மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
change carஇ8 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மஹிந்திரா XUV.e8 சோதனையின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் புதிய வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்துகிறன.
வெளியீடு: ஆல் எலக்ட்ரிக் மஹிந்திரா XUV700 டிசம்பர் 2024 -க்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: மஹிந்திரா அதன் விலை ரூ. 35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் நிர்ணயம் செய்யலாம்.
கட்டமைப்பு: மஹிந்திரா XUV.e8 ஆனது INGLO மாடுலர் தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: XUV.e8 ஆனது 2 பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்: ஒரு 60 kWh மற்றும் 80 kWh, WLTP-கிளைம்டு 450 கி.மீ. இந்த யூனிட் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் செட்டப்களுடன் கொடுக்கப்படும். இது ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல் வீல் டிரைவ் (AWD) ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும். முந்தையது 285 PS வரையிலான அவுட்புட்டை கொடுக்கும், மற்றொன்று 394 PS வரை அவுட்புட்டை கொடுக்கும். இது 175 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் திறனையும் கொண்டிருக்கும்.
அம்சங்கள்: XUV.e8 -ல் உள்ள அம்சங்களில் இன்டெகிரேட்டட் டிஸ்பிளே செட்டப், கனெக்டட் கார் டெக்னாலஜி, மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு: 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ADAS அம்சங்களின் தொகுப்பு மூலம் பயணிகளின் பாதுகாப்புக்காக கொடுக்கப்படும்.
போட்டியாளர்கள்: மஹிந்திரா XUV.e8 ஆனது BYD Atto 3 -க்கு நேரடி போட்டியாக இருக்கும், அதே நேரத்தில் MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மாடல்களுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி இ8 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
அடுத்து வருவதுஇ8 | Rs.35 - 40 லட்சம்* |
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது