புதிய Toyota Rumion மிட்-ஸ்பெக் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் அறிமுகம், விலை ரூ.13 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

published on ஏப்ரல் 29, 2024 07:30 pm by rohit for டொயோட்டா rumion

  • 47 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ரூமியான் CNG வேரியன்ட்டுக்கான முன்பதிவுகளை டொயோட்டா மீண்டும் தொடங்கியுள்ளது.

Toyota Rumion G AT automatic variant launched

  • டொயோட்டா இப்போது ரூமியானை மூன்று ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களில் வழங்குகிறது: S AT, G AT (புதியது), மற்றும் V AT.

  • டாப்-ஸ்பெக் V AT வேரியன்ட்டை விட G AT ரூ.73,000 விலை குறைவாக உள்ளது.

  • G AT -க்கான முன்பதிவு இப்போது ரூ.11,000 -க்கு திறக்கப்பட்டுள்ளது; டெலிவரிகள் மே 5, 2024 முதல் தொடங்கும்.

  • ரூமியான் ரூ.11.39 லட்சம் விலையில் ஒரே ஒரு S CNG வேரியன்ட்டில் கிடைக்கிறது.

  • ரூமியான் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றது.

  • எர்டிகா அடிப்படையிலான MPV -யின் விலை ரூ.10.44 லட்சம் முதல் ரூ.13.73 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டொயோட்டா ரூமியான் கார் மாருதி எர்டிகா -வின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து என்டரில் லெவல் டொயோட்டா MPV ஆனது இரண்டு ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது: S மற்றும் V. இப்போது, ​​கார் தயாரிப்பாளர் ரூமியான் காரின் ஆட்டோமெட்டிக் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் புதிய மிட்-ஸ்பெக் G AT வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 29, 2024) முதல் 11,000 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம். டெலிவரிகள் மே மாதம் 5 -ம் தேதி முதல் தொடங்கும்.

புதிய ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் வரிசையில் எவ்வாறு இடம் பெறுகிறது என்பது இங்கே:

வேரியன்ட்

விலை

S AT

ரூ.11.94 லட்சம்

G AT (புதியது)

ரூ.13 லட்சம்

V AT

ரூ.13.73 லட்சம்

புதிய ஆட்டோமெட்டிக் வேரியன்ட் - இது மிட்-ஸ்பெக் ZXi AT எர்டிகாவிற்கு சமமானதாகும் - என்ட்ரில் லெவல் வேரியன்ட்டை விட S AT ரூ. 1.06 லட்சம் அதிகம். ஆனால் ஃபுல்லி லோடட் V AT விட ரூ.73,000 குறைவாக கிடைக்கும். 

மேலும் படிக்க: புதிதாக லீடர் எடிஷனை பெறும் Toyota Fortuner, காருக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன

இன்ஜின் விவரங்கள்

டொயோட்டா ரூமியானை எர்டிகாவிடமிருந்து பெற்ற ஒரே ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (103PS/137Nm) வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கிடைக்கிறது. அதே யூனிட் ஆப்ஷனலான CNG கிட் உடன் வழங்கப்படுகிறது. அவுட்புட் 88 PS மற்றும் 121.5 Nm ஆக அவுட்புட் ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 5-ஸ்பீடு MT உடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

காரில் உள்ள வசதிகள்

Toyota Rumion cabin

மிட்-ஸ்பெக் வேரியன்ட் ஆக இருப்பதால் ரூமியான் G டிரிம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச் ஸ்கிரீன், கனெக்டட் கார் டெக்னாலஜி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் 6-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை ரூமியான் G டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றுடன் வருகிறது.

ரூமியான் CNG விற்பனை இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது

2023 செப்டம்பரில் நிறுத்தப்பட்ட ரூமியான் காரின் CNG வேரியன்ட்டிற்கான முன்பதிவுகளை டொயோட்டா இப்போது மீண்டும் திறந்துள்ளது. ரூமியான் விலை ரூ.11.39 லட்சம் ஒரு S CNG வேரியன்ட்டில் கிடைக்கிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Toyota Rumion

டொயோட்டா ரூமியானின் விலை ரூ.10.44 லட்சம் முதல் ரூ.13.73 லட்சம் வரை இருக்கின்றது. இது மாருதி எர்டிகாவுடன் போட்டியிடுகின்றது. அதே நேரத்தில் பெரிய MPV -களான கியா கேரன்ஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் போன்றவற்றுக்கு குறைவான விலையில் உள்ள மாற்றாக இருக்கும்.

விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

மேலும் படிக்க: ரூமியான் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டொயோட்டா rumion

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience