இந்த மாதம் ஹோண்டா கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் ஆஃபர்கள் கிடைக்கும்
published on அக்டோபர் 04, 2024 06:30 pm by yashika for ஹோண்டா எலிவேட்
- 82 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆஃபர்களை தவித கூடுதலாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட உத்தரவாத நீட்டிப்பை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 7 ஆண்டுகள் அல்லது வரம்பற்ற கிலோமீட்டர் வரை கவரேஜ் கிடைக்கும்.
-
ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டியில் அதிகபட்சமாக ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும்.
-
அமேஸ் ரூ.1.12 லட்சம் வரை ஆஃபர்களுடன் கிடைக்கும்.
-
ஹோண்டா எலிவேட் மொத்தமாக ரூ.75,000 வரை ஆஃபர்களுடன் கிடைக்கும்.
-
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ரூ.90,000 வரை சலுகைகளை பெறுகிறது.
-
இந்த சலுகைகள் அனைத்தும் அக்டோபர் 2024 இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
கார் நிறுவனங்கள் இப்போது பண்டிகை கால சலுகைகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. ஹோண்டா நிறுவனம் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் உட்பட அதன் முழு போர்ட்ஃபோலியோவிலும் அதன் பண்டிகைக் கால விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எப்படியிருந்தாலும் கூட இந்த ஆஃபர்கள் எவ்வாறு ரொக்க தள்ளுபடிகள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் அதன் மாடல்களில் எக்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றின் விரிவான விவரங்களை ஹோண்டா வழங்கவில்லை. மாடல் வாரியான ஆஃபர் விவரங்கள் கீழே உள்ளன. இவை அனைத்தும் அக்டோபர் இறுதி வரை செல்லுபடியாகும்.
குறிப்பு: அக்டோபர் மாத சலுகைகளின் ஒரு பகுதியாக 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ (எது முந்தையது) வரை செல்லுபடியாகும் வேரியன்ட்யில் 3 ஆண்டு இலவச பராமரிப்பு சர்வீஸ் தொகுப்பை ஹோண்டா வழங்குகிறது.
ஹோண்டா அமேஸ்
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
ரூ.1.12 லட்சம் வரை |
-
ஹோண்டா அமேஸ் டாப்-ஸ்பெக் விஎக்ஸ் மற்றும் எலைட் வேரியன்ட்களை தேடும் வாடிக்கையாளர்கள் மேற்கூறிய சலுகைகளை பெற முடியும்.
-
அதாவது பேஸ்-ஸ்பெக் E மற்றும் மிட்-ஸ்பெக் S வேரியன்ட்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.82,000 மற்றும் ரூ.92,000 ஆகிய மொத்தப் பலன்களைப் பெறலாம்.
-
ஹோண்டாவின் சப்-4எம் செடான் விலை ரூ.7.20 லட்சம் முதல் ரூ.9.96 லட்சம் வரை உள்ளன.
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
ரூ.90,000 வரை |
-
ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் அல்லது வேரியன்ட்களைப் பொறுத்து மொத்தம் ரூ.90,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்.
-
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் விலை ரூ.19 லட்சம் முதல் ரூ.20.55 லட்சம் வரை இருக்கிறது.
ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
ரூ.1.14 லட்சம் வரை |
-
ஹோண்டா நிறுவனம் ஹோண்டா சிட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் அல்லது வேரியன்ட்களை பொறுத்து மொத்தம் ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடியுடன் செடான் கிடைக்கும்.
-
இதன் விலை ரூ.11.82 லட்சம் முதல் ரூ.16.35 லட்சம் வரை உள்ளது.
ஹோண்டா எலிவேட்
சலுகைகள் |
தொகை |
மொத்த பலன்கள் |
ரூ.75,000 வரை |
-
ஹோண்டா நிறுவனம் எலிவேட் எஸ்யூவி -யில் ரூ. 75,000 வரையிலான மொத்த ஆஃபர்களை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் அல்லது வேரியன்ட்டின் அடிப்படியில் தள்ளுபடி மாறுபடலாம்.
-
ஹோண்டா எலிவேட் விலை ரூ.11.69 லட்சம் முதல் ரூ.16.43 லட்சம் வரை உள்ளது.
மேலும் படிக்க: அறிமுகமானது Honda Elevate Apex எடிஷன்
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதக் காலங்கள்
புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட உத்தரவாத பேக்கேஜ்களையும் ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் இப்போது 7 ஆண்டுகள்/ வரம்பற்ற கி.மீ வரை உத்தரவாத நீட்டிப்பைப் பெறலாம். ஹோண்டா எலிவேட், சிட்டி, சிவிக், சிட்டி ஹைப்ரிட், அமேஸ், ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி ஆகியவற்றின் அனைத்து பெட்ரோல் வேரியன்ட்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
முக்கிய விவரங்கள்:
-
மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை செல்லுபடியாகும்.
-
மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்பு கொள்ளவும்.
-
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம்-க்கானவை ஆகும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹோண்டா எலிவேட் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful