Toyota Rumion லிமிடெட் ஃபெஸ்டிவல் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on அக்டோபர் 21, 2024 07:49 pm by dipan for டொயோட்டா rumion
- 64 Views
- ஒரு கருத்தை எழுதுக
ருமியான் MPV -யின் இந்த லிமிடெட் எடிஷன் 2024 அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே கிடைக்கும்
-
வெளிப்புறத்தில் உள்ள ஆக்ஸசரீஸ்களில் சில்வர் இன்செர்ட்களுடன் கூடிய பக்கவாட்டு பாடி மோல்டிங் மற்றும் கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன.
-
இன்டீரியரில் மேட்கள் மட்டுமே கூடுதலாகவழங்கப்படும்.
-
ஸ்பெஷல் எடிஷன் ரூமியானின் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கிறது.
-
இன்ஜினில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை; ஸ்டாண்டர்டான மாடலின் 1.5-லிட்டர் இன்ஜினை பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களுடன் பெறுகிறது.
-
விலைகள் ரூ.10.44 லட்சம் முதல் ரூ.13.73 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி).
டொயோட்டா ரூமியான் ஆனது பண்டிகை காலத்தில் ஸ்பெஷல் எடிஷனை பெறும் சமீபத்திய மாடல்களின் பட்டியலில் இணைந்துள்ளது. ரூமியான் லிமிடெட் ஃபெஸ்டிவல் எடிஷன் என அழைக்கப்படும் இதன் அனைத்து வேரியன்ட்களிலும் ரூ.20,608 மதிப்பிலான ஆக்ஸசரீஸ்கள் கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இது இந்த அக்டோபர் இறுதி வரை கிடைக்கும். ஸ்பெஷல் எடிஷனுடன் கிடைக்கும் ஆக்ஸசரீஸ்களை பார்ப்போம்:
இலவச ஆக்ஸசரீஸ்கள்
டெயில்கேட் கார்னிஷ் |
மட் ஃபிளாப்ஸ் |
பின்புற பம்பர் கார்னிஷ் |
இன்ட்டீரியர் மேட்கள் |
நம்பர் பிளேட் கார்னிஷ் |
குரோம் டோர் வைசர் |
கூரையில் பொருத்தப்பட்ட ரியர் ஸ்பாய்லர் |
சில்வர் இன்செர்ட் சைடு பாடி மோல்டிங் |
மொத்த விலை: ரூ.20,608 |
ரூமியான் காரின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும் படிக்க: Toyota Glanza -வின் லிமிடெட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டொயோட்டா ரூமியான் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட 7 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது. இது 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் ஏசி மற்றும் பேடில் ஷிஃப்டர்களையும் கொண்டுள்ளது. இது புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் என்ட்ரி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோலையும் பெறுகிறது. பாதுகாப்புக்காக இது 4 ஏர்பேக்குகள், ஒரு ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மவுண்ட்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் விருப்பங்கள்
இன்ஜின் ஆப்ஷன் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் |
பவர் |
103 PS (பெட்ரோல்), 88 PS (CNG) |
டார்க் |
137 Nm (பெட்ரோல்), 121.5 Nm (CNG) |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
*எம்டி = மேனுவல் டிரான்ஸ்மிஷன்
^AT = ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் (டார்க் கன்வெர்டர்)
டொயோட்டா ரூமியான் 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது சிஎன்ஜி ஆப்ஷன் உடனும் கிடைக்கிறது. பெட்ரோல் வேரியன்ட்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் வருகின்றன. அதே சமயம் சிஎன்ஜி வேரியன்ட்களில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டொயோட்டா ரூமியான் S, G, மற்றும் V என மொத்தம் 3 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.10.44 லட்சம் முதல் ரூ.13.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை இருக்கிறது. இது மாருதி எர்டிகா மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டொயோட்டா ரூமியான் ஆட்டோமெட்டிக்