2024 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையாகியுள்ள முதல் 10 கார்களின் விவரங்கள் இங்கே
published on மார்ச் 11, 2024 03:59 pm by rohit for மாருதி வாகன் ஆர்
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
பட்டியலில் உள்ள இரண்டு மாடல்கள் இயர் ஓவர் இயர் எனப்படும் ஓர் ஆண்டு (YoY) வளர்ச்சியில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளன.
2024 பிப்ரவரி மாதத்தில் முதல் 10 சிறந்த விற்பனையான கார்கள் பட்டியலில் வழக்கம் போலவே மாருதி நிறுவனத்தின் மாடல்களே ஆதிக்கம் செலுத்தின. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற கிரீடத்தை மாருதி வேகன் R பெற்றுள்ளது. டாடா நெக்ஸான் பல இடங்கள் கீழே இறங்கியுள்ளது. பல கார்கள் நேர்மறையான ஓர் ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தன இரண்டு கார்களுக்கு 100 சதவிகிதத்திற்கும் மேலாக மேம்படுத்தப்பட்டது. பிப்ரவரி 2024 விற்பனையில் ஒவ்வொரு மாடலும் எவ்வாறு செயல்பட்டது என்பதைப் இங்கே பார்க்கலாம்:
மாடல் |
பிப்ரவரி 2024 |
பிப்ரவரி 2023 |
ஜனவரி 2024 |
மாருதி வேகன் R |
19412 |
16889 |
17756 |
டாடா பன்ச் |
18438 |
11169 |
17978 |
மாருதி பலேனோ |
17517 |
18592 |
19630 |
மாருதி டிசையர் |
15837 |
16798 |
16773 |
மாருதி பிரெஸ்ஸா |
15765 |
15787 |
15303 |
மாருதி எர்டிகா |
15519 |
6472 |
14632 |
ஹூண்டாய் கிரெட்டா |
15276 |
10421 |
13212 |
மஹிந்திரா ஸ்கார்பியோ |
15051 |
6950 |
14293 |
டாடா நெக்ஸான் |
14395 |
13914 |
17182 |
மாருதி ஃப்ரான்க்ஸ் |
14168 |
– |
13643 |
முக்கிய விவரங்கள்
-
மாருதி வேகன் R 19500 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. பிப்ரவரி 2024 விற்பனையில் அதிகம் விற்பனையான காராக இருந்தது. அதன் ஆண்டுக்கு ஆண்டு (YoY) எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
கிட்டத்தட்ட 18500 யூனிட்கள் விற்பனையாகி, டாடா பன்ச் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதன் மந்த் ஓவர் மந்த் எனப்படும் மாதந்தோறும் (MoM) விற்பனை கிட்டத்தட்ட 500 யூனிட்கள் அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்களில் பன்ச் EV -யின் புதிய விற்பனை டேட்டாக்களும் அடங்கும்
-
மாருதி பலேனோ 17500 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையானது. பன்ச் எஸ்யூவி -யை விட 1000-ஒற்றைப்படை யூனிட்கள் மட்டுமே பின்தங்கி இருந்தது. பிப்ரவரி விற்பனையில் அதன் YoY மற்றும் MoM விற்பனை குறைந்துள்ளது.
-
பலேனோவைத் தொடர்ந்து ஐந்து மாடல்கள் இருந்தன அதாவது மாருதி டிசையர், மாருதி பிரெஸ்ஸா, மாருதி எர்டிகா, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ மொத்த விற்பனை 15000 முதல் 16000 யூனிட்கள் வரை உள்ளது. அவற்றில் எர்டிகா மற்றும் ஸ்கார்பியோ தான் அவர்களின் ஓர் ஆண்டுக்கான எண்ணிக்கை சதவிகிதம் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஸ்கார்பியோவின் விற்பனை புள்ளிவிவரம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
-
டாடா நெக்ஸான் மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் ஆகிய இரண்டும் மொத்த விற்பனை 14000 முதல் 14500 யூனிட்களுக்கு இடையே பதிவு செய்யப்பட்டது. டாடா எஸ்யூவி -யின் ஓர் ஆண்டுக்கான விற்பனை எண்ணிக்கை 3 சதவீதம் உயர்ந்தாலும் அதன் MoM விற்பனை கிட்டத்தட்ட 3000 யூனிட்கள் குறைந்துள்ளது. நெக்ஸான் -ன் விற்பனையில் டாடா நெக்ஸான் இவி -யின் விற்பனை அடங்கும்.
மேலும் படிக்க: பிப்ரவரி 2024 இல் மாருதி சுஸூகி டாடா மற்றும் ஹூண்டாய் சிறந்த விற்பனையை கொண்ட கார் பிராண்டுகள்
மேலும் படிக்க: வேகன் R ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful