90,000 க்கும் மேற்பட்ட கார்களை ஹோண்டா ரீகால் செய்கிறது
published on அக்டோபர் 28, 2024 04:52 pm by dipan for honda city
- 129 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரீகால் செய்யப்படும் கார்களில் உள்ள பழுதடைந்த எரிபொருள் (ஃபியூல்) பம்புகள் இலவசமாக மாற்றப்படும்.
-
ஆகஸ்ட் 2017 மற்றும் ஜூன் 2018 முதல் தயாரிக்கப்பட்ட யூனிட்கள் இந்த ரீகால் அழைப்பில் அடங்கியுள்ளன.
-
தவறான ஃப்யூல் பம்ப் இம்பெல்லர் காரணமாக இன்ஜின் திடீரென நிற்கலாம் அல்லது ஸ்டார்ட் ஆகாமல் போகலாம்.
-
நவம்பர் 5, 2024 முதல் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் மூலம் பழுதடைந்த பகுதியை இலவசமாக மாற்றுவதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளது.
-
குறைபாடுள்ள பாகங்களைக் கொண்ட கார்களின் உரிமையாளர்களை ஹோண்டா நிறுவனம் தனித்தனியாக தொடர்பு கொள்ளும்.
-
ஜூன் 2017 மற்றும் அக்டோபர் 2023 -க்கு இடையில் ஸ்பேர் பார்ட்களாக மாற்றப்பட்ட ஃபியூக்ல் பம்புகளும் சரிபார்க்கப்படுகின்றன.
எரிபொருள் பம்ப் பிரச்சினை காரணமாக ஹோண்டா -வால் ஆகஸ்ட் 2017 மற்றும் ஜூன் 2018 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பழைய 92,672 யூனிட் கார்கள் இப்போது ரீகால் செய்யப்பட்டுள்ளன. இந்த யூனிட்களில் ஹோண்டா சிட்டி, ஹோண்டா அமேஸ், ஹோண்டா WR-V, ஹோண்டா BR-V, ஹோண்டா பிரியோ மற்றும் ஹோண்டா அக்கார்டு ஆகியவை மேற்கூறிய ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட தயாரிப்பு தேதிக்கு இடையில் வரும் ஹோண்டா கார் உங்களிடம் இருந்தால் அந்த சிக்கலைப் பற்றியும், அதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்:
ரீகால் -க்கான காரணம்
ரீகால் செய்யப்படும் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் பம்ப்பில் குறைபாடுள்ள இம்பெல்லர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்பெல்லர் என்பது ஒரு சிறிய, சுழலும் பகுதியாகும், இது எரிபொருள் தொட்டியில் இருந்து இன்ஜினுக்கு எரிபொருளை செலுத்த உதவுகிறது. ஒரு குறைபாடுள்ள இம்பெல்லரால் இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் அளவை சரியாக கட்டுப்படுத்தாமல் போகலாம் என்பதால் மற்றும் இன்ஜின் திடீரென நிற்கலாம் அல்லது ஸ்டார் ஆகாமல் போகலாம்.
எந்த கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன?
ஆகஸ்ட் 2017 முதல் ஜூன் 2018 வரை தயாரிக்கப்பட்ட ஹோண்டா சிட்டி, ஹோண்டா அமேஸ், ஹோண்டா டபிள்யூஆர்-வி, ஹோண்டா பிஆர்-வி, ஹோண்டா பிரியோ மற்றும் ஹோண்டா அக்கார்டு ஆகியவற்றின் 90,000 பழைய மாடல்கள் இந்த ரீகாலில் அடங்கும். அதன் விரிவான பட்டியல் பின்வருமாறு:
கார் மாடல் |
உற்பத்தி செய்யப்பட்ட தேதி |
யூனிட்களின் எண்ணிக்கை |
சிட்டி |
செப்டம்பர் 4, 2017 முதல் ஜூன் 19, 2018 வரை |
32,872 |
அமேஸ் |
செப்டம்பர் 19, 2017 முதல் ஜூன் 30, 2018 வரை |
18,851 |
ஜாஸ் |
செப்டம்பர் 5, 2017 முதல் ஜூன் 29, 2018 வரை |
16,744 |
WR-V |
செப்டம்பர் 5, 2017 முதல் ஜூன் 30, 2018 வரை |
14,298 |
BR-V |
செப்டம்பர் 26, 2017 முதல் ஜூன் 14, 2018 வரை |
4,386 |
பிரியோ |
ஆகஸ்ட் 8, 2017 முதல் ஜூன் 27, 2018 வரை |
3,317 |
கூடுதலாக இந்த ரீகால் 2,204 யூனிட் மாடல்களை உள்ளடக்கியுள்ளது (மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மாடல்கள் மற்றும் ஹோண்டா சிவிக்) இந்த குறைபாடு உள்ள பகுதி முன்பு ஸ்பேர் பார்ட்ஸ் ஆக மாற்றப்பட்டது. ஜூன் 2017 மற்றும் அக்டோபர் 2023 -க்கு இடையில் ஃப்யூல் பம்ப் அசெம்பிளியை வாங்கிய வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் ஸ்பேர் பார்ட்ஸ்களையும் சரிபார்த்துக் கொள்ளுமாறு ஹோண்டா வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 2024 பண்டிகைக் காலத்தில் வெளியிடப்பட்ட ஸ்பெஷல் எடிஷன் காம்பாக்ட் எஸ்யூவிகளின் விவரங்கள்
உரிமையாளர்கள் இப்போது என்ன செய்ய முடியும்?
ஹோண்டா கார்ஸ் இந்தியா இணையதளத்தில் காரின் வாகன அடையாள எண்ணை (VIN) உள்ளிடுவதன் மூலம் உரிமையாளர்கள் தங்கள் கார்கள் இந்த ரீகாலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். கார் தயாரிப்பாளர் அதன் பான்-இந்திய டீலர்ஷிப்கள் இந்த பாதிக்கப்பட்ட யூனிட்களுடன் வாடிக்கையாளர்களை தனித்தனியாக தொடர்பு கொள்வோம் என்று அறிவித்துள்ளது. நவம்பர் 5, 2024 முதல் அனைத்து ஹோண்டா டீலர்ஷிப்களிலும் எரிபொருள் பம்ப் இலவசமாக மாற்றித்தரப்படும்.
ரீகால் செய்யப்பட்ட மாடல்களை தொடர்ந்து டிரைவ் செய்யலாமா ?
பாதிக்கப்பட்ட கார்களின் பாதிக்கப்பட்ட யூனிட்களை அவற்றின் தற்போதைய நிலையில் ஓட்டுவது பாதுகாப்பானதா என்பதை ஹோண்டா இன்னும் குறிப்பிடவில்லை. ஆனால் உங்கள் வாகனம் ரீகால் செய்யப்படும் நிலையில் இருந்தால் அதை சீக்கிரம் சரி செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹோண்டா சிட்டி ஆன் ரோடு விலை