• English
  • Login / Register

காத்திருப்பு காலம் கூடுதலாக இருப்பதால் Toyota Rumion CNG -க்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

published on செப் 25, 2023 06:58 pm by rohit for டொயோட்டா rumion

  • 61 Views
  • ஒரு கருத்தை எழுதுக

"அதிகப்படியான தேவையை" எதிர்கொள்வதால் எஸ்யூவி - க்கான காத்திருப்பு காலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரூமியான் CNG -வேரியன்ட்டின் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

Toyota Rumion

  • டொயோட்டா நிறுவனம் மாருதி எர்டிகாவை அடிப்படையாகக் கொண்ட ரூமியான் காரை 2023 ஆகஸ்ட்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

  • MPV மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: S, G, மற்றும் V

  • டொயோட்டாவால் ரூமியான் காரில் 88PS 1.5 லிட்டர் பெட்ரோல்+ CNG பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது.

  • மேனுவல் AC, கீலெஸ் என்ட்ரி மற்றும் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

  • பெட்ரோல் கார் வேரியன்ட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

2023 ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகாவிலிருந்து பெறப்பட்ட டொயோட்டா ரூமியான் மூன்று வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது: ‌S, G மற்றும் V. ஒரு கிராஸ்-பேட்ஜ் செய்யப்பட்ட தயாரிப்பு என்பதால், MPV ஆப்ஷனலான CNG கிட் உட்பட அதே பவர்டிரெயின் ஆப்ஷன்களை பெற்றது. இருப்பினும், அதிக தேவை காரணமாக ரூமியனின் CNG கார் வேரியன்ட்க்கான  முன்பதிவுகளை ஏற்றுக் கொள்வதை டொயோட்டா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அந்த வேரியன்ட்டில், பெட்ரோல் கார் வேரியன்ட்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் குறித்து டொயோட்டாவின் அறிக்கை

"நாங்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய டொயோட்டா ரூமியனை அறிமுகப்படுத்தினோம், மேலும் B-MPV பிரிவில் டொயோட்டா வாகனத்திற்காக காத்திருந்த எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளோம். புதிய டொயோட்டா ரூமியான் காருக்கான விசாரணைகள் மற்றும் ஆரோக்கியமான முன்பதிவுகள் அதிகரித்து வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தேவை எங்கள் எதிர்பார்ப்புகளை மீறியுள்ளது, இதன் விளைவாக, குறிப்பாக CNG விருப்பத்திற்கு  டெலிவரிக்கான காலம் நீண்டதாக உள்ளது. நீண்ட காத்திருப்பு காலம் காரணமாக வாடிக்கையாளர் அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமே CNG ஆப்ஷனின் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் கார் வேரியன்ட்களுக்கான முன்பதிவுகளை நாங்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறோம்". என டொயோட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூமியான் CNG பற்றிய சுருக்கம்

Toyota Rumion

 டொயோட்டா, இரு டிரிம்களில் கிடைக்கும் அதனுடைய மாருதி நிறுவனத்தின் கார் போலல்லாமல், ரூமியான் CNG -யை ஒரே ஒரு பேஸ்-ஸ்பெக் S வேரியன்ட்டில் வழங்குகிறது, . ரூமியான் S CNG காரில் ஹாலோஜன் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் LED  டெயில்லைட்டுகள், ஃபுல் வீல் கவர்கள், மேனுவல் AC, 4 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் உள்ளன.

டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் (இரண்டாவது வரிசை மட்டும்), எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றால் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது. இந்த CNG MPVயின் விலை ரூ.11.24 லட்சம் ஆகும் மற்றும் அதன் மாருதி நிறுவனத்தின் மாடலான மாருதி எர்டிகா CNG -யை தவிர இதற்கு வேறு நேரடி போட்டியாளர்கள் இல்லை.

மேலும் படிக்க: டொயோட்டா கேம்ரி vs ஃபார்ச்சூனர் லெஜண்டர்: வேறுபாடுகள் மற்றும் தனித்துவமான அம்சங்கள் விரிவாக

பவர்டிரெயின் கண்ணோட்டம்

Toyota Rumion CNG Bookings Halted Temporarily In Light Of Soaring Waiting Periods

டொயோட்டா ரூமியான் S CNG வழக்கமான வேரியன்ட்களைப் போலவே  அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, ஆனால் இங்கே இந்த யூனிட் பசுமையான எரிபொருளுடன் 88PS மற்றும் 121.5Nm அவுட்புட்டை உருவாக்குகிறது . இது 5-ஸ்பீடு MT உடன் வருகிறது மற்றும் 26.11km/kg மைலேஜை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களில், இது 103PS மற்றும் 137Nm அவுட்புட்டை வழங்குகிறது, மேலும் ஆப்ஷனலான 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனையும் பெறுகிறது.

கடந்த காலங்களிலும் நடந்த இதே போன்ற சம்பவம்

டொயோட்டா தனது MPV கார் ஒன்றின் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்துவது இது முதல் முறை அல்ல. 2022 ஆகஸ்டில், டொயோட்டா டீசல் மூலம் இயங்கும் இன்னோவா கிரிஸ்ட்டாவுக்கான ஆர்டர்களை எடுப்பதை நிறுத்தியது, 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் MPV -யின் ஃபேஸ்லிஃப்டட் பதிப்பை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து அவற்றை மீண்டும் திறந்தது.

மேலும் படிக்க: டொயோட்டா ஃபிரான்க்ஸ்"  2024 மே மாதத்தில்  வெளிவரக்கூடும்!

மேலும் படிக்க: ரூமியான் ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Toyota rumion

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • எம்ஜி m9
    எம்ஜி m9
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டிரிபர் 2025
    ரெனால்ட் டிரிபர் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf9
    vinfast vf9
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience