• English
    • Login / Register

    ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்கள்

    ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் க்காக ஜனவரி 21, 2025 08:07 pm அன்று anonymous ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 45 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    கார் ஆர்வலர்களிடையே மிகப் பிரபலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தது. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    Skoda at auto expo 2025

    ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் அதிகமாக கவனத்தை ஈர்த்த ஏற்படுத்திய நிறுவனங்களில் ஒன்று ஸ்கோடா. சூப்பர்ப் காரின் அறிமுகத்துடன், இந்திய கார் ஆர்வலர்களிடையே பெரும் ரசிகர்களை கொண்டிருந்த ஒரு செடானையும் காட்சிப்படுத்தியது. கூடுதலாக ஸ்கோடா கைலாக் மற்றும் குஷாக் ஆகியவற்றின் கான்செப்ட்டையும் காட்சிப்படுத்தியது. 2025 ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா -வின் பங்களிப்ப்பை இங்கே பார்க்கலாம்.

    ஸ்கோடா ஆக்டேவியா vRS

    Skoda Octavia vRS at Auto Expo 2025

    ஸ்கோடா 2025 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை ஆக்டேவியா விஆர்எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் முன்னர் விற்கப்பட்ட ஆக்டேவியா vRS உடன் ஒப்பிடும்போது இந்த ஜென் மாடல் ஸ்போர்ட்டியர் ஸ்டைலிங்கை கொண்டுள்ளது. அதன் பிளாக்-அவுட் கிரில், அலாய் வீல்கள் மற்றும் பூட் லிப் ஸ்பாய்லர் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. இது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 265 PS மற்றும் 370 Nm அவுட்புட்டை கொடுக்கும். மேலும் எலக்ட்ரானிக் முறையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கோடா இந்த ஆண்டு இறுதிக்குள் 2025 ஆக்டேவியா vRS காரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் விலை ரூ.45 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம் .

    ஸ்கோடா கோடியாக்

    Skoda Kodiaq at Auto Expo 2025

    அடுத்த தலைமுறை ஸ்கோடா கோடியாக் ஆட்டோ எக்ஸ்போவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வடிவமைப்பில் குறைவாகவே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கேபின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய மாடலை விட அதிக பிரீமியம் மற்றும் உயர்தரமாக உள்ளது. இது உலகளவில் பல இன்ஜின் ஆப்ஷன்களுடன்  வழங்கப்பட்டாலும், இந்தியா-ஸ்பெக் 2025 கோடியாக் அதே 190 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். அதன் விலை ரூ. 45 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்கோடா சூப்பர்ப்

    Skoda Superb at Auto Expo 2025

    இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்கோடா நிறுவனம் பிரீமியம் செடானான சூப்பர் காரின் நான்காவது தலைமுறையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் சூப்பர்ப் போலவே இது முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும். 2025 சூப்பர்ப் ஆனது 204 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் முன்-சக்கர டிரைவ் டிரெய்னுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

    மேலும் பார்க்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து கஸ்டம் கார்கள்

    ஸ்கோடா எல்ரோக்

    Skoda Elroq at Auto Expo 2025

    ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா எல்ரோக் எலக்ட்ரிக் எஸ்யூவி EV -யை காட்சிக்கு வைத்தது. இது ஸ்கோடா -வின் நவீன வடிவமைப்பு மொழியைக் காட்சிப்படுத்துகிறது. எல்ரோக் -ன் அறிமுகம் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இது இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டால், அதன் விலை ரூ. 50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். மேலும் இது ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் BYD அட்டோ 3 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும். உலகளவில் விற்பனை செய்யப்படும் எல்ரோக் பல பவர்டிரெய்ன் விருப்பங்களுடன், 581 கிமீ வரை உரிமை கோரப்பட்ட வரம்பை கொண்டதாக இருக்கும்.

    ஸ்கோடா விஷன் 7S கான்செப்ட்

    Skoda Vision 7S Front

    2022 ஆம் ஆண்டு உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் முதல்முறையாக ஸ்கோடா விஷன் 7S கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது அதன் தசை தோற்றத்துடன் தனித்து நிற்கிறது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட குறைந்தபட்ச உட்புறத்தைக் கொண்டுள்ளது. விஷன் 7S கான்செப்ட் 89 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. WLTP கிளைம்டு 600 கி.மீ வரம்பை வழங்குகிறது. இது உற்பத்திக்கு செல்லாது. ஆனால் வரவிருக்கும் EV களுக்கான ஸ்கோடாவின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டுவதற்காக மட்டுமே உள்ளது.

    ஸ்கோடா கைலாக் மற்றும் குஷாக்

    Skoda Kylaq Front Left Side

    2025 ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா தற்போது விற்பனையில் உள்ள கார்களில் கைலாக் மற்றும் குஷாக் கார்களை காட்சிப்படுத்தியது. கைலாக் என்பது ஸ்கோடா வழங்கும் சப்-4மீ எஸ்யூவி ஆகும். இது சமீபத்தில் அதன் 5-ஸ்டார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் ரேட்டிங் காரணமாக தலைப்புச் செய்தியில் இடம்பெற்றது. இதன் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருந்தது. குஷாக் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும். குஷாக்கின் விலை ரூ.10.89 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.18.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. ரூ. 7.89 லட்சத்தில் தொடங்கி ரூ. 14.40 லட்சம் வரை உள்ள கைலாக் கார் மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சோனெட் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். 

    2025 ஆட்டோ எக்ஸ்போவில் எந்த ஸ்கோடா மாடல்கள் உங்கள் கண்களை அதிகம் கவர்ந்தன என்பதை கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    இதே போன்ற கட்டுரையை வாசிக்க:  ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த எஸ்யூவிகள்

    was this article helpful ?

    Write your Comment on Skoda ஆக்டிவா ஆர்எஸ்

    explore similar கார்கள்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience