இந்த ஜூன் மாதம் ரூ.15 லட்சத்துக்கு குறைவான MPV -யை வாங்க முடிவு செய்துள்ளீர்களா ? காரை வீட்டுக்கு கொண்டு வர 5 மாதங்கள் வரை காத்திருக ்க வேண்டியிருக்கும்
published on ஜூன் 10, 2024 05:18 pm by samarth for மாருதி எர்டிகா
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதியின் 6-சீட்டர் எம்பிவி -யான XL6 எர்டிகாவை விட விரைவில் கிடைக்கும். அதேவேளையில் ட்ரைபர் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.
நீங்கள் பட்ஜெட்டில் குடும்பக் காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால் MPV -கள் உங்கள் தேர்வாக இருக்கலாம். 15 லட்சத்திற்குள் மாருதி எர்டிகா, கியா கேரன்ஸ், டொயோட்டா ரூமியான், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மாருதி XL6 என பல்வேறு வகையான MPV ஆப்ஷன்கள் சந்தையில் உள்ளன. இந்த ஜூன் மாதத்தில் அவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க திட்டமிட்டால் வீட்டிற்கு கொண்டு செல்ல நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது இங்கே:
நகரம் |
மாருதி எர்டிகா |
மாருதி XL6 |
கியா கேரன்ஸ் |
டொயோட்டா ரூமியான் |
ரெனால்ட் ட்ரைபர் |
புது டெல்லி |
4.5-5 மாதங்கள் |
1 மாதம் |
3 மாதங்கள் |
3-4 மாதங்கள் |
0.5 மாதம் |
பெங்களூரு |
1-2 மாதங்கள் |
1 வாரம் |
2 மாதங்கள் |
1 மாதம் |
0.5 மாதம் |
மும்பை |
1-2 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
1 மாதம் |
2 மாதங்கள் |
1 மாதம் |
ஹைதராபாத் |
1-2 மாதங்கள் |
1 மாதம் |
1-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
1 மாதம் |
புனே |
1-2 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
3 மாதங்கள் |
3-4 மாதங்கள் |
1 மாதம் |
சென்னை |
1-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
1 மாதம் |
3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
ஜெய்ப்பூர் |
1.5-2 மாதங்கள் |
1 மாதம் |
1-2 மாதங்கள் |
1 மாதம் |
காத்திருக்க தேவையில்லை |
அகமதாபாத் |
2 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
1-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
குருகிராம் |
1-2 மாதங்கள் |
1 மாதம் |
1 மாதம் |
1-2 மாதங்கள் |
1 மாதம் |
லக்னோ |
2 மாதங்கள் |
1 மாதம் |
3 மாதங்கள் |
2 மாதங்கள் |
0.5 மாதம் |
கொல்கத்தா |
1-2 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
3-4 மாதங்கள் |
1 மாதம் |
தானே |
1-2 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
1 மாதம் |
3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
சூரத் |
2.5 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
1 மாதம் |
3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
காசியாபாத் |
2 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
0.5 மாதம் |
சண்டிகர் |
2.5 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
3 மாதங்கள் |
1 மாதம் |
கோயம்புத்தூர் |
1.5-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
2 மாதங்கள் |
4 மாதங்கள் |
1 மாதம் |
பாட்னா |
1-2 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
1 மாதம் |
0.5 மாதம் |
ஃபரிதாபாத் |
2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
4 மாதங்கள் |
1 மாதம் |
இந்தூர் |
1-2 மாதங்கள் |
1 மாதம் |
1 மாதம் |
3-5 மாதங்கள் |
0.5 மாதம் |
நொய்டா |
1 மாதம் |
1 மாதம் |
0.5 மாதம் |
2 மாதங்கள் |
1 மாதம் |
மேலும் பார்க்க: 2024 ஜூன் மாதத்தில் மாருதி நெக்ஸா கார்களுக்கான சலுகைகள் - ரூ.74000 வரை ஆஃபர்களை பெறுங்கள்
முக்கிய விவரங்கள்
-
மாருதி எர்டிகா -வுக்கு சராசரியாக 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் புது டெல்லியில் இது 5 மாதங்கள் வரை நீள்கிறது.
-
6 இருக்கைகள் கொண்ட எம்பிவி -யான மாருதி XL6 பெரும்பாலான நகரங்களில் 1 மாதத்திற்குள் கிடைக்கும். சூரத் மற்றும் அகமதாபாத்தில் XL6 -ல் காத்திருக்க தேவையில்லை.
-
டொயோட்டா ரூமியான் காருக்கு எர்டிகாவை விட நீண்ட சராசரி காத்திருப்பு காலம் உள்ளது. புது டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் இந்தூரில் 3-4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். பெங்களூரு, பாட்னா மற்றும் ஜெய்ப்பூரில் புதிய MPV -யை ஒரு மாதத்தில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
-
ரெனால்ட் ட்ரைபர் பெரும்பாலான நகரங்களில் 1 மாதத்திற்குள் கிடைக்கும். சென்னை, ஜெய்ப்பூர், சூரத் மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களில் ரெனால்ட் எம்பிவியை காத்திருப்பின்றி வீட்டுக்கு ஓட்டிச் செல்லலாம்.
-
நீங்கள் புது டெல்லி, புனே மற்றும் லக்னோவை சேர்ந்தவர்களாக இருந்தால் புதிய கியா கேரன்ஸ் காரை பெற அதிகபட்சம் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். மும்பை, சென்னை, குருகிராம், தானே, சூரத் மற்றும் இந்தூர் போன்ற நகரங்களில் ஒரு மாதம் வரை காத்திருக்கும் நேரம் உள்ளது.
புதிய காருக்கான சரியான காத்திருப்பு நேரம் என்பது வேரியன்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறம் மற்றும் உங்கள் அருகிலுள்ள டீலர்ஷிப்பில் உள்ள ஸ்டாக் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் படிக்க: எர்டிகா ஆன் ரோடு விலை