ஹோண்டா அதன் கார்களின் விலையை வரும் ஏப்ரல் முதல் உயர்த்தவுள்ளது
ஹோண்டா அமெஸ் க்காக மார்ச் 20, 2025 07:54 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 3 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா அதன் அனைத்து கார்களின் விலையும் அதிகரிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஒவ்வொரு புதிய காலண்டர் மற்றும் நிதியாண்டின் தொடக்கத்திலும் நாம் வழக்கமாகப் பார்ப்பது போலவே இந்த ஆண்டும் பல கார் தயாரிப்பாளர்கள் ஜனவரி மாதம் விலையை உயர்த்தியிருந்தனர். மேலும் அதன் தொடர்ச்சியாக ஏப்ரலிலும் விலை உயர்வு இருக்கும் என தெரிகிறது. இப்போது ஹோண்டா -வும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஹோண்டா அதன் அனைத்து மாடல்களிலும் விலையும் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்பதையோ அல்லது சரியான தொகை, சதவீதத்தை இன்னும் ஹோண்டா வெளியிடவில்லை.
விலை உயர்வுக்கான காரணம் என்ன ?
மற்ற கார் தயாரிப்பாளர்களைப் போலவே ஹோண்டா -வும் பொருட்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான விலை அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா கார்கள்
ஹோண்டா தற்போது இந்தியாவில் ஐந்து மாடல்களை விற்பனை செய்கிறது. அவற்றின் விரிவான விலை விவரங்கள் இங்கே:
மாடல் |
தற்போதைய விலை வரம்பு |
ஹோண்டா அமேஸ் 2 -வது தலைமுறை |
ரூ.7.63 லட்சம் முதல் ரூ.9.86 லட்சம் |
ஹோண்டா அமேஸ் 3 -வது தலைமுறை |
ரூ.8.10 லட்சம் முதல் ரூ.11.20 லட்சம் வரை |
ஹோண்டா எலிவேட் |
ரூ.11.91 லட்சம் முதல் ரூ.16.73 லட்சம் |
ஹோண்டா சிட்டி |
ரூ.12.28 லட்சம் முதல் ரூ.16.55 லட்சம் |
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் |
ரூ.20.75 லட்சம் |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
மேலும் படிக்க: 2025 ஏப்ரல் முதல் Hyundai கார்கள் விலை உயரவுள்ளது
ஹோண்டாவின் எதிர்கால திட்டங்கள் என்ன?
2030 ஆம் ஆண்டிற்குள் 5 புதிய எஸ்யூவி -களை இந்தியாவில் கொண்டு வரப்படும் என்று 2023 ஆம் ஆண்டில் ஹோண்டா தெரிவித்திருந்தது. அதில் ஒன்றான எலிவேட் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. மேலும் எலிவேட்டின் மின்சார பதிப்பு -ம் 2026 -க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.