டாடா -வின் 3 கார்கள் பாரத் NCAP -யால் சோதனை செய்யப்பட்டுள்ளன
published on அக்டோபர் 16, 2024 07:32 pm by shreyash for டாடா நிக்சன்
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா நிறுவனத்தின் 3 எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. அதே சமயம் கர்வ் மற்றும் கர்வ் EV ஆகியவை லெவல் 2 ADAS வசதிகளை கொண்டுள்ளன.
பாரத் என்சிஏபி (புதிய கார் மதிப்பீட்டு திட்டம்) டாடா நெக்ஸான் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்), டாடா கர்வ் ICE, மற்றும் டாடா கர்வ்வ் EV ஆகிய டாடா -வின் 3 கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் -களுக்கான சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடாவின் நற்பெயருக்கு உண்மையாக, இந்த மூன்று மாடல்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பிரிவுகளில் ஈர்க்கக்கூடிய 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இந்த மாடல்கள் ஒவ்வொன்றிற்கும் விரிவான கிராஷ் டெஸ்ட் விவரங்களை பற்றி பார்ப்போம்.
டாடா நெக்ஸான் ICE
பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP) மதிப்பெண் |
29.41/32 |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP) மதிப்பெண் |
43.83/49 |
பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5-ஸ்டார் |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5-ஸ்டார் |
ஃப்ரண்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் தடுப்பு விபத்து சோதனையில், நெக்ஸான் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்து ஆகிய இரண்டிற்கும் நல்ல பாதுகாப்பை கிடைத்தது. இந்தச் சோதனையில் நெக்ஸான் 16 -க்கு 14.65 மதிப்பெண்களைப் பெற்றதன் மூலம் ஓட்டுநரின் மார்புக்கான பாதுகாப்பும் போதுமானதாக மதிப்பிடப்பட்டது. முன்பக்கத்தில் இருப்பவர்கள் இருவருக்குமான டிபியாஸ் -க்கு போதுமானதாக இருந்தது.
சைடு மூவபிள் பேரியர் சோதனையில், ஓட்டுநரின் தலை மற்றும் வயிற்றுப் பகுதிக்கான பாதுகாப்பு நல்லதாக மதிப்பிடப்பட்டது. அதே நேரத்தில் மார்பு போதுமான மதிப்பீட்டைப் பெற்றது. இந்தச் சோதனையில் டாடாவின் சப்காம்பாக்ட் எஸ்யூவி 16 -க்கு 14.76 மதிப்பெண்களைப் பெற்றது. கூடுதலாக, சைடு போல் இம்பாக்ட் சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஓட்டுநரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு அனைத்தும் நல்ல பாதுகாப்பைப் பெற்றன.
சைல்டு ரீஸ்ட்ரெயின்ட் முறையைப் பயன்படுத்துவதன் மூலம், டைனமிக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் நெக்ஸான் 22.83/29 பெற்றது. 18 மாத குழந்தையின் முன் மற்றும் பக்க பாதுகாப்பிற்கு, டைனமிக் ஸ்கோர் முறையே 8 -க்கு 7 மற்றும் 4 -க்கு 4 ஆகும். அதேபோல் 3 வயது குழந்தைக்கான டைனமிக் மதிப்பெண் 8 -க்கு 7.83 ஆகவும், 4 -க்கு 4 ஆகவும் இருந்தது.
டாடா கர்வ் ICE
பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP) மதிப்பெண் |
29.50/32 |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP) மதிப்பெண் |
43.66/49 |
பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5-ஸ்டார் |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5-ஸ்டார் |
ஃப்ரண்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் க்ராஷ் டெஸ்ட் தொடங்கி கர்வ்வ் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை, கழுத்து மற்றும் மார்புக்கு நல்ல பாதுகாப்பை கொடுத்தது. இருப்பினும் ஓட்டுநரின் இடது காலுக்கான பாதுகாப்பு விளிம்பு நிலை என மதிப்பிடப்பட்டது. இதன் விளைவாக 16 -க்கு 14.65 மதிப்பெண்கள் கிடைத்தன. சைடு மூவபிள் தடுப்பு சோதனையில், ஓட்டுநரின் தலை மற்றும் வயிறுக்கான பாதுகாப்பு நன்றாக இருந்தது. அதே நேரத்தில் மார்பு போதுமான மதிப்பீட்டைப் பெற்றது. இந்த தேர்வில் கர்வ்வ் 16 -க்கு 14.85 மதிப்பெண்கள் பெற்றது. பக்கவாட்டு சோதனையில், ஓட்டுநரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதி அனைத்தும் நல்ல பாதுகாப்பைப் பெற்றன.
சைல்டு ரீஸ்ட்ரெயின் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் டைனமிக் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் தேர்வில் கர்வ்வ் ஒட்டுமொத்தமாக 22.66/29 மதிப்பெண்களைப் பெற்றார். 18 மாத குழந்தையின் முன் மற்றும் பக்க பாதுகாப்பிற்கு, டைனமிக் மதிப்பெண் முறையே 8 -க்கு 7.07 மற்றும் 4 -க்கு 4 ஆகும். அதேபோல 3 வயது குழந்தைக்கு டைனமிக் மதிப்பெண் 8 -க்கு 7.59 ஆகவும் 4 -க்கு 4 ஆகவும் இருந்தது.
டாடா கர்வ்வ் EV
பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP) மதிப்பெண் |
30.81/32 |
குழந்தைளுக்கான பாதுகாப்பு (COP) மதிப்பெண் |
44.83/49 |
பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5-ஸ்டார் |
குழந்தைளுக்கான மதிப்பீடு |
5-ஸ்டார் |
கர்வ் காரின் எலக்ட்ரிக் பதிப்பு டிரைவர் மற்றும் கோ டிரைவர் தலை, கழுத்து மற்றும் மார்பு ஆகிய இரண்டிற்கும் நல்ல பாதுகாப்பை வழங்கியது. இருப்பினும் ஓட்டுநரின் கால்கள் மற்றும் இணை ஓட்டுநரின் இடது காலுக்கான பாதுகாப்பு போதுமானதாக இருந்தது. இந்தத் தேர்வில் 16 -க்கு 15.66 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. சைல்டு ரீஸ்ட்ரெயின் தடுப்பு சோதனையில் டிரைவரின் தலை மற்றும் அடிவயிற்றுக்கான பாதுகாப்பு நன்றாக இருந்தது. அதே நேரத்தில் மார்பு போதுமான மதிப்பீட்டைப் பெற்றது. இந்தச் சோதனையில், கர்வ் EV ஆனது 16 -க்கு 15.15 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கூடுதலாக பக்கவாட்டு சோதனையில் ஓட்டுநரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதி அனைத்தும் நல்ல பாதுகாப்பைப் பெற்றன.
குழந்தைகளுக்கான பாதுகாப்பைப் பொறுத்தவரை குழந்தை ரீஸ்ட்ரெயின் அமைப்பு பயன்படுத்தப்பட்டது. மேலும் கர்வ் EV ஆனது டைனமிக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் ஒட்டுமொத்தமாக 23.83/29 மதிப்பெண்களைப் பெற்றது. 18 மாத குழந்தையின் முன் மற்றும் பக்க பாதுகாப்பிற்கு, டைனமிக் மதிப்பெண் முறையே 8 இல் 8 மற்றும் 4 இல் 4 ஆகும். அதேபோல, 3 வயது குழந்தைக்கு டைனமிக் மதிப்பெண் 8 -க்கு 7.83 ஆகவும், 4 -க்கு 4 ஆகவும் இருந்தது.
கார்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள்
3 டாடா எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட், அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள், EBD உடன் ABS மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. கர்வ் மற்றும் கர்வ் EV ஆனது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் கொண்டுள்ளது.
விலை
டாடா நெக்ஸான் |
டாடா கர்வ் |
டாடா கர்வ்வ் EV |
ரூ.8 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை |
ரூ.10 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை |
ரூ.17.49 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் |
சமீபத்திய கிராஷ் டெஸ்ட் முடிவுகளுடன் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து டாடா கார்களும் (டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் தவிர) குளோபல் என்சிஏபி அல்லது பாரத் என்சிஏபி அல்லது இரண்டிலும் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளன.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நெக்ஸான் ஏஎம்டி