- + 24படங்கள்
vinfast vf9
vf9 சமீபகால மேம்பாடு
Vinfast VF 9 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
வின்ஃபாஸ்ட் VF 9 பாரத் குளோபல் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 -ல் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
VF 9 எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை என்னவாக இருக்கும்?
வின்ஃபாஸ்ட் இதன் விலை ரூ.65 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்).
VF 9 இன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?
இது 6- மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளில் கிடைக்கும்.
VF 9 உடன் என்ன வசதிகள் வழங்கப்படுகின்றன?
இது ஒரு பெரிய 15.6 இன்ச் டச் ஸ்கிரீன், 8 இன்ச் பின்புற திரை, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 14-ஸ்பீக்கர் வரையிலான சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் வருகிறது. VF 9 ஆனது ஆம்பியன்ட் லைட்ஸ், வென்டிலேஷன் மற்றும் ஹீட்டட் செயல்பாடுகளுடன் பவர்டு முன் இருக்கைகள் மற்றும் பெரிய ஃபிக்ஸ்டு கிளாஸ் ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது.
VF 9 எலக்ட்ரிக் எஸ்யூவியின் கிளைம்டு ரேஞ்ச் என்ன?
இந்த ஃபிளாக்ஷிப் வின்ஃபாஸ்ட் எஸ்யூவி ஆனது 123 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது. இது 531 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் கொண்டதாக இருக்கும். இது 408 PS மற்றும் 620 Nm அவுட்புட்டை கொடுக்கும் டூயல் மோட்டார் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) தரத்துடன் வருகிறது. DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி இதன் பேட்டரியை 35 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்ய முடியும்.
VinFast VF 9 எலக்ட்ரிக் எஸ்யூவி எவ்வளவு பாதுகாப்பானது?
பாதுகாப்புக்காக இது 11 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) முழு தொகுப்பு ஆகியவற்றைப் கொண்டுள்ளது.
VinFast VF 9 -க்கு மாற்று என்னவாக இருக்கும்?
VF 9 -ன் ஆனது கியா EV9, BMW iX மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி போன்றவற்றுக்கு இணையாக உள்ளது.
vinfast vf9 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுvf9 | Rs.65 லட்சம்* |

vinfast vf9 படங்கள்
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது