2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?
published on அக்டோபர் 15, 2024 05:14 pm by dipan for மாருதி டிசையர்
- 49 Views
- ஒரு கருத்தை எழுதுக
2024 டிசையர் முதல் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி 63 எஸ் இ பெர்ஃபாமன்ஸ் மட்டுமல்ல ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்ற மாஸ்-மார்க்கெட் மாடல்களும் இந்த வருடத்தின் மீதமுள்ள காலத்தில் அறிமுகமாகவுள்ளன.
2024 ஆண்டு முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. மேலும் இந்த ஆண்டு தொடக்கம் முதல் மஹிந்திரா தார் ராக்ஸ், டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் போன்றவர்களுக்கு மெர்சிடிஸ்-மேபெக் EQS SUV, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் 2 மற்றும் BMW XM லேபிள் என பல புதிய கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இருப்பினும் இன்னும் சில அற்புதமான கார்கள் வெளியாக காத்திருக்கின்றன. 2024 ஆம் ஆண்டின் மீதமுள்ள சில மாதங்களில் வெளியாகவுள்ள கார்களின் பட்டியல் இங்கே.
2024 மாருதி டிசையர்
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டுத் தேதி: நவம்பர் 4, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 6.70 லட்சம்
புதிய ஸ்விஃப்ட் அடிப்படையிலான 2024 மாருதி டிசையர் இந்த ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ஜென் டிசையர் ஆனது இணையத்தில் கசிந்த சில படங்களில் பார்த்தபடி தற்போதைய ஸ்விஃப்ட் காரை விட முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது.
அதே சமயம் உட்புறம் 2024 ஸ்விஃப்ட் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சப்காம்பாக்ட் செடான் தற்போதைய ஜென் மாடலாக பிளாக் மற்றும் பிரெளவுன் கலர் கேபின் தீம் உடன் வரலாம். இந்த புதிய-ஜென் மாடல் பெரும்பாலும் 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஸ்விஃப்ட்டில் கொடுக்கப்படும், இது 82 PS மற்றும் 112 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கக்கூடியது.
2024 ஹோண்டா அமேஸ்
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அறிவிக்கப்படும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7.30 லட்சம்
வரவிருக்கும் மாருதி டிசையருக்கு முதன்மையான போட்டியாளரான புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் டிசம்பர் 2024 க்குள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில ஸ்பை ஷாட்கள் அதன் வடிவமைப்பின் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்பதை காட்டுகின்றன.
360-டிகிரி கேமரா, அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) யூனிட், பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற புதிய வசதிகள் சிட்டி மற்றும் எலிவேட் காரிலிருந்து பெறப்பட்டுள்ளன.இது 5-ஸ்பீடு MT அல்லது CVT (கன்ட்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்) கொண்ட அதே 1.2-லிட்டர் இன்ஜின் (90 PS/110 Nm) அவுட்புட்டை கொடுக்கும் இன்ஜின் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 எம்ஜி குளோஸ்டர்
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அறிவிக்கப்படும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.39.50 லட்சம்
முதன்முதலில் எம்ஜி குளோஸ்டர் கார் 2020 ஆண்டில் விற்பனைக்கு வந்தது. மற்றும் இந்த ஆண்டு ஒரு மிட்-லைஃப்- ஃபேஸ்லிஃப்ட் கொடுக்கப்படவுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது. புதிய ஸ்பிலிட் ஹெட்லைட் அமைப்பு, மிகவும் முரட்டுத்தனமான கிளாடிங் மற்றும் புதிய கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவை இருக்கும். உள்ளே இது ஒரு பெரிய டச் ஸ்கிரீன், புதிய ஏர் இன்டேக்ஸ் மற்றும் புதிய வடிவிலான சுவிட்ச் கியர் கொண்ட புதிய சென்டர் கன்சோல் ஆகியவற்றுடன் வரலாம். இது இரண்டு டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் முறையே 161 PS/373.5 Nm அல்லது 215.5 PS/478.5 Nm அவுட்புட்டை கொடுக்கும்.
மேலும் படிக்க: 2024 செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி -கள் இவை
2024 ஹூண்டாய் டியூசன்
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அறிவிக்கப்படும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.30 லட்சம்
ஹூண்டாய் டியூசன் ஃபேஸ்லிஃப்ட் 2023 ஆண்டில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவிலும் இது அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய-ஸ்பெக் டியூசன் போன்ற வடிவமைப்புடன் வரும். ஆனால் புதிய வடிவிலான செய்யப்பட்ட கிரில், ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்ஸ் ஆகியவை இருக்கும்.
ஹூண்டாய் கிரெட்டா போன்ற டூயல் ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் உட்புறம் முழுமையாக புதிய வடிவிலான செய்யப்படும் மற்றும் ஸ்டீயரிங் ஹூண்டாய் அயோனிக் 5 போல இருக்கும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டியூஸன் அதே 2-லிட்டர் டீசல் (186 PS/416 Nm) மற்றும் 2-லிட்டர் பெட்ரோல் (156 PS/192 Nm) இன்ஜின்கள் உடன் தொடர வாய்ப்புள்ளது.
ஸ்கோடா கைலாக் - உலகளாவிய அறிமுகம்
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: 2025
எதிர்பார்க்கப்படும் விலை:ரூ. 8.50 லட்சம்
ஸ்கோடா கைலாக் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 6 ஆம் தேதி உலகளவிலும் அறிமுகம் செய்யப்படும். ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் சில டீஸர்களை வெளியிட்டுள்ளது. குஷாக் போன்ற ஸ்பிளிட்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு மற்றும் ரேப்பரவுண்ட் டெயில் லைட்ஸ் போன்றவை இருக்கலாம்.
கேபின் குஷாக்கால் ஈர்க்கப்பட்டது போல தெரிகிறது. மேலும் இது 2-ஸ்போக் ஸ்டீயரிங், 10-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 8-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வரலாம். இந்த ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவி, குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் உள்ளதை போன்றே 1-லிட்டர் டர்போசார்ஜ்டு TSI பெட்ரோல் இன்ஜின் (115 PS/178 Nm) இதிலும் கொடுக்கப்படும்.
மஹிந்திரா XUV.e8
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அறிவிக்கப்படும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.35 லட்சம்
மஹிந்திரா XUV.e8, மஹிந்திரா XUV700 -ன் ஆல்-எலக்ட்ரிக் டெரிவேட்டிவ் சோதனை செய்யப்படும் போது சில முறை படம் பிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் இது இந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ICE XUV700 போன்ற ஒட்டுமொத்த வடிவமைப்பை கொண்டிருக்கும். ஆனால் EV-க்கென சில மாற்றங்களான பிளாங்க்-ஆஃப் கிரில் மற்றும் ஏரோடைனமிக் வீல்ஸ் ஆகியவை இருக்கலாம். இது 3-அமைப்பு இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப் உட்பட அதிநவீன இன்ட்டீரியர் உடன் வரலாம்.
XUV.e8 ஆனது 60 kWh மற்றும் 80 kWh ஆகிய 2 பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வரும். WLTP- கிளைம்டு ரேஞ்ச் 450 கி.மீ வரை இருக்கும். இது ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்புகளில் வரும்.
மேலும் படிக்க: இந்த தீபாவளிக்கு மஹிந்திரா எஸ்யூவியை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம் !
ஸ்கோடா என்யாக் iV
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அறிவிக்கப்படும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ,60 லட்சம்
ஸ்கோடா என்யாக் iV கார் ஆனது இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இது இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆக இருக்கும். இது ஏற்கனவே 50, 60, 80, 80X மற்றும் vRS என 5 வேரியன்ட்களில் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. இது 3 பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது, இது WLTP கிளைம்டு ரேஞ்சை 510 கி.மீ வரை வழங்குகிறது.
சர்வதேச-ஸ்பெக் மாடல் அதன் விளிம்பில் 13-இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மசாஜ் ஃபங்ஷன் உடன் பவர்டு டிரைவர் இருக்கை போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஆகியவை அடங்கும்.
வோக்ஸ்வாகன் ஐடி.4
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அறிவிக்கப்படும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 65 லட்சம்
வோக்ஸ்வாகன் ஐடி.4 ஸ்கோடா என்யாக் iV போன்ற அதே கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே 52kWh மற்றும் 77kWh பேட்டரி என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த EV ஆனது ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப்களில் கிடைக்கிறது.
ஆனால் என்யாக் iV உடன் ஒப்பிடுகையில் இதன் வசதிகளில் சற்று மாற்றம் உள்ளது. மேலும் இது 12-இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 3-ஸ்கிரீன் கிளைமேட் கன்ட்ரோல் , ஒரு பனோரமிக் சன்ரூஃப் கிளாஸ் மற்றும் சூடான முன் இருக்கைகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக இது 7 ஏர்பேக்குகள், ஒரு ரியர்வியூ கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஒரு ADAS ஆகியவற்றைப் பெறுகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ்
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அறிவிக்கப்படும்
2024 Mercedes-Benz AMG C 63 S E பெர்ஃபாமன்ஸ் கார் 2023 -ம் ஆண்டு உலகளவில் வெளியிடப்பட்டது. மற்றும் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளக்-இன் ஹைப்ரிட் ஏஎம்ஜி மாடலில் முன் அச்சில் பொருத்தப்பட்ட 2-லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் மற்றும் பின்புற ஆக்ஸிலில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இது மொத்தம் 680 PS மற்றும் 1,020 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. இது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.
12.3 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 11.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள் போன்ற வசதிகளைக் கொண்ட சர்வதேச மாடலைப் போலவே உட்புறமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: இந்திய வாகன சந்தையில் திரு. ரத்தன் டாடா -வின் பங்களிப்பை கார்தேக்கோ நினைவு கூர்கிறது
லோட்டஸ் எமிரா
எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி: அறிவிக்கப்படும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.1.70 கோடி
இந்தியாவில் எலெட்ரே எஸ்யூவிக்கு பிறகு லோட்டஸ் வழங்கும் இரண்டாவது கார் ஆக லோட்டஸ் எமிரா இருக்கும். இந்த மிட்-இன்ஜின் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் 2-லிட்டர் AMG-பெறப்பட்ட டர்போ-பெட்ரோல் இன்ஜின் அல்லது டொயோட்டாவிலிருந்து பெறப்பட்ட 3.5-லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட V6 உடன் வழங்கப்படுகிறது. இது 406 PS வரை மற்றும் 430 Nm அவுட்புட்டை கொடுக்கும்.
சர்வதேச மாடல் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 10-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்துடன் வருகிறது.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful