- + 5நிறங்கள்
- + 23படங்கள்
- வீடியோஸ்
டொயோட்டா ரூமியன்
டொயோட்டா ரூமியன் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1462 சிசி |
பவர் | 86.63 - 101.64 பிஹச்பி |
torque | 121.5 Nm - 136.8 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 7 |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
எரிபொருள் | பெட்ரோல் / சிஎன்ஜி |
- touchscreen
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- பின்புறம் seat armrest
- tumble fold இருக்கைகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பின்பக்க கேமரா
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

ரூமியன் சமீபகால மேம்பாடு
டொயோட்டா ரூமியான் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
டொயோட்டா ரூமியானின் லிமிடெட் எடிஷன் வெளியிடப்பட்டது. இது அனைத்து வேரியன்ட்களுக்கும் ரூ.20,608 மதிப்புள்ள ஆக்ஸசரீஸ்கள் கிடைக்கும். இது அக்டோபர் இறுதி வரை மட்டுமே கிடைக்கும்.
டொயோட்டா ரூமியான் காரின் விலை என்ன?
டொயோட்டா ரூமியானின் பேஸ்-ஸ்பெக் எஸ் வேரியன்ட் ரூ.10.44 லட்சத்தில் தொடங்கி டாப்-ஸ்பெக் வி வேரியன்ட்டுக்கு ரூ.13.73 லட்சம் வரை இருக்கிறது.
டொயோட்டா ரூமியான் காரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
ரூமியான் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது: S, G, மற்றும் V. CNG ஆப்ஷன் என்ட்ரி லெவல் S வேரியன்ட்டில் கிடைக்கும்.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
ரூமியானின் மிட்-ஸ்பெக் ஜி வேரியன்ட் பணத்துக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது. ரூ.1.60 லட்சத்தில் தொடங்கி, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கொண்ட 7 இன்ச் டச்ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் ஏசி, 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல்கள் மற்றும் சில கனெக்டட் கார் வசதிகள் போன்ற வசதிகளை வழங்குகிறது. பாதுகாப்புக்காக இது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. G வேரியன்ட் மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் எடிஷனில் கிடைக்கும்.
ரூமியான் என்ன வசதிகளைப் பெறுகிறது?
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச் ஸ்கிரீன், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் ஆகியவை டொயோட்டா ரூமியானில் உள்ளன. இது புஷ்-பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்களும் உள்ளன.
எவ்வளவு விசாலமானது?
ரூமியான் இரண்டு மற்றும் மூன்று நபர்களுக்கு வசதியான இருக்கைகளை வழங்குகிறது. இரண்டாவது வரிசையில் நடுத்தர பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட் இல்லை. போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் உள்ளது, மேலும் இருக்கைகள் மிகவும் ஆதரவாக உள்ளன. மூன்றாவது வரிசையில் உள்ளே நுழைவதும் மற்றும் வெளியேறுவதும் வசதியானது. கடைசி வரிசையில் தொடைக்கான ஆதரவு கொஞ்சம் குறையலாம்.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
ரூமியான் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (103 PS/137 Nm), 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG வேரியன்ட், குறைக்கப்பட்ட வெளியீடு (88 PS மற்றும் 121.5 Nm) உடன் 5-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா ரூமியானின் மைலேஜ் என்ன?
ரூமியானுக்கான கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் இங்கே:
-
பெட்ரோல் MT: 20.51 கிமீ/லி
-
பெட்ரோல் AT: 20.11 கிமீ/லி
-
சிஎன்ஜி: 26.11 கிமீ/கிலோ
டொயோட்டா ரூமியான் எவ்வளவு பாதுகாப்பானது?
ரூமியானில் பாதுகாப்புக்காக இரண்டு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX மவுண்ட்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் மேலும் 6 ஏர்பேக்குகள், முன் ஃபாக் லைட்ஸ் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா போன்ற வசதிகள் கூடுதலாக கிடைக்கின்றன.
பாதுகாப்பு மதிப்பெண்ணை பொறுத்தவரையில் BNCAP இன்னும் கிராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை. ஆனால் அதன் மாருதி பதிப்பு 2019 -ல் குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையில் 3 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.
எத்தனை வண்ண ஆப்ஷன்கள் உள்ளன?
இது 5 மோனோடோன் வண்ணங்களில் வருகிறது: ஸ்பங்கி ப்ளூ, ரஸ்டிக் பிரவுன், ஐகானிக் கிரே, கஃபே ஒயிட் மற்றும் எண்டைஸிங் சில்வர்.
குறிப்பாக ரூமியானின் ரஸ்டிக் பிரெளவுன் நிறத்தை நாங்கள் விரும்புகிறோம்.
நீங்கள் டொயோட்டா ரூமியான் காரை வாங்க வேண்டுமா?
டொயோட்டா ரூமியான் ஒரு MPV என்ற வகையில் இட வசதி மற்றும் நடைமுறையில் சமரசம் செய்து கொள்ளவில்லை. இது ஒரு வசதியான இருக்கை அனுபவத்தை வழங்குகிறது. மேலும் ஆப்ஷனலான 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு நல்ல மற்றும் மென்மையான ஓட்டும் தன்மையை வழங்குகிறது. ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில் உங்கள் குடும்பத்திற்கு வசதியான 7-சீட்டர் MPVயை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் டொயோட்டா ரூமியான் காரை தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
டொயோட்டா ரூமியான் மாருதி எர்டிகா மற்றும் கியா கேரன்ஸ் உடன் போட்டியிடுகிறது. மேலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மற்றும் மாருதி இன்விக்டோ போன்ற பெரிய MPV களுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கிறது.
மேல் விற்பனை ரூமியன் எஸ்(பேஸ் மாடல்)1462 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்more than 2 months waiting | ₹10.54 லட்சம்* | ||
மேல் விற்பனை ரூமியன் எஸ் சி.என்.ஜி.1462 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 26.11 கிமீ / கிலோmore than 2 months waiting | ₹11.49 லட்சம்* | ||
ரூமியன் g1462 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்more than 2 months waiting | ₹11.70 லட்சம்* | ||
ரூமியன் எஸ் சிவிடி ரீஇன்ஃபோர்ஸ்டு1462 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.11 கேஎம்பிஎல்more than 2 months waiting | ₹12.04 லட்சம்* | ||