Toyota Rumion MPV: நீங்கள் இப்போது டீலர்ஷிப்களில் காரை பார்க்கலாம்
published on செப் 01, 2023 04:11 pm by tarun for டொயோட்டா rumion
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது மாருதி எர்டிகாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும், இது உள்ளேயும் வெளியேயும் நுட்பமான ஸ்டைலிங் மாற்றங்களுடன் வருகிறது.
-
ரூமியான் நாடு முழுவதும் உள்ள சில டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது.
-
எர்டிகாவுடன் ஒப்பிடும்போது இது சற்று மாற்றியமைக்கப்பட்ட எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரை பெறுகிறது.
-
7-இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பு, ஆட்டோமெட்டிக் ஏசி, நான்கு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
-
மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெற்றுள்ளது; மேலும் சிஎன்ஜியும் கிடைக்கிறது.
-
விலை ரூ.10.29 லட்சம் முதல் ரூ.13.68 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கிறது.
டொயோட்டா ரூமியான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அது இப்போது சில டீலர்களிடம் வந்துடைந்துள்ளது. உறுதி செய்யப்பட்டபடி அலாய் வீல்கள் மற்றும் ஆட்டோமெட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் மாடல் டாப்-ஸ்பெக் V வேரியன்ட் வருகிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன, மேலும் டெலிவரி செப்டம்பர் 8 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூமியான் ஒரு ரீபேட்ஜ் செய்யப்பட்ட எர்டிகா ஆகும் மற்றும் மற்றும் டொயோட்டா-சுஸூகி பார்ட்னர்ஷிப்பில் இருந்து வரும் நான்காவது ரீபேட்ஜ் செய்யப்பட்ட தயாரிப்பு ஆகும் இருப்பினும், இது மாருதி MPV யில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான முன் தோற்றம் மற்றும் அலாய் வீல்களைப் பெறுகிறது. உட்புறத் கட்டமைப்பு புதியது மற்றபடி ஒரே மாதிரியாக உள்ளது. புதிய டூயல் டோன் சீட் துணி ஃபேப்ரிக் டேஷ்போர்டிற்கு சற்று வித்தியாசமான மர டிரிம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மற்றபடி இன்டீரியர் லேஅவுட் ஒரே மாதிரியாக உள்ளது.
ரூமியான் போர்டில் உள்ள அம்சங்களில் ஆட்டோ-புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும். பாதுகாப்புக்காக நான்கு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உடன் கூடிய ESP (கணினிமயமாக்கப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம்), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: Toyota Innova Hycross ஸ்ட்ராங் ஹைபிரிட் காரை ஃப்ளெக்ஸ் ஃபியூலில் இயங்க வைக்க 7 செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன ?
எர்டிகா -வில் இருக்கும் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (103PS/137Nm) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும். நீங்கள் CNG பவர்டிரெய்னையும் (88PS/121.5Nm) தேர்வு செய்யலாம், இது 26.11 கிமீ/கிலோ மைலேஜ் கிடைக்கும் என டாடா கூறுகிறது.
ரூமியானின் விலை ரூ.10.29 லட்சம் முதல் ரூ.13.68 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும். இந்த டோயோட்டா MPV கியா கேரன்ஸ், மஹிந்திரா மராஸ்ஸோ -விற்கு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: ரூமியான் ஆன் ரோடு விலை