அறிமுகமானது Honda Elevate Apex எடிஷன்
published on செப் 16, 2024 08:09 pm by dipan for ஹோண்டா எலிவேட்
- 77 Views
- ஒரு கருத்தை எழுதுக
லிமிடெட்-ரன் அபெக்ஸ் எடிஷன் எலிவேட்டின் மிட்-ஸ்பெக் V மற்றும் VX வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. தொடர்புடைய வேரியன்ட்களை விட ரூ. 15,000 அதிகம் ஆகும்.
-
அபெக்ஸ் பதிப்பு பியானோ பிளாக் இன்செர்ட்கள் மற்றும் லிமிடெட் எடிஷன்-ஸ்பெசிபைடு பேட்ஜ்களை வெளியே சேர்க்கப்பட்டுள்ளன.
-
இன்ட்டீயரின் இப்போது வொயிட் மற்றும் பிளாக் தீம் மற்றும் டோர்களில் வொயிட் லெதரெட் மெட்டீரியல் கொடுக்கப்பட்டுள்ளது.
-
இது எல்இடி லைட்ஸ் மற்றும் 8 இன்ச் டச் ஸ்கிரீன் உட்பட V மற்றும் VX வேரியன்ட்களின் அனைத்து வசதிகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
-
இது மேனுவல் மற்றும் சிவிடி இரண்டிலும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது.
-
இந்த பதிப்பின் விலை ரூ. 12.71 லட்சம் முதல் ரூ. 15.25 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).
லிமிடெட் ரன் ஹோண்டா எலிவேட் அபெக்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எஸ்யூவி யின் மிட்-ஸ்பெக் V மற்றும் VX வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. அபெக்ஸ் பதிப்பின் விலை பின்வருமாறு:
விலை |
ஸ்டாண்டர்டான வேரியன்ட் |
அபெக்ஸ் பதிப்பு |
வித்தியாசம் |
V MT |
ரூ.12.71 லட்சம் |
ரூ.12.86 லட்சம் |
+ரூ.15,000 |
V CVT |
ரூ.13.71 லட்சம் |
ரூ.13.86 லட்சம் |
+ரூ.15,000 |
VX MT |
ரூ.14.10 லட்சம் |
ரூ.14.25 லட்சம் |
+ரூ.15,000 |
VX CVT |
ரூ.15.10 லட்சம் |
ரூ.15.25 லட்சம் |
+ரூ.15,000 |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
இப்போது ஹோண்டா எலிவேட் அபெக்ஸ் எடிஷன் அனைத்தையும் பார்க்கலாம்:
ஹோண்டா எலிவேட் அபெக்ஸ் பதிப்பு: புதிதாக என்ன இருக்கிறது ?
அபெக்ஸ் எடிஷன் உள்ளேயும் வெளியேயும் ஒரு சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வருகிறது. மாற்றங்களில் சில பியானோ பிளாக் பார்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்கள் வடிவில் சில புதிய டிஸைன் எலமென்ட்கள் அடங்கும். புதிதாக சேர்க்கப்பட்ட வசதிகள் பின்வருமாறு:
-
முன்பக்கத்தின் கீழ் பகுதியில் (சில்வர் ஆக்ஸென்ட்கள்) மற்றும் பின்புற பம்பர்கள் (குரோம் ஆக்ஸென்ட்கள்) ஒரு பியானோ பிளாக் இன்செர்ட் உள்ளது.
-
டோர்களுக்கு அடியில் ஒரு பியானோ பிளாக் கார்னிஷ்
-
முன் ஃபெண்டர்களில் அபெக்ஸ் எடிஷன் பேட்ஜ்
-
டெயில்கேட்டில் அபெக்ஸ் எடிஷன் சின்னம்
இன்ட்டீரியரில் மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் இது கான்ட்ராஸ்ட் வொயிட் மற்றும் பிளாக் கேபின் தீமில் வருகிறது. டோர்களில் வொயிட் லெதரெட் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆம்பியன்ட் லைட்களையும் பெறுகிறது. இது ஸ்டாண்டர்டான எலிவேட்டின் ஃபுல்லி-லோடட் வேரியன்ட் மட்டுமே கிடைக்கும். ஹோண்டாவின் காம்பாக்ட் எஸ்யூவி -யின் கேபினில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும் படிக்க: இந்த செப்டம்பரில் ஹோண்டா தனது கார்களுக்கு ரூ.1.14 லட்சம் வரை சலுகைகளை வழங்குகிறது
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
மிட்-ஸ்பெக் V மற்றும் VX வேரியன்ட்களின் வசதிகள் தொகுப்பு அபெக்ஸ் பதிப்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹோண்டா எலிவேட் V வேரியன்ட்டில் LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்டுகள் மற்றும் கவர்களுடன் கூடிய 16-இன்ச் ஸ்டீல் வீல்கள் உள்ளன. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இதில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா உள்ளது.
VX வேரியன்ட் மேலும் 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது. இது லெதரெட்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற பிரீமியம் டச்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வேரியன்ட் பின்புற வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் லேன்-வாட்ச் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.
இருப்பினும் டாப்-ஸ்பெக் மாடல் பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளுடன் வருகிறது.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஆகஸ்ட் 2024 விற்பனையில் சிறந்த விற்பனையாளராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
அபெக்ஸ் எடிஷன் அதன் அடிப்படையிலான வேரியன்ட்களின் அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் தொடர்கிறது. ஹோண்டா எலிவேட்டை 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்குகிறது. இது 121 PS மற்றும் 145 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள்
இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா கர்வ், ஸ்கோடா குஷாக் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களுக்கு போட்டியாக ஹோண்டா எலிவேட் உள்ளது.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹோண்டா எலிவேட் ஆன்ரோடு விலை