Maruti Ertiga மற்றும் Toyota Rumion மற்றும் Maruti XL6: பிப்ரவரி 2024 மாத காத்திருப்பு கால விவரங்கள் ஒப்பீடு
published on பிப்ரவரி 20, 2024 02:54 pm by rohit for மாருதி எர்டிகா
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த மூன்றில், டொயோட்டா-பேட்ஜ் கொண்ட MPV -யான ரூமியான் காருக்கு கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் 6 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் குறைவான விலையில் விசாலமான MPV -யை சந்தையில் வாங்குவதாக இருந்தால், நீங்கள் மாருதி எர்டிகா, டொயோட்டா ரூமியான் மற்றும் மாருதி XL6 ஆகிய கார்களை பரிசீலிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.டொயோட்டா ரூமியான் கார் மாருதி எர்டிகாவின் ரீபேட்ஜ் பதிப்பாகும் (இரண்டும் 7-சீட்டர்கள்), XL6 மட்டுமே 6 இருக்கைகள் கொண்ட அமைப்பில் (நடுவரிசையில் கேப்டன் இருக்கைகளுடன்) வருகின்றது. பிப்ரவரி 2024 மாதத்தில், மூன்றில் எதை விரைவாக வீட்டிற்கு ஓட்டிச் செல்ல முடியும்? இங்கே கண்டுபிடிக்கலாம்.
நகரம் |
மாருதி எர்டிகா |
டொயோட்டா ரூமியான் |
மாருதி XL6 |
புது டெல்லி |
2 மாதங்கள் |
8 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
பெங்களூரு |
2 மாதங்கள் |
4-6 மாதங்கள் |
1 வாரம் |
மும்பை |
2 மாதங்கள் |
14 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
ஹைதராபாத் |
1.5-2 மாதங்கள் |
10 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
புனே |
2 மாதங்கள் |
8-10 மாதங்கள் |
0.5-1 மாதம் |
சென்னை |
2 மாதங்கள் |
12 மாதங்கள் |
0.5-1 மாதம் |
ஜெய்ப்பூர் |
2.5 மாதங்கள் |
8 மாதங்கள் |
0.5 மாதங்கள் |
அகமதாபாத் |
1-2 மாதங்கள் |
6-10 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
குருகிராம் |
2 மாதங்கள் |
10 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
லக்னோ |
2.5 மாதங்கள் |
8 மாதங்கள் |
1 மாதம் |
கொல்கத்தா |
2 மாதங்கள் |
10 மாதங்கள் |
1 மாதம் |
தானே |
2.5 மாதங்கள் |
12-15 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
சூரத் |
2 மாதங்கள் |
12 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
காசியாபாத் |
2 மாதங்கள் |
10 மாதங்கள் |
0.5 மாதங்கள் |
சண்டிகர் |
1.5-2 மாதங்கள் |
10-12 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
கோயம்புத்தூர் |
2 மாதங்கள் |
8 மாதங்கள் |
1 மாதம் |
பாட்னா |
1-1.5 மாதங்கள் |
12 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
ஃபரிதாபாத் |
2 மாதங்கள் |
10-14 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
இந்தூர் |
2.5 மாதங்கள் |
15 மாதங்கள் |
1 மாதம் |
நொய்டா |
1-2 மாதங்கள் |
6-12 மாதங்கள் |
1 மாதம் |
முக்கியமான விவரங்கள்
-
மாருதி எர்டிகா காருக்கான காத்திருப்பு காலம் சராசரியாக இரண்டு மாதங்கள் வரை உள்ளது, அதிகபட்சமாக ஜெய்ப்பூர், லக்னோ, தானே மற்றும் இந்தூரில் 2.5 மாதங்கள் வரை உள்ளது.
-
மாருதி XL6 காரில் ஒரு நல்ல கேபின் நிறைய வசதிகளுடன் கிடைக்கின்றது. குருகிராம் மற்றும் சூரத்தில் இந்த கார் எளிதாக கிடைக்கிறது. ஹைதராபாத்தில்MPV -யின் டெலிவரியை பெற மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இது சராசரியாக இந்த காருக்கு ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
-
டொயோட்டா ரூமியான் காருக்கு மும்பை, சென்னை, தானே, சூரத், பாட்னா மற்றும் இந்தூரில் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கின்றது. மூன்று கார்களில் அதிக காத்திருக்க வேண்டியது இந்த காருக்குதான். பெங்களூரில் மிகக் குறைந்த காத்திருப்பு நேரம் (4 மாதங்கள்) உள்ளது.
மேலும் படிக்க: எர்டிகா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful