புதிய Maruti Dzire மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
published on நவ 12, 2024 08:04 pm by shreyash for மாருதி டிசையர்
- 146 Views
- ஒரு கருத்தை எழுதுக
சன்ரூஃப், 360 டிகிரி கேமரா போன்ற இந்த பிரிவில் முதலாவதாக கிடைக்கும் வசதிகளுடன் மாருதி டிசையர் வருகிறது.
புதிய வடிவமைப்பு, புதிய உட்புறம் மற்றும் மாருதி ஸ்விஃப்ட்டிடம் இருந்து பெறப்பட்ட புதிய Z சீரிஸ் இன்ஜின் ஆகியவற்றுடன் 2024 மாருதி டிசையர் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. டிசையர் தொடர்ந்து ஹூண்டாய் ஆரா, ஹோண்டா அமேஸ், மற்றும் டாடா டிகோர் கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த புதிய டிசையர் காரை போட்டியாளர்களுடன் இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.
பெட்ரோல் மேனுவல்
2024 மாருதி டிசையர் |
ஹூண்டாய் ஆரா |
ஹோண்டா அமேஸ் |
டாடா டிகோர் |
XE - ரூ 6 லட்சம் |
|||
E - ரூ 6.49 லட்சம் |
XM - ரூ 6.60 லட்சம் |
||
LXi - ரூ 6.79 லட்சம் |
|||
S - ரூ 7.33 லட்சம் |
E - ரூ 7.20 லட்சம் |
XZ - ரூ 7.30 லட்சம் |
|
E சிஎன்ஜி - ரூ 7.49 லட்சம் |
|||
S - ரூ 7.63 லட்சம் |
XM சிஎன்ஜி - ரூ 7.60 லட்சம் |
||
VXi - ரூ 7.79 லட்சம் |
XZ பிளஸ் - 7.80 லட்சம் |
||
SX - ரூ 8.09 லட்சம் |
|||
S CNG - ரூ 8.31 லட்சம் |
XZ CNG - ரூ 8.25 லட்சம் |
||
VXi CNG - ரூ 8.74 லட்சம் |
SX(O) - ரூ 8.66 லட்சம் |
||
ZXi - ரூ 8.89 லட்சம் |
XZ பிளஸ் சிஎன்ஜி - ரூ.8.80 லட்சம் |
||
SX CNG - ரூ 9.05 லட்சம் |
VX - ரூ 9.05 லட்சம் |
||
VX எலைட் - ரூ 9.15 லட்சம் |
|||
ZXi பிளஸ் - ரூ 9.69 லட்சம் |
|||
ZXi CNG - ரூ 9.84 லட்சம் |
முக்கியமான விவரங்கள்
-
2024 மாருதி டிசையர் காரின் விலை ரூ. 6.79 லட்சத்தில் தொடங்குகிறது. இது ஹோண்டா அமேஸின் என்ட்ரி-லெவல் E வேரியன்ட்டை விட ரூ.41,000 குறைவாக உள்ளது. இருப்பினும், டிசையரின் ஆரம்ப விலையானது ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோரை விட ரூ.30,000 மற்றும் ரூ.79,000 வரை அதிகமாக உள்ளது.
-
இந்த ஒப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 4 மாடல்களிலும் அதிகபட்ச விலை ரூ.9.69 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
-
மாருதி டிசையரின் மிட்-ஸ்பெக் VXi வேரியன்ட் விலை ஆனது டாடா டிகோரின் டாப்-ஸ்பெக் XZ பிளஸ் பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்டுக்கு நிகராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசையர் VX உடன் ஒப்பிடும் போது டிகோர் XZ பிளஸ் ஆட்டோ ஏசி, 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோ ஹெட்லைட்கள் மற்றும் ரெயின்-சென்சிங் வைப்பர்கள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
-
இதேபோல் ஹூண்டாய் ஆராவின் டாப்-ஸ்பெக் எஸ்எக்ஸ்(ஓ) வேரியன்ட் மாருதி டிசையரின் மிட்-ஸ்பெக் இசட்எக்ஸ்ஐ வேரியன்ட்டை விட ரூ.23,000 விலை குறைவானது. ஆரா காரில் பெரிய 8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. சப்-4m செடான்களின் இரண்டு வேரியன்ட்களிலும் ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை கிடைக்கும்.
-
ஹோண்டா அமேஸின் டாப்-ஸ்பெக் டிரிமில் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
-
ஒரு சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற வசதிகளுடன் வரும் டிசையர் என்பது இந்தியாவின் முதல் சப் காம்பாக்ட் செடான் ஆக இது உள்ளது.
-
இந்த வசதிகள் அதன் டாப்-ஸ்பெக் ZXi பிளஸ் வேரியன்ட்டுடன் மட்டுமே கிடைக்கும்.
-
2024 டிசையர் புதிய 1.2-லிட்டர் Z சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 82 PS மற்றும் 112 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது 70 PS மற்றும் 102 Nm லோவர்டு அவுட்புட் உடன் CNG ஆப்ஷனில் கிடைக்கிறது.
-
டாடா டிகோர் 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினையும் 86 PS மற்றும் 113 Nm பெட்ரோலிலும், 73.4 PS மற்றும் 96 Nm சிஎன்ஜியிலும் பயன்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஹூண்டாய் ஆரா மற்றும் ஹோண்டா அமேஸ் இரண்டும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. ஆரா பெட்ரோலில் 83 PS மற்றும் 114 Nm மற்றும் CNG இல் 69 PS மற்றும் 95.2 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமேஸ் பெட்ரோலில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் அதன் அவுட்புட் 90 PS மற்றும் 110 Nm ஆக உள்ளது.
-
ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி ஆகிய இரண்டு சப்காம்பாக்ட் செடான்கள் மட்டுமே டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இதில் ஸ்பேர் வீலுக்கு பதிலாக பூட் ஃப்ளோர் -க்கு கீழே இரண்டு சிஎன்ஜி டேங்க் வைக்கப்பட்டுள்ளன. இது சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டிருந்தாலும் பூட் ஸ்பேஸை சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது.
மேலும் பார்க்க: 2024 Honda Amaze காரின் புதிய டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
பெட்ரோல் ஆட்டோமெட்டிக்
2024 மாருதி டிசையர் |
ஹூண்டாய் ஆரா |
ஹோண்டா அமேஸ் |
டாடா டிகோர் |
XMA AMT - ரூ 7.20 லட்சம் |
|||
VXi AMT - ரூ 8.24 லட்சம் |
|||
S CVT- ரூ 8.53 லட்சம் |
XZA Plus AMT - ரூ 8.40 லட்சம் |
||
SX பிளஸ் AMT - ரூ 8.89 லட்சம் |
XZA CNG AMT - ரூ 8.70 லட்சம் |
||
ZXi AMT - ரூ 9.34 லட்சம் |
XZA Plus CNG AMT - ரூ 9.40 லட்சம் |
||
VX CVT - ரூ 9.86 லட்சம் |
|||
ZXi பிளஸ் AMT - ரூ 10.14 லட்சம் |
VX எலைட் சிவிடி - ரூ 9.96 லட்சம் |
முக்கிய விவரங்கள்
-
2024 டிசையர் -ன் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ஆனது ஹூண்டாய் ஆரா மற்றும் ஹோண்டா அமேஸின் என்ட்ரி லெவல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களை விட ரூ.65,000 மற்றும் ரூ.29,000 வரை குறைவாகவே உள்ளது.
-
டாடா டிகோர் ஆட்டோமேட்டிக் இந்தியாவில் மிகவும் விலை குறைவான சப்காம்பாக்ட் செடானாக உள்ளது.
-
ஹோண்டா அமேஸை தவிர மற்ற அனைத்து செடான்களும் 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் வருகின்றன. அமேஸ் CVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸை பயன்படுத்துகிறது.
-
இங்குள்ள CNG -யில் 5-ஸ்பீடு AMT தேர்வையும் வழங்கும் ஒரே சப்காம்பாக்ட் செடான் டிகோர் ஆகும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டிசையர் AMT