Honda Elevate -ன் புதிய பிளாக் எடிஷன் ரூ.15.51 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது
ஹோண்டா எலிவேட் க்காக ஜனவரி 10, 2025 11:30 pm அன்று shreyash ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 73 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா எலிவேட்டின் பிளாக் மற்றும் சிக்னேச்சர் பிளாக் எடிஷன்கள் இரண்டும் டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை.
-
எலிவேட்டின் இந்த புதிய பிளாக் பதிப்புகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
-
CVT ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களுக்கான டெலிவரி ஜனவரி முதல் தொடங்கும். மேனுவல் டிரிம்களுக்கு பிப்ரவரி முதல் தொடங்கும்.
-
பிளாக் எடிஷனின் விலை -யானது வழக்கமான ZX டிரிம் விலையை விட ரூ. 10,000 அதிகம். பிளாக் சிக்னேச்சர் எடிஷன் விலை ரூ.30,000 அதிகம்.
-
இந்த இரண்டு பிளாக் பதிப்புகளும் புதிய கிரிஸ்டல் பிளாக் பெர்ல் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் வருகின்றன.
-
இவை அனைத்தும் பிளாக் கலர் இன்ட்டீரியர்ஸ் உடன் வருகின்றன. மேலும் பிளாக் சிக்னேச்சர் பதிப்பு கூடுதலாக 7-கலர் ஆம்பியன்ட் லைட்களை பெறுகிறது.
-
இரண்டு சிறப்பு பதிப்புகளும் எஸ்யூவி -யின் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் தொடர்கின்றன.
ஹோண்டா எலிவேட் -க்கு இந்த வருடத்துக்கான மாடல் இயர் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிளாக் மற்றும் சிக்னேச்சர் பிளாக் என இரண்டு புதிய பிளாக் பதிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பதிப்புகளும் புதிய கிரிஸ்டல் பிளாக் பெர்ல் எக்ஸ்ட்டீரியர் கலரில் வருகின்றன. மேலும் அவை டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. எஸ்யூவியின் இந்த பிளாக் பதிப்புகளுக்கான முன்பதிவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. CVT வேரியன்ட்களின் டெலிவரி ஜனவரியில் தொடங்கவுள்ளது. அதே நேரத்தில் மேனுவல் வேரியன்ட்களின் டெலிவரி பிப்ரவரியில் தொடங்கும்.
மேலும் விவரங்களுக்கு பார்க்கும் முன்னர் அவற்றின் விலை விவரங்களை பார்ப்போம்:
ஹோண்டா எலிவேட் பிளாக் எடிஷன் |
|||
வேரியன்ட் |
வழக்கமான விலை |
பிளாக் பதிப்பு விலை |
வித்தியாசம் |
ZX MT |
ரூ.15.41 லட்சம் |
ரூ.15.51 லட்சம் |
+ ரூ.10,000 |
ZX CVT |
ரூ.16.63 லட்சம் |
ரூ.16.73 லட்சம் |
+ ரூ.10,000 |
ஹோண்டா எலிவேட் பிளாக் சிக்னேச்சர் பதிப்பு |
|||
ZX MT |
ரூ.15.41 லட்சம் |
ரூ.15.71 லட்சம் |
+ ரூ. 30,000 |
ZX CVT |
ரூ.16.63 லட்சம் |
ரூ.16.93 லட்சம் |
+ ரூ. 30,000 |
பிளாக் எடிஷன் வழக்கமான ZX வேரியன்ட்டை விட ரூ. 10,000 கூடுதல் விலையுடன் வருகிறது. அதே சமயம் பிளாக் சிக்னேச்சர் பதிப்பு வழக்கமான ZX டிரிமை விட ரூ.30,000 அதிகம்.
மேலும் பார்க்க: அறிமுகத்திற்கு முன்பே டீலர்ஷிப்களை வந்தடைந்த ஹோண்டா எலிவேட் பிளாக் எடிஷன்
ஹோண்டா எலிவேட் பிளாக் எடிஷன்
![2025 Honda Elevate Black Edition](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
![2025 Honda Elevate Black Edition Interior](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஹோண்டா எலிவேட்டின் வழக்கமான பிளாக் எடிஷன், சிறிய காஸ்மெட்டிக் ட்வீக் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் நட்ஸ் மற்றும் டெயில்கேட்டில் 'பிளாக் எடிஷன்' பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேல் கிரில்லில் உள்ள குரோம் கார்னிஷ், சில்வர்-ஃபினிஷ்டு ஸ்கிட் பிளேட்டுகள், சில்வர் ரூஃப் ரெயில்கள் மற்றும் டோர்களில் சில்வர் கார்னிஷ் போன்ற மற்ற விவரங்கள் அப்படியே இருக்கின்றன. உள்ளே இது பிளாக் நிற லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய ஆல்-பிளாக் கேபின், டோர் பேட்கள், ஆர்ம்ரெஸ்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை சுற்றி பிளாக் ஆக்ஸென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹோண்டா எலிவேட் சிக்னேச்சர் பிளாக் எடிஷன்
![2025 Honda Elevate Black Edition](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
![](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
வழக்கமான பிளாக் எடிஷனுடன் ஒப்பிடும்போது, சிக்னேச்சர் பிளாக் ஆல் பிளாக் கிரில், ஸ்கிட் பிளேட்டுகள், டோர்களில் பிளாக் கார்னிஷ், பிளாக் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் 'பிளாக் எடிஷன்' பேட்ஜுடன் கூடுதலாக டெயில்கேட் மீது ஃபெண்டரில் 'சிக்னேச்சர்' எடிஷன் பேட்ஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உள்ளே உட்புறம் வழக்கமான பிளாக் பதிப்பைப் போலவே உள்ளது. ஆனால் சிக்னேச்சர் பிளாக் 7-கலர் ஆம்பியன்ட் லைட்கள் கூடுதலாக உள்ளன.
வசதிகளில் எந்த மாற்றங்களும் இல்லை
ஹோண்டா இந்த காரில் வசதிகளில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 7 இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே கொண்ட 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது ஒரு ஆட்டோமெட்டிக் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றையும் பெறுகிறது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், லேன்வாட்ச் கேமரா, வெஹிகிள் ஸ்டெபிலிட்டி அசிஸ்ட், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் ஆட்டோமெட்டிக் ஹை பீம் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
பெட்ரோல்-ஒன்லி ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்
எலிவேட் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது:
இன்ஜின் |
1.5 லிட்டர் N/A பெட்ரோல் |
பவர் |
121 PS |
டார்க் |
145 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்டெப் CVT |
கிளைம்டு மைலேஜ் |
15.31 கிமீ/லி (MT), 16.92 கிமீ/லி (CVT) |
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹோண்டா எலிவேட் இப்போது ரூ.11.69 லட்சம் முதல் ரூ.16.93 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன், கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இது ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.