Tata Curvv: காத்திருக்கும் அளவுக்கு தகுதியானதா? இல்லை அதன் போட்டியாளர்களில் ஒன்றை இப்போது வாங்கலாமா ?
published on மார்ச் 13, 2024 04:33 pm by rohit for டாடா கர்வ்
- 30 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா நிறுவனத்தின் கர்வ்வ் எனப்படும் கூபே ஸ்டைல் எஸ்யூவி இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய கார் சந்தையில் ஏற்கனவே கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் விரைவில் டாடா கர்வ்வ் புதிதாக இணையவுள்ளது. ஏற்கெனவே இந்த பிரிவில் உள்ள பல கார்கள் மிகச் சிறப்பான வசதிகளை கொண்டுள்ளன. ஆனாலும் கர்வ்வ் அதற்கென சில தனித்துவமான சில வசதிகளை கொண்டுள்ளது. கூபே ஸ்டைல் மற்றும் இந்த தனித்துவமான வசதிகளால் கர்வ்வ் காருக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே அடுத்த சில மாதங்களில் நீங்கள் ஒரு புதிய காம்பாக்ட் எஸ்யூவி -யை வாங்க திட்டமிட்டால் புதிய டாடா கர்வ்வ் -க்காக காத்திருப்பது சரியானதாக இருக்குமா ? இல்லை காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ள அதன் போட்டியாளர்களில் ஏதாவது ஒரு காரை வாங்கலாமா ? இங்கே கண்டுபிடிக்கலாம்.
மாடல் |
விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) |
டாடா கர்வ்வ் |
ரூ 11 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரை (எதிர்பார்க்கப்படுகிறது) |
ஹூண்டாய் கிரெட்டா |
ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை |
கியா செல்டோஸ் |
ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை |
மாருதி கிராண்ட் விட்டாரா/ டொயோட்டா ஹைரைடர் |
ரூ 10.80 லட்சம் முதல் ரூ 20.09 லட்சம்/ ரூ 11.14 லட்சம் முதல் ரூ 20.19 லட்சம் வரை |
ஸ்கோடா குஷாக்/ ஃபோக்ஸ்வேகன் டைகுன் |
ரூ.11.89 லட்சம் முதல் ரூ.20.49 லட்சம்/ரூ.11.70 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை |
ஹோண்டா எலிவேட் |
ரூ.11.58 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் |
எம்ஜி ஆஸ்டர் |
ரூ.9.98 லட்சம் முதல் ரூ.17.89 லட்சம் |
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் |
ரூ.9.99 லட்சம் முதல் ரூ.14.05 லட்சம் |
2024 ஹூண்டாய் கிரெட்டா: புதிய வசதிகள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் மல்டிபிள் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் கொண்டது
சமீபத்தில் ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு புதிய வெளிப்புறத்தையும் புதுப்பிக்கப்பட்ட டேஷ்போர்டு வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது 10.25 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற புதிய வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்பை பொறுத்தவரை புதிய கிரெட்டாவில் 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற கூடுதல் வசதிகளைப் பெற்றுள்ளது. இது எஸ்யூவி -யின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துகிறது. ஃபேஸ்லிஃப்ட்டுடன் ஹூண்டாய் கிரெட்டாவில் 1.5-லிட்டர் யூனிட் (160 PS/253 Nm) டர்போ-பெட்ரோல் பவர்ட்ரெயின் ஆப்ஷன் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் மட்டுமே கிடைக்கும். மற்ற இன்ஜின் ஆப்ஷன்களில் 1.5-லிட்டர் நேச்சுரல்-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5-லிட்டர் டீசல் ஆகியவை அடங்கும். இவை இரண்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுடன் கிடைக்கின்றன.
கியா செல்டோஸ்: சிறப்பான தோற்றம், நிறைய வசதிகள் மற்றும் மல்டிபிள் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் கொண்டது
2023 ஆம் ஆண்டின் மத்தியில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிப்ட் வெளியானது. கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்பட்ட தோற்றம் மற்றும் iMT கியர்பாக்ஸ் (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் ) உட்பட பல டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் புதிய 1.5-லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் ஆப்ஷனுடன் கிடைக்கும். செல்டோஸ் மிட்லைஃப் அப்டேட் உடன் 10.25-இன்ச் ஆ;ல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளைக் கொண்ட லெவல்-2 ADAS உடன் பொருத்துவதன் மூலம் எஸ்யூவி -யின் பாதுகாப்பு தொகுப்பை கியா மேம்படுத்தியுள்ளது. கிரெட்டாவை போலவே செல்டோஸ் குறைந்த சக்திவாய்ந்த பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் வழங்குகிறது.
மாருதி கிராண்ட் விட்டாரா/ டொயோட்டா ஹைரைடர்: ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷன் மற்றும் செக்மென்ட்-சிறந்த மைலேஜ் கொண்டது
இந்த பிரிவில் மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகிய இரண்டு எஸ்யூவிகள் மட்டுமே ஒரு ஸ்ட்ராங்-ஹைபிரிட் பவர்டிரெயின் ஆப்ஷனுடன் கிடைக்கும். இரண்டு எஸ்யூவி -களுமே 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் 360-டிகிரி கேமரா பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற ஒரே மாதிரியான வசதிகளை பகிர்ந்து கொள்கின்றன. இரண்டும் உள்ளேயும் வெளியேயும் பிரீமியம் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மாருதி மற்றும் டொயோட்டா இந்த எஸ்யூவி -களின் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப் உடன் வழங்குகின்றன இது தற்போது வேறு எந்த சிறிய எஸ்யூவி களிலும் கிடைக்காத ஒன்று. அவற்றின் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் இரண்டு எஸ்யூவி -களும் செக்மென்ட்டில் சிறந்த மைலேஜை வழங்குகின்றன. ஆனால் பேட்டரி பேக்கின் காரணமாக பூட் பகுதியில் சற்று சமரசம் செய்ய வேண்டியிருக்கும்.
ஃபோக்ஸ்வேகன் டைகுன்/ ஸ்கோடா குஷாக்: உற்சாகமான செயல்திறன் மற்றும் மிகச் சிறந்த பாதுகாப்பை கொண்டது
நீங்கள் பரபரப்பான செயல்திறன் மற்றும் ஃபன் டிரைவிங் செய்யக் கூடிய நபர் என்றால் ஸ்கோடா குஷாக் அல்லது ஃபோக்ஸ்வேகன் டைகுன் உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். இரண்டு மாடல்களும் 6-ஸ்பீடு மேனுவல் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் 7-ஸ்பீடு DCT உள்ளிட்ட பல டிரான்ஸ்மிஷன்களுடன் 1-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகின்றன. இந்த எஸ்யூவி -கள் குளோபல் NCAP -லிருந்து 5-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்ட ஒரே மாடல்களாகும். இந்த இரண்டு எஸ்யூவி -களும் சிறந்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பை வழங்குகின்றன. இவற்றின் கேபின் மற்றும் வசதிகள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பழையதாக இருக்கின்றன.
ஹோண்டா எலிவேட்: பெரிய அகலமான கேபின் மற்றும் குறைவான விலை
ஹோண்டா எலிவேட் இந்த பிரிவின் புதிய கார்களில் ஒன்று. இது ஒரே ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. வாகனம் ஓட்டும்போது அதன் ஜெர்மன் போட்டியாளார்களை போல உற்சாகமாக இல்லாவிட்டாலும் எலிவேட் மென்மையான மற்றும் நிதானமான அனுபவத்தை வழங்குகிறது. அதன் ரீஃபைன்மென்ட்டான இன்ஜின் CVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் அதற்கு ஒரு காரணம். ஹோண்டா எஸ்யூவி அதன் கொரிய போட்டியாளர்களைப் போல ஏற்றதாக இல்லை என்றாலும் ADAS மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போன்ற சில பிரீமியம் வசதிகளுடன் அடிப்படைகளை விஷயங்களை கொண்டுள்ளது. டெக்னிக்கல் விஷயங்களுக்கு பதிலாக மதிப்பில் கவனம் செலுத்தி சிறந்த இன்ஸ்ட்ரூமென்ட்களை கொண்ட அதிநவீன தோற்றமுடைய கேபினுடன் ஹோண்டா இந்த காரை வடிவமைத்துள்ளது. மற்ற மாடல்களை விட ஹோண்டா எலிவேட்டை கருத்தில் கொள்ள மற்றொரு காரணம் அதன் விலை ஆகும். அதன் டாப் வேரியன்ட் அதன் போட்டியாளர்களின் டாப் வேரியன்ட்களை விட விலை சுமார் ரூ. 4 லட்சத்திற்கும் குறைவான உள்ளது.
MG ஆஸ்டர்: சிறப்பாக கட்டமைக்கப்பட்ட கேபின் மற்றும் ADAS
எம்ஜி ஆஸ்டர் இங்கு மிகவும் பிரபலமான எஸ்யூவி -யாக இருக்க வாய்ப்பில்லை. இது பல வசதிகளை கொண்டுள்ளது. நன்கு கட்டமைக்கப்பட்ட கேபின் மற்றும் அதன் வசதிகள் பட்டியலில் ADAS சேர்க்கப்பட்டுள்ளது. பிரகாசமான ரெட் கலர் கேபின் தரம் பிரீமியமாக உள்ளது. மேலும் நல்ல வசதிகள், AI அசிஸ்டன்ட் மற்றும் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன: 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல். இரண்டாவது இந்த சிறிய எஸ்யூவி -க்கு கொஞ்சம் ஸ்போர்ட்டினஸை கொடுக்கின்றது.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ்: 7 இருக்கைகள் கொண்ட அமைப்பு, வசதியான சவாரி தரம் மற்றும் குறைவான விலை
5 இருக்கைகள் அல்லது 7 இருக்கைகள் கொண்ட கொண்ட சிறிய எஸ்யூவி -யை நீங்கள் விரும்பினால் நீங்கள் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரை பார்க்க வேண்டும். 7 இருக்கைகள் கொண்ட பதிப்பு லக்கேஜ் சேமிப்பு பகுதியை விரிவாக்க நீக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகளுடன் வருகிறது. சிட்ரோன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கியுள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் அல்லது டீசல் பவர்டிரெயின்கள் எதுவும் கிடையாது. C3 ஏர்கிராஸ் சிறந்த சவாரி மற்றும் கையாளுதலுடன் வருகிறது. மேலும் பயணிகளுக்கு சிறந்த சொகுசான பயணத்தை வழங்குகிறது. ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம்) இதன் விலை காரணமாக விற்பனையில் உள்ள மிகவும் குறைவான விலையில் உள்ள சிறிய எஸ்யூவி -களில் ஒன்றாக உள்ளது. இதன் C3 ஏர்கிராஸ் அவர்களின் பெரிய குடும்பத்திற்கு சிறிய எஸ்யூவி -யை தேடுபவர்களுக்கு சரியான காராக இருக்கும். இருப்பினும் இவை அனைத்தும் எந்த பிரீமியம் வசதிகளும் இல்லாமல் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் இல்லாத அடிப்படை வசதிகளின் பட்டியலின் விலையில் வருகிறது.
மேலும் படிக்க: Tata Curvv vs Kia Seltos vs ஹோண்டா எலிவேட்: விவரங்கள் ஒப்பீடு
அதே விலை மேலும் சில ஆப்ஷன்கள்: செடான்கள் மற்றும் பெரிய எஸ்யூவிகள்
மாடல் |
விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) |
ஹூண்டாய் வெர்னா |
ரூ.11 லட்சம் முதல் ரூ.17.42 லட்சம் |
ஹோண்டா சிட்டி |
ரூ.11.71 லட்சம் முதல் ரூ.16.19 லட்சம் |
ஸ்கோடா ஸ்லாவியா/ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் |
ரூ 11.53 லட்சம் முதல் ரூ 19.13 லட்சம்/ ரூ 11.56 லட்சம் முதல் ரூ 19.41 லட்சம் வரை |
டாடா ஹாரியர் |
ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் |
மஹிந்திரா XUV700 |
ரூ.13.99 லட்சம் முதல் ரூ.26.99 லட்சம் |
எம்ஜி ஹெக்டர் |
ரூ.13.99 லட்சம் முதல் ரூ.21.95 லட்சம் |
டாடா கர்வ்வ் மற்றும் அதன் பிரிவு உள்ள மாற்ற கார்களுக்கு போட்டியாக இதே விலையில் பிரிமியம் காம்பாக்ட் செடான்களையும் பார்க்கலாம். இந்த மாடல்கள் சிறந்த பின் இருக்கை மற்றும் பூட் கொள்ளளவை கொண்டவையாக இருக்கும் ஆனால் குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டவை.
சற்றே பெரிய எஸ்யூவி -யை தேர்ந்தெடுக்கும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் மஹிந்திரா XUV700 அல்லது டாடா ஹாரியர் ஆகிய கார்களை பார்க்கலாம். அவற்றின் விலைகளைக் கருத்தில் கொண்டு வசதிகளின் அடிப்படையில் சற்று சமரசம் செய்து கொண்டால் அவற்றின் குறைந்த அல்லது மிட்-ஸ்பெக் வேரியன்ட்களை நீங்கள் வாங்க முடியும். அவை அவற்றின் அளவைக் கருத்தில் கொண்டு அதிக இன்-கேபின் இடம் கிடைக்கும்.
டாடா கர்வ்வ்: தனித்துவமான தோற்றம், வசதிகள், பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் மல்ட்டிபிள் பவர்டிரெயின்கள்
டாடா கர்வ்வ் க்காக காத்திருப்பதற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று அதன் கூபே போன்ற ரூஃபின் தனித்துவமான வடிவமைப்பாகும். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தயாரிப்புக்கு நெருக்கமான மாடலில் இன்னும் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் இருந்தன. இதில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். இதில் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, TPMS மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை உள்ளன. இது நவீனமான டாடா கார் என்பதால் பாரத் NCAP போன்ற கிராஷ்-டெஸ்டிங்கில் இருந்து இது சிறப்பான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பல டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுகளுடன் கர்வ்வ் வழங்கப்படும் என்பதையும் டாடா உறுதிப்படுத்தியுள்ளது.
நீங்கள் டாடா கர்வ்வ் காருக்காக காத்திருப்பீர்களா அல்லது அதற்குப் பதிலாக ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களில் ஒன்றை வாங்குவீர்களா என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.
0 out of 0 found this helpful