிம்னி, கிராண்ட் விட்டாரா, S-பிரஸ்ஸோ, சியாஸ் மற்றும் இன்விக்டோ உள்ளிட்ட பல்வேறு மாடல்களின் விற்பனையை பாதிக்க கூடும். இந்த மாடல்களில் பலவும் CNG வேரியன்ட் ஆப்ஷனை வழங்குகின்றன.
மாருதியின் தற்போதைய வேரியன்ட்களின் விலை விவரங்களை பாருங்கள்:
அரீனாவின் வேரியன்ட்கள்
மாருதி சுஸூகி அரீனா |
விலை (எக்ஸ்-ஷோரூம்) |
ஆல்டோ K10 |
ரூ.3.99 லட்சத்தில் இருந்து ரூ.5.96 லட்சம் வரை |
S-பிரஸ்ஸோ |
ரூ.4.27 லட்சத்தில் இருந்து ரூ.6.12 லட்சம் வரை |
வேகன் R |
ரூ.5.54 லட்சத்தில் இருந்து ரூ.7.33 லட்சம் வரை |
செலிரியோ |
ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.7.05 லட்சம் வரை |
ஸ்விஃப்ட் |
ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் வரை |
டிசையர் |
ரூ.6.79 லட்சத்தில் இருந்து ரூ.10.14 லட்சம் வரை (அறிமுக விலை) |
பிரெஸ்ஸா |
ரூ.8.34 லட்சத்தில் இருந்து ரூ.14.14 லட்சம் வரை |
எர்டிகா |
ரூ.8.69 லட்சத்தில் இருந்து ரூ.13.03 லட்சம் வரை |
இகோ |
ரூ.5.32 லட்சத்தில் இருந்து ரூ.6.58 லட்சம் வரை |
மேலும் படிக்க: புதிய ஹோண்டா அமேஸ் மற்றும் புதிய மாருதி டிசையர் விவரக்குறிப்புகளின் ஒப்பீடு
நெக்ஸா வேரியன்ட்கள்
மாருதி நெக்ஸா கார்கள் |
விலை (எக்ஸ்-ஷோரூம்) |
ஃபிரான்க்ஸ் |
ரூ.7.52 லட்சத்தில் இருந்து ரூ.13.04 லட்சம் வரை |
ஜிம்னி |
ரூ.12.74 லட்சத்தில் இருந்து ரூ.14.95 லட்சம் வரை |
இக்னிஸ் |
ரூ.5.84 லட்சத்தில் இருந்து ரூ.8.06 லட்சம் வரை |
பலேனோ |
ரூ.6.66 லட்சத்தில் இருந்து ரூ.9.83 லட்சம் வரை |
சியாஸ் |
ரூ.9.40 லட்சத்தில் இருந்து ரூ.12.30 லட்சம் வரை |
XL6 |
ரூ.11.61 லட்சத்தில் இருந்து ரூ.14.77 லட்சம் வரை |
கிராண்ட் விட்டாரா |
ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.20.09 லட்சம் வரை |
இன்விக்டோ |
ரூ.25.21 லட்சத்தில் இருந்து ரூ.28.92 லட்சம் வரை |
மாருதி வெகுஜன சந்தையில் அனைத்து பட்ஜெட் பிரிவு கார்களையும் வழங்குகிறது. அதன் மிகவும் மலிவு மாடலான ஆல்டோ K10, ரூ. 3.99 லட்சத்தில் தொடங்குகிறது, மேலும் அதன் விலையுயர்ந்த கார் ஆன இன்விக்டோ ரூ. 28.92 லட்சம் வரை செல்கிறது.
2025 மற்றும் அதற்கு அப்பால் மாருதியின் திட்டங்கள் என்ன?
வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல், மாருதி அதன் இ-விட்டாரா (முன்பு eVX ) புரொடக்ஷன் வெர்ஷன் உட்பட பல புதிய மாடல்களை காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எலக்ட்ரிக் கார்களின் சந்தையில் புதிய பிராண்டின் நுழைவைக் குறிக்கிறது. இ-விட்டாரா 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வர உள்ளது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT