- + 11நிறங்கள்
- + 30படங்கள்
- shorts
- வீடியோஸ்
ஹோண்டா எலிவேட்
ஹோண்டா எலிவேட் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1498 சிசி |
பவர் | 119 பிஹச்பி |
torque | 145 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | ஃபிரன்ட் வீல் டிரைவ் |
மைலேஜ் | 15.31 க்கு 16.92 கேஎம்பிஎல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- சன்ரூப்
- adas
- பின்புற ஏசி செல்வழிகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

எலிவேட் சமீபகால மேம்பாடு
- மார்ச் 20, 2025: எலிவேட் உள்ளிட்ட அதன் கார்களின் விலை ஏப்ரல் 2025 முதல் உயர்த்தப்படும் என்று ஹோண்டா அறிவித்துள்ளது.
- மார்ச் 11, 2025: பிப்ரவரி 2025 -யில் ஹோண்டாவால் 1,400 யூனிட் எலிவேட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- மார்ச் 05, 2025: மார்ச் 2025 இல் ஹோண்டா எலிவேட் ரூ.86,100 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.
- பிப்ரவரி 25, 2025: ஹோண்டா எலிவேட் இந்தியாவில் 50,000க்கும் அதிகமான விற்பனையை எட்டியது. உலகளவில் மொத்த விற்பனை 1 லட்சம் யூனிட்கள் ஆக உள்ளது.
- ஜனவரி 29, 2025: ஹோண்டா எலிவேட்டின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் வலுவூட்டப்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ள அனைத்து வேரியன்ட்களிலும் விலை உயர்வு உள்ளது.
எலிவேட் எஸ்வி reinforced(பேஸ் மாடல்)1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.11.91 லட்சம்* | ||
எலிவேட் எஸ்வி1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.11.91 லட்சம்* | ||
எலிவேட் வி reinforced1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.12.71 லட்சம்* | ||
எலிவேட் வி1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.12.71 லட்சம்* | ||
எலிவேட் வி apex எடிஷன்1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.12.86 லட்சம்* | ||
எலிவேட் வி சிவிடி apex எடிஷன்1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.13.86 லட்சம்* | ||
எலிவேட் வி சிவிடி reinforced1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.13.91 லட்சம்* | ||
எலிவேட் வி சிவிடி1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.13.91 லட்சம்* | ||
எலிவேட் விஎக்ஸ் reinforced1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.14.10 லட்சம்* | ||
எலிவேட் விஎக்ஸ்1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.14.10 லட்சம்* | ||
எலிவேட் விஎக்ஸ் apex எடிஷன்1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.14.25 லட்சம்* | ||
எலிவேட் விஎக்ஸ் சிவிடி apex எடிஷன்1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.15.25 லட்சம்* | ||
எலிவேட் விஎக்ஸ் சிவிடி reinforced1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.15.30 லட்சம்* | ||
எலிவேட் விஎக்ஸ் சிவிடி1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.15.30 லட்சம்* | ||
எலிவேட் இசட்எக்ஸ் சிவிடி reinforced1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.15.41 லட்சம்* | ||
எலிவேட் இசட்எக்ஸ்1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.15.41 லட்சம்* | ||
எலிவேட் இசட்எக்ஸ் கருப்பு பதிப்பு1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.15.51 லட்சம்* | ||
எலிவேட் இசட்எக்ஸ் சிவிடி டூயல் டோன்1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.16.59 லட்சம்* | ||
மேல் விற்பனை எலிவேட் இசட்எக்ஸ் சிவிடி reinforced டூயல் டோன்1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.16.63 லட்சம்* | ||
எலிவேட் இசட்எக்ஸ் சிவிடி1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.16.63 லட்சம்* | ||
எலிவேட் இசட்எக்ஸ் பிளாக் எடிஷன் சிவிடி1498 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.92 கேஎம்பிஎல் | Rs.16.73 லட்சம்* | ||
எலிவேட் இசட்எக்ஸ் reinforced(டாப் மாடல்)1498 சிசி, மேனுவல், பெட்ரோல், 15.31 கேஎம்பிஎல் | Rs.16.83 லட்சம்* |

ஹோண்டா எலிவேட் விமர்சனம்
Overview
நீங்கள் ஒரு சிறிய கையேட்டில் அடக்க முடியாத நிறைய விஷயங்கள் உள்ளன.
இன்ஜின் விவரக்குறிப்புகள்? இருக்கின்றன.
நம்பகத்தன்மை? உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா.
பாதுகாப்பு அம்சங்கள்? நிச்சயமாக!
ஆனால், பில்டு குவாலிட்டி? இல்லை.
உத்தரவாதமா? நிச்சயமாக இருக்கிறது.
நம்பிக்கையா? இல்லை.
அதிர்ஷ்டவசமாக, எலிவேட் என்று வரும் போது இவை எவற்றைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஹோண்டா என்ற பெயருடன், இவை அனைத்தும் கிட்டத்தட்ட கிடைக்கின்றன.
எலிவேட் அதன் கையேட்டில் உள்ளதை (மற்றும் இல்லாததை) வைத்து முழுமையாக மதிப்பிடாமல் உங்களது ஆர்வத்தை தூண்டும். புதிய ஹோண்டாவுடன் நேரத்தைச் செலவழித்தவுடன், அது குடும்பத்திற்கு ஏற்ற ஒரு விவேகமான கார் என்பதை நீங்கள் விரைவில் நம்புவீர்கள்.
வெளி அமைப்பு
பேப்பரில் இருக்கும் பளபளப்பான படங்களை மறந்துவிடுங்கள். நேரில், நிஜ உலகில், எலிவேட் உயரமாகவும் நிமிர்ந்தும் தெரிகிறது. சாலை தோற்றம் சிறப்பாக உள்ளது மற்றும் சாலையில் உங்களை நோக்கி கவனத்தை ஈர்ப்பதற்கான நியாயமான பங்கை பெறுவீர்கள்.
வழக்கமான ஹோண்டா பாணியில் சொல்வதென்றால், வடிவமைப்பில் அது தேவையற்ற ரிஸ்க்கை எடுப்பதில்லை. இது எளிமையானது, வலுவானது மற்றும் சக்தி வாய்ந்தது. பெரிய பளபளப்பான கருப்பு கிரில் கொண்ட ஃபிளாட் முன்பக்கத்துக்க்கும் ஹோண்டாவின் உலகளாவிய வரிசையான எஸ்யூவி -களின் உள்ள தொடர்பு தெளிவாகத் தெரிகிறது. ஹை-செட் பானட் மற்றும் முழு LED ஹெட்லேம்ப்களுக்கு மேலே குரோம் தடிமனான ஸ்லாப் ஆகியவற்றை இணைக்கிறது - நம்பிக்கையை வெளிப்படுத்தும் முன்பக்க தோற்றத்தை நீங்கள் இதில் பார்ப்பீர்கள்.
பக்கவாட்டில் பார்க்கும் போது எலிவேட் கிட்டத்தட்ட மிகவும் எளிமையானதாகத் தெரிகிறது. கதவுகளின் கீழ் பாதியில் உள்ள சுவாரஸ்யமான பாகங்களை கவனிக்கவும், ஃபுரொபைல் தெளிவாக உள்ளது - எந்த கூர்மையான மடிப்புகளும் இல்லாமல். இந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது அதன் உயரமான தோற்றம் தனித்து தெரிகிறது, மேலும் 17" டூயல் டோன் வீல்களும் தனித்து தெரிகின்றன.
பின்புறத்தில் இருந்து, இணைக்கப்பட்ட டெயில் லேம்ப் டிசைன் வடிவமைப்பு சிறப்பாக தெரிகிறது. பிரேக் லேம்ப்ஸ் மட்டுமின்றி இந்த யூனிட் முழுவதும் LED இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
அளவைப் பொறுத்தவரை, எண்கள் இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருக்கும். இது அதன் பரம போட்டியாளர்களான கிரெட்டா, செல்டோஸ் மற்றும் கிராண்ட் விட்டாராவுடன் தோளோடு தோள் நின்று நிற்கிறது. இருப்பினும், உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடிய எண், பெரிய 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகும். இதைப் போல டிசைனில் ‘இந்தியாவுக்காக’ வேறு எதுவும் பேசவில்லை!
உள்ளமைப்பு
எலிவேட்டின் கதவுகள் நன்றாகவும் அகலமாகவும் திறக்கின்றன. முதியவர்களுக்குக் கூட உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினமாக இருக்காது. நீங்கள் கேபினுக்குள் 'நடக்க' முயற்சி செய்கிறீர்கள், இது முழங்கால்களை வைக்க மிகவும் வசதியானது.
ஒருமுறை, கம்பீரமான டேன்-பிளாக் கலர் காம்பினேஷன் ஆனது நீங்கள் உடனடியாக 'கிளாஸ்ஸி' என்று சொல்ல வைக்கும். ஏசி வென்ட்களைச் சுற்றி டார்க் கிரே கலர் கொடுக்கப்பட்டுள்ள்ளது (வழக்கமான குரோமுக்கு பதிலாக) மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கும் டார்க் கிரே ஸ்டிச்களுடன், தீமை ஹோண்டா தேர்வு செய்துள்ளது. டேஷ் போர்டு மீது வுடன் இன்செர்ட் டார்க் ஷேடை பெறுகிறது. டாஷ்போர்டிலிருந்து டோர் பேட்கள் மீது 'ஸ்பிலிங் ஓவர்' எஃபெக்ட் நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ளன, கேபினை மிகவும் ஒத்திசைவாக உணர வைக்கிறது.
பொருட்களின் தரம் என்று வரும் போது ஹோண்டா அதன் முடிவில் ஆணி அடித்துவிட்டது இருக்கிறது . டாஷ்போர்டு டாப், ஏசி வென்ட்கள் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் இன்டெர்ஃபேஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் உயர் தரத்தில் உள்ளது. டேஷ்போர்டில் உள்ள மென்மையான டச் லெதரெட் மற்றும் டோர் பேட்கள் அனுபவத்தை மேம்படுத்துவதில் தங்கள் பங்கைச் செய்கின்றன.
இப்போது இடவசதியை பற்றி பேசலாம். அமரும் நிலை உயர்வாக இருக்கிறது. உண்மையில், அதன் குறைந்த அமைப்பில் கூட, முன் இருக்கைகளின் உயரம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் வெளிப்படையான நன்மை என்னவென்றால், நீங்கள் முன்பக்கத்தை பற்றிய தெளிவான பார்வையைப் பெறுவீர்கள் - நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு புதியவராக இருந்தால் இது முக்கியமானது. 6 அடிக்கு மேல் உயரமுள்ளவர்கள் அல்லது தலைப்பாகை அணிபவர்கள், நீங்கள் கூரைக்கு அருகில் இருப்பதாக உணர்வீர்கள். சன்ரூஃப் இல்லாத மாடலுக்கு (கோட்பாட்டளவில்) முன்பக்கத்தில் சிறந்த ஹெட்ரூம் இருந்திருக்க வேண்டும்.
கேபினுக்குள், நடைமுறைக்கு பஞ்சமில்லை - சென்டர் கன்சோலில் கப்ஹோல்டர்கள், ஆர்ம்ரெஸ்டில் சேமிப்பு இடங்கள் மற்றும் கதவு பாக்கெட்டுகளில் பாட்டில் ஹோல்டர்கள் ஆகியவை உள்ளன. கூடுதலாக, உங்கள் தொலைபேசி அல்லது சாவிகளை வைத்திருப்பதற்கு சிறிய சேமிப்பு இடங்கள் உள்ளன.
பயணிகள் பக்கத்தில், சென்ட்ரல் ஏசி வென்ட்களுக்குக் கீழே உள்ள பகுதி வடிவமைப்பின்படி வெளியே செல்கிறது. இது உங்கள் முழங்கால் அல்லது தாடையைத் தொடலாம், இதனால் நீங்கள் இருக்கையை வழக்கத்தை விட ஒரு மீதோ பின்னோக்கி நகர்த்த வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டவசமாக, அதைச் செய்வது கூட பின் இருக்கை பயணிகளுக்கு ஏராளமான லெக் ரூமை கொடுக்கிறது.
பின்புற முழங்கால் அறை இந்த பிரிவில் சிறந்தது - என்னைப் போன்ற ஒரு ஆறு அடி உடைய நபருக்கு 6'5" உயரமான டிரைவரின் பின்னால் வசதியாக உட்கார முடிந்தது. இருக்கைகளுக்கு அடியில் உள்ள தளம் உயர்த்தப்பட்டு, அதை இயல்பான ஃபுட்ரெஸ்டாக மாற்றுகிறது. ஹெட்ரூம் பற்றி எந்த புகாரும் இல்லை. ரூஃப் லைனர் பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டு, இன்னும் கொஞ்சம் இடத்தை உருவாக்குகிறது. கேபின் அகலம் நன்றாக இருக்கிறது. தேவைப்பட்டால் மூன்று பேர் உள்ளே நுழையலாம். இருப்பினும், நடுவில் வசிப்பவருக்கு ஹெட்ரெஸ்ட் அல்லது 3-பாயின்ட் சீட் பெல்ட் எதுவும் இல்லை.
இந்த கேபின் 4 பெரியவர்களுக்கும் 1 குழந்தைக்கும் ஏற்றது, மேலும் விசாலமான டிரங்க் -கில் 5 பேரின் வார இறுதி சாமான்களை எளிதில் வைக்க முடியும். நீங்கள் 458 லிட்டர் இடத்தைப் பெறுவீர்கள், மேலும் கூடுதல் இடத்துக்காக பின் சீட்களை 60:40 எனப் ஸ்பிளிட் செய்யலாம்.
அம்சங்கள்
எலிவேட்டின் டாப்-ஸ்பெக் வெர்ஷன் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்தையும் கொண்டு வருகிறது. கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப், ஸ்டீயரிங் வீலுக்கான டில்ட்-டெலஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் உயரத்தை சரிசெய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை போன்ற அடிப்படைகள் உள்ளன. வயர்லெஸ் சார்ஜர், கிளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் சன்ரூஃப் ஆகியவை மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், ஹோண்டா முதன்முறையாக அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பம்சமாகும். இன்டெர்ஃபேஸ் எளிமையானது, ரெஸ்பான்ஸிவ் ஆனது மற்றும் நல்ல தெளிவாகவும் உள்ளது. இது நிச்சயமாக ஹோண்டா சிட்டியின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை விட சிறந்தது. இதன் மூலம் நீங்கள் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை பெறுவீர்கள்.
இரண்டாவது சிறப்பம்சமாக, பார்ட்-டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, சிட்டியில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது. அனலாக் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஒரு ஒருங்கிணைந்த கிளஸ்டரில் தடையின்றி கலக்கிறது. இங்கேயும், கிராபிக்ஸ் கூர்மையானது, மேலும் அனைத்து முக்கிய தகவல்களும் ஒரே பார்வையில் உங்களுக்கு கிடைக்கும்.
இருப்பினும், சில குறைகள் உள்ளன. பனோரமிக் சன்ரூஃப், முன் சீட் வென்டிலேஷன் அல்லது 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டிருந்தால், இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். ஆச்சரியம் என்னவென்றால், காரில் டைப்-சி சார்ஜர்கள் இல்லை. 12V சாக்கெட்டுடன் இரண்டு USB வகை-A போர்ட்களை முன்பக்கத்தில் பெறுவீர்கள், அதேசமயம் பின்பக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் ஃபோன்களை சார்ஜ் செய்ய 12V சாக்கெட்டை மட்டுமே பெறுவார்கள். மேலும், இன்னும் கொஞ்சம் அகலமான பின்புறத்துக்காக, ஹோண்டா பின்புற ஜன்னல் சன்ஷேடுகளைச் சேர்த்திருக்க வேண்டும்.
பாதுகாப்பு
பாதுகாப்பின் அடிப்படையில் எலிவேட் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம். இது ASEAN NCAP -ல் முழு 5 நட்சத்திரங்களைப் பெற்ற சிட்டியின் நிரூபிக்கப்பட்ட தளத்தை அடிப்படையாகக் கொண்டது. டாப்-ஸ்பெக் வெர்ஷன்கள் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்களை பெறுகின்றன. வித்தியாசமாக, எலிவேட்டுடன் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டமை ஹோண்டா வழங்கவில்லை.
எலிவேட்டின் பாதுகாப்புக் கூறுகளைச் சேர்ப்பது ADAS செயல்பாடுகளின் தொகுப்பாகும். இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவை அடங்கும். எலிவேட் கேமரா அடிப்படையிலான அமைப்பை பயன்படுத்துகிறது, கியா செல்டோஸ் அல்லது எம்ஜி ஆஸ்டர் போன்ற ரேடார் அடிப்படையிலான அமைப்பை அல்ல. இது மழை/மூடுபனி போன்ற குறைவான பார்வை நிலைகளிலும் இரவு நேரத்திலும் இதன் செயல்பாட்டைக் குறைக்கும். மேலும், பின்புறத்தில் ரேடார்கள் இல்லாததால், நீங்கள் பிளைன்ட்-ஸ்பாட் டிடெக்ஷன் அல்லது பின்புற கிராஸ்-டிராஃபிக் எச்சரிக்கையைப் நீங்கள் பெற மாட்டீர்கள்.
செயல்பாடு
எலிவேட்டை இயக்குவது சிட்டியின் சிறப்பானது என நிரூபணமான 1.5 லிட்டர் இன்ஜின் ஆகும். இல்லை, டர்போ இல்லை, ஹைப்ரிட் இல்லை, டீசல் இல்லை. உங்களுக்காக ஒரு இன்ஜின் ஆப்ஷன். நீங்கள் மேனுவல் மற்றும் CVT ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யலாம்.
விவரம் - இன்ஜின்: 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் - பவர்: 121PS | டார்க்: 145Nm - டிரான்ஸ்மிஷன்: 6-ஸ்பீடு MT / 7-ஸ்டெப் CVT விவரம் |
இன்ஜினை பொறுத்தவரையில் இங்கே எந்த ஆச்சரியமும் இல்லை. இது மென்மையாகவும், நிதானமாகவும், ஃரீபைன்ட் ஆக இருக்கிறது. இந்த பிரிவில் உள்ள மற்ற 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார்களுடன் ஒப்பிடும்போது, செயல்திறன் சமமாக உள்ளது. இது குறிப்பாக ஈர்க்கக்கூடியதாகவோ அல்லது உற்சாகமாகவோ இல்லை, ஆனால் இயல்பாக வேலையை செய்கிறது.
பவர் சீராக கிடைக்கிறது, அதாவது நகரத்தில் வாகனம் ஓட்டுவது எளிது. லைட் கன்ட்ரோல் செயல்முறையை இன்னும் எளிதாக்குகின்றன. நீங்கள் இரண்டு இடங்களில் பவர் தேவைப்படும் என்பதை விரும்புவீர்கள். முதலில்: முழு சுமையுடன் மலைப்பாங்கான சாலைகளில், நீங்கள் 1 அல்லது 2 வது கியரைப் பயன்படுத்தும் போது. இரண்டாவது: நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் முந்திச் செல்லும்போது. இங்கேயும், ஒரு டவுன்ஷிஃப்ட் (அல்லது இரண்டு) தேவைப்படலாம்.
CVT -யை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இது அனுபவத்தை மேலும் நிதானமாக்குகிறது. டார்க் கன்வெர்ட்டரை பிரதிபலிக்கும் வகையில் CVT டியூன் செய்யப்பட்டுள்ளது. எனவே வேகம் ஏறும்போது, குறிப்பாக கடினமாக ஓட்டும்போது அது ‘மேலே செல்கிறது’. ஆனால், இந்த கலவையானது லைட் த்ராட்டில் இன்புட்களுடன், நிதானமாக இயக்கப்படுவதை விரும்புகிறது என்பதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்.
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
ஹோண்டா சஸ்பென்ஷனை அவுட்ரைட் ஹேண்ட்லிங்கில் வசதியாக மாற்றியுள்ளது. இது மென்மையான சாலைகளில் சிறப்பாகச் செயல்படுகிறது மற்றும் மோசமான சாலைகளில் உங்களைத் தூக்கி எறியாது. குறைந்த வேகத்தில், பெரிய பள்ளங்களுக்கு மேல், இந்தப் பிரிவில் உள்ள பெரும்பாலான எஸ்யூவி -கள் உங்களை ஒரு பக்கமாகத் தள்ளுகின்றன. இவை எதுவும் எலிவேட்டில் இல்லை.
அதிவேக நிலைப்புத்தன்மை அல்லது வளைவு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கத்திற்கு மாறான எதுவும் இல்லை. நீங்கள் ஹோண்டா -வில் என்ன எதிர்பார்ப்பீர்களோ அதே போல் இது செயல்படுகிறது.
வெர்டிக்ட்
ஹோண்டா ஒரு சிறப்பான விலையை வழங்கியிருக்கிறது, ஆகவே எலிவேட்டின் மதிப்பு புறக்கணிக்க கடினமாக இருக்கிறது. ஹோண்டா இந்த காரின் விலையை அறிவித்துவிட்டது. ரூ. 11 - 16 லட்சமாக எலிவேட்டின் விலையை ஹோண்டா நிர்ணயம் செய்துள்ளது. ஹோண்டா சற்றுக் குறைந்த விலையை தேர்வு செய்திருப்பதால், அது உடனடியாக போட்டியாளர்களுக்கு வியர்வையை உண்டாக்குகிறது, விலை நிர்ணயத்தின் அடிப்படையில் இப்போது ஆபத்தான நிலையில் இருக்கும் சிறிய எஸ்யூவி -க்களையும் போட்டிக்கு சேர்த்துக் கொள்கிறது. குறிப்பாக குறைந்த வேரியன்ட்களுடன் சிறப்பான மதிப்பை வழங்குவதில் ஹோண்டாவின் சாமர்த்தியம் இதில் தெரிகிறது.
இது சில விடுபட்ட அம்சங்கள் இருக்கின்றன, ஆனால் அதற்காக நீங்கள் சமாதானம் செய்துதான் ஆக வேண்டும். ஃபேமிலி காரின் லென்ஸிலிருந்து பார்க்கும்போது - வசதி, இடம், தரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒன்று - எலிவேட்டில் குறை சொல்வது மிகவும் கடினம்.
ஹோண்டா எலிவேட் இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- எளிய, அதிநவீன வடிவமைப்பு. நிச்சயமாக நன்றாக உழைக்க கூடியது.
- தரமான இன்டீரியர் தரம் மற்றும் நடைமுறைக்கு ஏற்றவை.
- பின் இருக்கையில் அமர்வோருக்கு போதுமான கால் அறை மற்றும் ஹெட்ரூம்.
நாம் விரும்பாத விஷயங்கள்
- டீசல் அல்லது ஹைப்ரிட் ஆப்ஷன்கள் இல்லை.
- போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சில அம்சங்கள் இல்லை: பனோரமிக் சன்ரூஃப், முன் சீட் வென்டிலேஷன், 360° கேமரா
ஹோண்டா எலிவேட் comparison with similar cars
![]() Rs.11.91 - 16.83 லட்சம்* | ![]() Rs.11.11 - 20.50 லட்சம்* | ![]() Rs.11.19 - 20.09 லட்சம்* | ![]() Rs.11.14 - 19.99 லட்சம்* | ![]() Rs.11.13 - 20.51 லட்சம்* | ![]() Rs.10.89 - 18.82 லட்சம்* | ![]() Rs.8.69 - 14.14 லட்சம்* | ![]() Rs.8 - 15.60 லட்சம்* |
Rating467 மதிப்பீடுகள் | Rating381 மதிப்பீடுகள் | Rating556 மதிப்பீடுகள் | Rating379 மதிப்பீடுகள் | Rating416 மதிப்பீடுகள் | Rating444 மதிப்பீடுகள் | Rating719 மதிப்பீடுகள் | Rating682 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine1498 cc | Engine1482 cc - 1497 cc | Engine1462 cc - 1490 cc | Engine1462 cc - 1490 cc | Engine1482 cc - 1497 cc | Engine999 cc - 1498 cc | Engine1462 cc | Engine1199 cc - 1497 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜி |
Power119 பிஹச்பி | Power113.18 - 157.57 பிஹச்பி | Power87 - 101.64 பிஹச்பி | Power86.63 - 101.64 பிஹச்பி | Power113.42 - 157.81 பிஹச்பி | Power114 - 147.51 பிஹச்பி | Power86.63 - 101.64 பிஹச்பி | Power99 - 118.27 பிஹச்பி |
Mileage15.31 க்கு 16.92 கேஎம்பிஎல் | Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல் | Mileage19.38 க்கு 27.97 கேஎம்பிஎல் | Mileage19.39 க்கு 27.97 கேஎம்பிஎல் | Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல் | Mileage18.09 க்கு 19.76 கேஎம்பிஎல் | Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல் | Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல் |
Boot Space458 Litres | Boot Space- | Boot Space373 Litres | Boot Space- | Boot Space433 Litres | Boot Space385 Litres | Boot Space- | Boot Space382 Litres |
Airbags2-6 | Airbags6 | Airbags2-6 | Airbags2-6 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 |
Currently Viewing | எலிவேட் vs கிரெட்டா | எலிவேட் vs கிராண்டு விட்டாரா | எலிவேட் vs அர்பன் க்ரூஸர் ஹைரைடர் | எலிவேட் vs Seltos | எலிவேட் vs குஷாக் | எலிவேட் vs brezza | எலிவேட் vs நிக்சன் |

ஹோண்டா எலிவேட் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்