• English
    • Login / Register

    2025 ஏப்ரலில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாப் 5 கார்கள்

    anonymous ஆல் மார்ச் 31, 2025 08:26 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 25 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    பெரும்பாலான வெளியீடுகள் வெகுஜன-சந்தை கார் தயாரிப்பாளர்களிடம் இருந்து இருக்கும். ஒரு ஜெர்மன் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் செடானும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Upcoming cars in April 2025

    இந்த மார்ச் மாதம் ஆடம்பர கார் உற்பத்தியாளர்களிடம் இருந்து நிறைய அறிமுகங்களை பார்த்தோம். மேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் வெகுஜன சந்தை பிராண்டுகளில் இருந்து பல எஸ்யூவி -கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மாருதியின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் கியாவின் புதுப்பிக்கப்பட்ட எம்பிவி வெளியீடு ஆகியவை அடங்கும். 2025 ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் டார் 5 கார்களின் விவரங்களை இங்கே பார்ப்போம்.

    மாருதி இ விட்டாரா

    Maruti e Vitara

    எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: 2025 ஏப்ரல் நடுப்பகுதி

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட பிறகு மாருதி இ விட்டாரா ஆரம்பத்தில் மார்ச் மாதமே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அதன் அறிமுகம் ஏப்ரலில் இருக்கும் என தெரிகிறது. எலக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள சில டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஏப்ரல் மாத இறுதிக்குள் இ விட்டாரா அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

    3 பீஸ் எல்இடி டிஆர்எல்கள், ஏரோ-ஃப்ரெண்ட்லி 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் எல்இடி டெயில் லைட்டுகள் போன்ற நவீன எலமென்ட்களுடன் கூடிய மஸ்குலர் வடிவமைப்பை இது கொண்டுள்ளது. இ விட்டரா 48.8 kWh மற்றும் 61.1 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். இது 500 கி.மீ -க்கு கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம்.

    2025 கியா கேரன்ஸ்

    2025 Kia Carens facelift

    எதிர்பார்க்கப்படும் வெளிப்படுத்தும் தேதி: ஏப்ரல் 25, 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    2025 கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் ஏப்ரல் இறுதிக்குள் இந்தியாவில் வெளியிடப்படும். ஜூன் மாதத்துக்குள் விலை விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிட்லைஃப் அப்டேட்டின் ஒரு பகுதியாக வெளிப்புறத்தில் கேரன்ஸ் ஆனது புதிய வடிவிலான எல்இடி டிஆர்எல் -கள், புதிய முன்பக்க பம்பர், புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய எல்இடி டெயில் லைட்ஸ் ஆகிய மாற்றங்களை பெறலாம். உட்புறம் இன்னும் படம் பிடிக்கப்படவில்லை என்றாலும், புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2025 கேரன்ஸ் இரண்டு பெட்ரோல் பவர்டிரெய்ன்கள் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் தேர்வு உட்பட அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடரும். அறிமுகமானதும் 2025 கேரன்ஸ் ஆனது மாருதி எர்டிகா, மாருதி XL6, மற்றும் டொயோட்டா ரூமியான் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். மேலும் போது மாருதி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஆகியவற்றுகு மாற்றாக இருக்கும்.

    மேலும் படிக்க: இவி மற்றூம் சிஎன்ஜி | நீண்ட காலத்துக்கான இயங்கும் செலவுக்கான சோதனை | டாடா டியாகோ

    ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன்

    Volkswagen Tiguan R-Line side profile

    உறுதிப்படுத்தப்பட்ட வெளியீட்டு தேதி: ஏப்ரல் 14, 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    ஃபோக்ஸ்வேகன் ஆனது அடுத்த மாதம் ஏப்ரல் 14, 2025 புதிய தலைமுறை டிகுவான் காரின் ஸ்போர்ட்டியர் 'ஆர்-லைன்' பதிப்பை அறிமுகம் செய்யவுள்ளது.இது முற்றிலும் பில்ட்-அப் செய்யப்பட்ட யூனிட்டாக (CBU) இந்தியாவிற்கு வரும், மேலும் இதன் விலை ரூ. 50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்கப்பட்ட முந்தைய தலைமுறை  டிகுவான் ஆர்-லைன் உடன் ஒப்பிடும்போது இது 'ஆர்' பேட்ஜ்களுடன் பிளாக் ஆக்ஸென்ட்களுடன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பைப் பெறும். 

    உள்ளே கேபின் ரெட் ஆக்ஸென்ட்களுடன் ஆல் பிளாக் தீம் உள்ளது. இது நிலையான மாடலில் இருந்து இதை வேறுபடுத்தி காட்டுகிறது. டிகுவான் ஆர்-லைன் காரில் 190 PS/320 Nm 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    2025 ஸ்கோடா கோடியாக்

    2025 Skoda Kodiaq

    எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 16, 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    ஸ்கோடா நிறுவனம் ஏப்ரல் இறுதிக்குள் இந்தியாவில் 2025 கோடியாக் அறிமுகம் இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இதன் ரூ. 40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை கோடியாக்கின் வடிவமைப்பு சிறிய அப்டேட்களை கொண்டிருந்தாலும், கேபின் புதிய செட்டப் மற்றும் புதிய வசதிகளுடன் முழுமையான மாற்றங்களுடன் இது வரும். இதில் 13-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, புதுப்பிக்கப்பட்ட ஏசி கண்ட்ரோல் டயல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவையும் கிடைக்கும். 204 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 7-ஸ்பீடு DCT மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    2025 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ்

    2025 BMW 2 Series

    எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 20, 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    2024 அக்டோபரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய தலைமுறை 2 சீரிஸ் காரை உலகளவில் வெளியிட்டது. இப்போது இந்த என்ட்ரி-லெவல் செடான் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பில் புதிய கிட்னி கிரில், புதுப்பிக்கப்பட்ட 18-இன்ச் அலாய் வீல்கள் (உலகளவில் 19-இன்ச் வரை அப்டேட் செய்யக்கூடியவை) மற்றும் புதிய எல்இடி டெயில்லைட் செட்டப் ஆகிய மாற்றங்கள் உள்ளன. புதுப்பிக்கப்பட்ட 2 சீரிஸ் காரின் நீளம் மற்றும் உயரம் ஆகியவை 20 மி.மீ மற்றும் 25 மி.மீ வரை அதிகரித்துள்ளது.

    உள்ளே இது 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பவர்டு முன் வரிசை இருக்கைகள் போன்ற வசதிகளுடன் புதிய கேபினை கொண்டிருக்கும். 2025 BMW 2 சீரிஸ் சர்வதேச சந்தைகளில் பல இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஆனால் இந்தியா-ஸ்பெக் மாடல் தற்போதைய 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள அப்படியே தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலே குறிப்பிட்டுள்ள மாடல்களில் நீங்கள் எதை மிகவும் எதிர்பார்க்கிறீர்கள், கீழே உள்ள கமென்ட் பகுதியில் உங்கள் கருத்துகளை ஷேர் செய்து கொள்ளுங்கள்,

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Maruti இ விட்டாரா

    explore similar கார்கள்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience