Toyota Innova Hycross ஸ்ட்ராங் ஹ ைபிரிட் காரை ஃப்ளெக்ஸ் ஃபியூலில் இயங்க வைக்க 7 செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன ?
published on ஆகஸ்ட் 31, 2023 04:43 pm by tarun for டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
எத்தனால் நிறைந்த எரிபொருளின் வெவ்வேறு பண்புகளுக்கு ஏற்ப வழக்கமான பெட்ரோல் இன்ஜினில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மின்மயமாக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் எரிபொருளில் இயங்கும் மாதிரி காரை வெளியிட்டார், இது 85 சதவீதம் எத்தனால் கலவையுடன் பசுமையான எரிபொருளில் இயங்கக்கூடியது. இந்த மாதிரி கார் ஹைகிராஸின் 2-லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் பவர்டிரெய்னைப் பயன்படுத்துகிறது, இதனால் கார் எரிபொருளுளையும் மின்சாரத்தையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறது.
அதனால், எத்தனால் கலவையின் அதிக சதவீதத்திற்கு ஏற்ப, டொயோட்டா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இன்ஜின் மற்றும் அதில் தொடர்புடைய பாகங்களில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இவை அனைத்தும் E85 எரிபொருளுக்கு இணங்குவதற்கு செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் ஆகும்:
மோட்டாரால் இயக்கப்படும் VVT
சாதாரணமாக பெட்ரோலில் இயங்கும் இன்ஜின் பூஜ்ஜிய டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் ஸ்டார்ட் ஆகும். எத்தனாலின் சூடாகும் வெப்பநிலை அதிகமாக இருப்பதால், அது குளிர் காலத்தில் தொடக்கத்தில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மற்றும் ஸ்டார்ட் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, எத்தனால் காரின் குளிர் தொடக்க சிக்கல்களை தீர்க்க இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இப்போது மிகவும் குறைவான நெகடிவ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் செயல்படும்.
இன்ஜினுக்குள் மேம்படுத்தப்பட்ட கரோஷன்-ரெசிஸ்டன்ஸ் (அரிப்பு தடுப்பு) சிஸ்டம்
எத்தனாலின் இரசாயன தன்மை பெட்ரோலை விட அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருக்கிறது. மேலும் அதன் நீர் உறிஞ்சும் தன்மையும் அதிகம், ஆகவே அது அதிக அளவில் இன்ஜினை அரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஃப்ளெக்ஸ் எரிபொருள் மாதிரி கார் எத்தனாலுக்கு இணக்கமான ஸ்பார்க் பிளக்குகள், வால்வு மற்றும் வால்வு இருக்கைகள் மற்றும் பிஸ்டன் ரிங்க்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இவை அரிப்பை எதிர்க்கும் மற்றும் தேய்மானம் ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக, உயர்வான-எத்தனால் எரிபொருளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் எந்த பாகமாக இருந்தாலும் அதற்கேற்ப மாற்றத்தை பெற்றுள்ளன..
மேலும் படிக்க: மாருதி இன்விக்டோ vs டோயோட்டா இன்னோவா ஹைகிராஸ் vs கியா கேரன்ஸ்: விலை ஒப்பீடு
த்ரீ-வே கேட்டலிஸ்ட்
எத்தனால்-கொண்டு இயங்கும் கார்களில் மிகவும் மேம்பட்ட த்ரீ-வே கேட்டலிஸ்ட் பயன்படுத்தப்படுகிறது, இது உமிழ்வை கணிசமாகக் குறைக்கிறது. எத்தனால் எரிக்கப்படும் போது, வழக்கமான பெட்ரோலை விட NoX மற்றும் கார்பன் உமிழ்வுகள் தவிர, வெவ்வேறு ஹைட்ரோகார்பன்களையும் உருவாக்குகிறது. ஆகவே இதன் மூலம் BS6 கட்டம் 2 இணக்க விதிமுறைகளுடன் இணங்குகிறது.
உயர் அழுத்த எரிபொருள் இன்ஜெக்டர்கள்
இது பெட்ரோல் இன்ஜினிலிருந்து செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றமாகும். எத்தனால் பெட்ரோலை விட அதிக வெப்பநிலையில் எரிகிறது, மேலும் தேவையான செயல்திறனை உருவாக்க இன்ஜினுக்கு அதிக அளவு தேவைப்படுகிறது. எத்தனால்-கொண்டு இயங்கும் ஹைகிராஸ் உயர் அழுத்த ஃபியூல் இன்ஜெக்டர்களை (டேரக்ட் ஃபியூல் இன்ஜெக்டர்) பயன்படுத்துகிறது, அவை தேவையான ஃப்ளோ ரேட் -டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் வெப்பத்திற்கு எற்றபடி மாற்றமடைவதால் அரிப்பை எதிர்க்கும்.
ஃபியூல் டேங்க் -ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
இன்னோவா ஹைகிராஸின் ஃபியூல் டேங்க் மற்றும் எரிபொருள் குழாயை மாற்றியமைக்க ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு (ஆன்டி-ஆக்ஸிடன்ட்) பொருட்கள் மற்றும் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மீண்டும் அரிப்பு மற்றும் துருப்பிடிக்காமல் இருக்கவும், நீண்ட காலத்திற்கு சீரான எரிபொருள் ஓட்டத்தை உறுதி செய்யவும் உதவுகிறது.
எத்தனால் சென்சார்
வழக்கமான ஹைகிராஸை விட முக்கிய கூடுதலாக, இது ஒரு எத்தனால் சென்சாரை பெறுகிறது, இது எரிபொருளில் எத்தனாலின் கலவை அல்லது செறிவை அளவிடுகிறது. ஃப்ளெக்ஸ் எரிபொருள் சென்சார் இந்த தகவலை இன்ஜினின் மற்ற அம்சங்களை மின்னணு முறையில் சரிசெய்ய சிறப்பு இயந்திரக் கட்டுப்பாட்டு அலகுக்கு (ECU) அனுப்புகிறது. வழக்கமான பெட்ரோல் மாடல்கள் எரிபொருளின் ஆக்டேன் மதிப்பீடுகளைக் கண்டறியும் விதத்தில் இருந்து இது வேறுபட்டதல்ல. மேலும், நீங்கள் E85 பம்ப் அருகில் இல்லாத பட்சத்தில், E20 போன்ற குறைந்த கலவையில் டாப்-அப் செய்ய நேர்ந்தால், இயந்திரத்தின் சீரான செயல்பாடுகளைத் தொடர, உங்கள் எரிபொருள் டேங்கில் உள்ள தற்போதைய கலவையை கணினி மதிப்பீடு செய்ய இது உதவும்.
மேலும் படிக்க: விரைவில் இந்தியாவில் வர இருக்கும் மின்சார கார்கள்
ECU மாற்றங்கள்
ஹைகிராஸ் ஃப்ளெக்ஸ் எரிபொருளின் ECU (இயந்திரக் கட்டுப்பாட்டு அலகு) எத்தனால் சென்சார் மூலம் கண்டறியப்பட்ட எத்தனால் கலவையின் சதவீதத்தின் அடிப்படையில் இயந்திரத்தின் மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்படும் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது மற்றும் அதற்கேற்ப அமைப்புகளை அளவீடு செய்கிறது. இது E20 முதல் E85 வரையிலான வெவ்வேறு சதவீத எத்தனால் கலவையில் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்கிறது, அல்லது வெறும் பெட்ரோலாக இருந்தாலும் கூட, இது தான் ஒரு ஃப்ளக்ஸ் எரிபொருள் வாகனத்தின் வரையறையாகும்.
இன்னோவா ஹைகிராஸ் கார் மின்மயமாக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் ஃபியூலில் 60 சதவிகிதம் மின்சார சக்தியிலும், மீதமுள்ள நேரத்தில் பயோ எரிபொருளிலும் இயங்கும் திறன் கொண்டது. இது 100 சதவிகிதம் எத்தனாலில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃபியூல் காரை விட சிக்கனமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.
இருப்பினும், இது இன்னும் உற்பத்தி செய்யப்படும் கட்டத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது மற்றும் இந்திய சாலைகளுக்கு அதை தயார் செய்வதற்கு முன் பல சோதனைகள் மற்றும் அளவுத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. 2025 ஆம் ஆண்டில், அனைத்து வாகனங்களும் முதல் E20 (எத்தனால் 20 சதவிகிதம் கலவை) இணக்கமாக இருக்கும் மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைப்ரிட் ஃப்ளெக்ஸ் எரிபொருள் மாதிரி இன்னும் 3 முதல் 4 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்திக்குத் தயாராகிவிடும்.
மேலும் படிக்க: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆட்டோமேடிக்
0 out of 0 found this helpful