டொயோட்டா கார்களில் புதிய லிமிடெட் எடிஷன்கள் அறிமுகம்
published on நவ 13, 2024 09:02 pm by dipan for டொயோட்டா hyryder
- 304 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோட்டா ரூமியான், டெய்சர் மற்றும் கிளான்ஸா ஆகிய கார்களுக்கான தள்ளுபடிகள் டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே கிடைக்கும்.
-
டொயோட்டா நிறுவனம் ஹைரைடர், டெய்சர் மற்றும் கிளான்ஸா ஆகியவற்றிற்கான லிமிடெட் எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தனியாக ரூ. 50,817 வரையிலான ஆக்ஸசரீஸ்களை வாங்கிக் கொள்ளலாம்.
-
ஃபுளோர் மேட்கள், கிரில் கார்னிஷ் மற்றும் குரோம் டிரிம்கள் போன்றவை ஆக்ஸசரீஸ்களாக கிடைக்கும்.
-
டொயோட்டா ரூமியான், டெய்சர் மற்றும் கிளான்ஸா ஆகியற்றுக்கு ஆண்டு இறுதி ஆஃபர்களாக ரூ. 1 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.
-
வாடிக்கையாளர்கள் லிமிடெட் எடிஷன் அல்லது ஆண்டு இறுதி ஆஃபர்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஆனால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து பெற முடியாது.
-
ஆக்ஸசரி பேக்குகள் கொண்ட மாடல்களில் இயந்திர ரீதியாக மாற்றங்கள் எதுவும் இல்லை.
டொயோட்டா நிறுவனம் ஹைரைடர், டெய்சர், மற்றும் கிளான்ஸா ஆகிய கார்களுக்கு ஒரு லிமிடெட் பதிப்பை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களில் ரூ.50,817 வரை மதிப்புள்ள ஆக்சஸெரீகளும் கிடைக்கும். டொயோட்டா ரூமியான் (CNG வேரியன்ட்கள் தவிர), டெய்சர் மற்றும் கிளான்ஸா ஆகிய கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் கூடுதலாக ஆண்டு இறுதி ஆஃபர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் லிமிடெட் எடிஷன் மாடல்கள் அல்லது ஆண்டு இறுதி தள்ளுபடிகள் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். லிமிடெட் பதிப்பில் வழங்கப்படும் ஆக்ஸசரீஸ்களை இங்கே பார்க்கலாம்:
மாடல் |
டொயோட்டா கிளான்ஸா |
டொயோட்டா டெய்சர் |
டொயோட்டா ஹைரைடர் |
ஆக்ஸசரீஸ்கள் கிடைக்கும் வேரியன்ட்கள் |
அனைத்து வேரியன்ட்களிலும் |
E, S, மற்றும் S பிளஸ் (பெட்ரோல் வேரியன்ட்கள் மட்டும்) |
மைல்டு-ஹைபிரிட் எடிஷன்: S, G மற்றும் V வேரியன்ட்கள் ஸ்ட்ராங் ஹைபிரிட் எடிஷன்: G மற்றும் V வேரியன்ட்கள் மட்டுமே |
ஆக்ஸசரீஸ்களின் பட்டியல் |
|
|
|
விலை |
ரூ.17,381 |
ரூ.17,931 |
ரூ.50,817 |
இந்த ஆக்சஸரீஸ்கள் எதுவும் இலவசமாக கிடைக்காது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட காரின் குறிப்பிட்ட வேரியன்ட்டின் விலையில் இந்த ஆக்சஸெரீகளுக்கு தனியாக நீங்கள் பணம் செலுத்த வேண்டும். ஆக்சஸரி பேக்குகளுடன் வரும் கார்களில் இயந்திர ரீதியாக எந்த மாற்றங்களும் இல்லை.
டொயோட்டா டெய்சர் மற்றும் கிளான்ஸா வாடிக்கையாளர்கள் ஆக்ஸசரீஸ் பேக்குகளில் அல்லது ஆண்டு இறுதி சலுகை இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஆனால் இரண்டையும் ஒன்று சேர்த்து பெற முடியாது. பெட்ரோல் வேரியன்ட்களை தேர்ந்தெடுக்கும் போது டொயோட்டா ரூமியான் ஹைரைடர் ஆண்டு இறுதி சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மாடலுக்கும் சரியான தொகையை டொயோட்டா குறிப்பிடவில்லை என்றாலும் இந்த சலுகைகள் ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிச் சலுகைகள் டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே கிடைக்கும்.
மேலும் படிக்க: அக்டோபர் 2024 மாதம் மாருதி, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டொயோட்டா கிளான்ஸா:
-
1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (90 PS/113 Nm) 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்).
-
5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.2-லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன் (77 PS/98.5 Nm).
டொயோட்டா டெய்சர்:
-
5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT உடன் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (90 PS/113 Nm).
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (100 PS/148 Nm) 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்.
-
5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.2-லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன் (77 PS/98.5 Nm).
டொயோட்டா ரூமியான்:
-
1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (103 PS/137 Nm) 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்.
-
5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.5-லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன் (88 PS/121.5 Nm)
டொயோட்டா ஹைரைடர்:
-
1.5-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜின் (103 PS/137 Nm) 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன். இது ஃபிரன்ட்-வீல்- டிரைவ் (FWD) அல்லது ஆல்-வீல்-டிரைவ் (AWD மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே) கிடைக்கிறது.
-
e-CVT (எலக்ட்ரானிக் கன்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் 1.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைபிரிட் இன்ஜின் (116 PS/122 Nm)
-
1.5-லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி இன்ஜின் (88 PS/121.5 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டொயோட்டா கிளான்ஸாவின் விலை ரூ.6.86 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ளது. இது மாருதி பலேனோ, ஹூண்டாய் i20, மற்றும் டாடா ஆல்ட்ரோஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.
டொயோட்டா டெய்சரின் விலை ரூ.7.74 லட்சம் முதல் ரூ.13.08 லட்சம் வரை உள்ளது. இது நேரடியாக மாருதி ஃபிரான்க்ஸ் உடன் போட்டியிடுகிறது. மேலும் ஸ்கோடா கைலாக், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற சப்-4m எஸ்யூவி -களுக்கும் போட்டியாக இருக்கும்.
டொயோட்டா ரூமியோனின் விலை ரூ.10.44 லட்சம் முதல் ரூ.13.73 லட்சம் வரை உள்ளது. இது மாருதி எர்டிகா, மாருதி XL6 மற்றும் கியா கேரன்ஸ் போன்ற MPV களுக்கு போட்டியாக உள்ளது.
டொயோட்டா ஹைரைடரின் விலை ரூ.11.14 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை உள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மற்ற சப்காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கிறது.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful