2025 மார்ச் -ல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து கார்களின் விவரங்கள்
anonymous ஆல் ஏப்ரல் 01, 2025 07:32 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
XUV700 எபோனி போன்ற ஸ்பெஷல் எடிஷன்கள் மட்டுமின்றி மேபெக் SL 680 மோனோகிராம் போன்ற சொகுசு மாடல்களும் மார்ச் மாதம் வெளியாகின.
புதிய மாடல்-இயர் அப்டேட்கள், ஃபேஸ்லிஃப்ட்ஸ் மற்றும் மெர்சிடிஸ்-மேபெக் SL 680 மோனோகிராம் போன்ற சொகுசு கார்களின் வெளியீடு என மார்ச் மாதம் வாடிக்கையாளர்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் கிடைத்தன. இவை மட்டுமல்ல வெகுஜன-சந்தை பிராண்டுகள் மற்றும் பிரீமியம் கார் தயாரிப்பாளர்களும் தங்கள் பங்குக்கு புதிய கார்களை அறிமுகப்படுத்தினர். மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து கார்களையும் அவற்றின் முக்கிய விவரங்களுடன் இங்கே பார்க்கலாம்.
2025 டாடா டியாகோ NRG
விலை: ரூ.7.20 லட்சம் முதல் ரூ.8.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை
டாடா மோட்டார்ஸ் டியாகோ ஹேட்ச்பேக்கை அப்டேட் செய்து NRG வேரியன்ட்டையும் அறிமுகப்படுத்தியது. இதில் வழக்கமான மாடலை விட காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய வடிவிலான பம்பர், தடிமனான ஸ்கிட் பிளேட்டுகள், தடிமனான பாடி கிளாடிங் மற்றும் என்ஆர்ஜி பேட்ஜிங்குடன் கூடிய டெயில்கேட்டில் பெரிய பிளாக் பேனல் ஆகியவவை டியாகோ என்ஆர்ஜி காருக்கு ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொடுக்கின்றன.
10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபி மற்றும் ஃபோல்டபிள் ORVM -கள் போன்ற வசதிகள் அப்படியே இருக்கும். கேபினுக்குள் அனைத்துமே பிளாக் கலரில் இருக்கும். முன்னர் இருந்த 86 PS 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அப்படியே உள்ளது. இது தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் ஆப்ஷன் உடன் வருகிறது.
2025 MG காமெட் EV
விலை: ரூ.7 லட்சம் முதல் ரூ.9.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை
விலை: ரூ.5 லட்சம் முதல் ரூ.7.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பேட்டரி சந்தா திட்டத்துடன்)
எம்ஜியின் என்ட்ரி லெவல் எலக்ட்ரிக் காரான எம்ஜி காமெட் EV ஆனது மாடல்-இயர் அப்டேட்களை பெற்றது. ஆகவே சில வேரியன்ட்களில் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மிட்-ஸ்பெக் எக்சைட் டிரிம் இப்போது எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM -களுடன் ரியர் பார்க்கிங் கேமராவை பெறுகிறது. அதே சமயம் டாப்-ஸ்பெக் பிரத்யேக வேரியன்ட் லீதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தொடர்ந்து 17.3 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது 42 PS/110 Nm எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 230 கிமீ ரேஞ்சை வழங்குகிறது.
2025 ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா
2025 ஸ்லாவியா விலை: ரூ.10.34 லட்சம் முதல் ரூ.18.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை
2025 குஷாக் விலை: ரூ.11 லட்சம் முதல் ரூ.19.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை
ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் இரண்டுக்கும் 2025 மாடல்-இயர் அப்டேட்களை கொடுத்தது. வெளிப்புற அல்லது உட்புற மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும் இரண்டு கார்களின் லோயர்-ஸ்பெக் வேரியன்ட்களும் கனெக்டட் கார் டெக்னாலஜி, அலாய் வீல்கள் மற்றும் சன்ரூஃப் போன்ற புதிய வசதிகளை பெறுகின்றன. இவை காரின் கவர்ச்சியை மேம்படுத்துகின்றன. கூடுதலாக இரண்டு மாடல்களின் அடிப்படை கிளாசிக் வேரியன்ட்களும் இப்போது வயர்டு ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வருகின்றன.
1-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து வழங்கப்படுவதால், பவர்டிரெயினில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் 2025 ஸ்லாவியாவின் விலை 45,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேசமயம் குஷாக் காரின் விலை ரூ.69,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2025 ஏப்ரலில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாப் 5 கார்கள்
2025 மஹிந்திரா XUV700 எபோனி பதிப்பு
2025 XUV700 விலை: 13.99 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) வரை
XUV700 எபோனி விலை: ரூ.19.64 லட்சம் முதல் ரூ.24.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை
மஹிந்திரா நிறுவனம் 2025 XUV700 மட்டுமின்றி அதன் எபோனி பதிப்பையும் அறிமுகப்படுத்தியது. அப்டேட்களில் இரண்டாவது வரிசை பயணிகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர்கள் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயம் எபோனி எடிஷன் ஆல் பிளாக் கலர் தீம் உடன் வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் XUV700 எபோனி எடிஷன் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். இது ஃபிரன்ட்-வீல் டிரைவ் டிரெய்னுடன் மட்டுமே கிடைக்கிறது. இவை தவிர XUV700 எபோனி எடிஷனில் வசதிகள் அல்லது பவர்டிரெய்ன் அடிப்படையில் வேறு எந்த மாற்றமும் இல்லை.
ஜீப் காம்பஸ் சாண்ட் ஸ்டோர்ம்
விலை: ரூ.19.49 லட்சம் முதல் ரூ.27.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை
ஜீப் காம்பஸ் சாண்ட் ஸ்டார்ம் பதிப்பு இந்த எஸ்யூவி -யின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் காட்சி அப்டேட்களுடன் வருகிறது. வெளிப்புறத்தில் உள்ள பானெட், டோர்கள் மற்றும் சி-பில்லரில் டூன்-போன்ற கிராபிக்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உட்புறத்தில் பெய்ஜ் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்ட சீட் கவர்கள், கஸ்டமைஸபிள் கார்பெட்கள் மற்றும் சரக்கு பாய்கள் உள்ளன. முன் மற்றும் பின்புற டாஷ் கேமராக்கள் மற்றும் கஸ்டமைஸபிள் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
சாண்ட்ஸ்டார்ம் பதிப்பில் காம்பஸின் ஸ்போர்ட், லாங்கிட்யூட் அல்லது லாங்கிட்யூட் (ஓ) வேரியன்ட்களுடன் ஆப்ஷனலான ஆட்-ஆன் கிட்டாக வழங்கப்படும் மற்றும் இதன் ரூ. 50,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
2025 பிஒய்டி அட்டோ 3
விலை: ரூ.24.99 லட்சம் முதல் ரூ.33.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை
பிஒய்டி நிறுவனம் வென்டிலேட்டட் முன் வரிசை இருக்கைகள் போன்ற முக்கிய மேம்பாடுகளுடன் பிஒய்டி அட்டோ 3 காரை அப்டேட் செய்துள்ளது. உட்புறத்தில் ஆல் பிளாக் தீம் கொடுக்கப்பட்டுள்ளது, இது முந்தைய டூயல்-டோன் செட்டப்பை ஸ்போர்ட்டியர் டச் -க்கான மாற்றுகிறது. இது 49.92 kWh மற்றும் 60.48 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து கிடைக்கும், ஆனால் இப்போது லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) பேட்டரி டெக்னாலஜி உள்ளது. புதுப்பிக்கப்பட்ட பேட்டரி டெக்னாலஜி 15 வருட ஆயுட்காலம் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஸ்சார்ஜ் உடன் இது மிகச் சிறப்பாக செயல்படும் என பிஒய்டி தெரிவித்துள்ளது.
2025 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட்
விலை: ரூ.65.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
கியா EV6 ஃபேஸ்லிஃப்ட்டுடன், வடிவமைப்பு மாற்றங்கள், உட்புற மேம்பாடுகள் மற்றும் பெரிய 84 kWh பேட்டரி பேக் ஆகியவற்றைக் கொடுத்துள்ளது. புதிய பம்பர், புதிய எல்இடி டிஆர்எல் -கள் மற்றும் ஹெட்லைட்கள் மற்றும் புதிய வடிவிலான 19-இன்ச் அலாய் வீல்களுடன் இது மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது புதிய ஸ்டீயரிங் வீல் உடன் வருகிறது, ஒட்டுமொத்த டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் தளவமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும். பேட்டரி பேக் 325 PS/605 Nm டூயல் எலக்ட்ரிக் மோட்டார் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 663 கி.மீ ரேஞ்சை கொடுக்கிறது.
மேலும் பார்க்க: கியா இவி6: புதிய மற்றும் பழைய மாடல் படங்களில் விளக்கப்பட்டுள்ளது
2025 வோல்வோ XC90 ஃபேஸ்லிஃப்ட்
விலை: ரூ. 1.03 கோடி (எக்ஸ்-ஷோரூம்)
இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்துடன் வால்வோ நிறுவனம் 2025 XC90 ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியது. புதுப்பிக்கப்பட்ட முழு அளவிலான எஸ்யூவி ஆனது புதிய வடிவிலான கிரில், மேம்படுத்தப்பட்ட லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் மிகவும் ரீஃபைன்மென்ட் ஆன தோற்றத்தைக் கொடுக்கிறது. இது ஒரு பெரிய 11.2-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் கூடுதலான இடவசதிக்காக மேம்படுத்தப்பட்ட ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 19-ஸ்பீக்கர் போவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், 4 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS ஆகியவையும் உள்ளன. 2025 XC90 அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 205 PS மற்றும் 360 Nm அவுட்புட்டை கொடுக்கும்.
2025 லெக்ஸஸ் LX
விலை: ரூ.3 கோடி முதல் ரூ.3.12 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை
லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் 2025 எல்எக்ஸ் காரை அறிமுகம் செய்தது. இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: அர்பன் மற்றும் ஓவர்டிரெயில். அர்பன் வேரியன்ட் ஒரு குரோம்-பினிஷ்டு தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஓவர்டிரெயில் பிளாக்-அவுட் ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் ஆஃப்-ரோட் அப்டேட்களுடன் வருகிறது. மேலும் இதன் விலை அர்பன் டிரிமை விட ரூ.12 லட்சம் அதிகம். இரண்டு வேரியண்ட்டுகளும் சென்ட்ரல் டிஃபெரென்ஷியல் லாக் வசதியை கொண்டுள்ளன. ஆனால் ஓவர்டிரெயில் வேரியன்ட் மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோடு திறனுக்காக முன் மற்றும் ரியர் டிஃபெரென்ஷியல் லாக் வசதியை கொண்டுள்ளது.
LX -ன் இரண்டு வேரியன்ட்களும் 3.3-லிட்டர் V6 டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன, இது 309 PS மற்றும் 700 Nm 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2025 லெக்ஸஸ் LX 500d -க்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கியுள்ளன.
2025 லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா
விலை: ரூ.2.59 கோடி (எக்ஸ்-ஷோரூம்)
2025 லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆஃப்-ரோடு மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்களுடன் இது மிகச் சிறந்த வேரியன்ட் ஆகும். இது பரந்த நிலைப்பாடு மற்றும் அதிகரித்த சவாரி உயரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
டிஃபென்டர் ஆக்டாவில் உள்ள மெக்கானிக்கல் அப்டேட்களில் 6டி டைனமிக் சஸ்பென்ஷன் உள்ளது. இது பாடி ரோலைக் குறைக்கிறது மற்றும் வீல் ஆக்ஸென்ட்டை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் பெரிய விஸ்போன்கள் சிறந்த நிலைத்தன்மை மற்றும் சவாரி வசதிக்கு உதவுகின்றன. லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டாவை 110 பாடி ஸ்டைலில் மட்டுமே வழங்கும். டிஃபென்டர் ஆக்டா 635 பிஎஸ் மற்றும் 750 என்எம் அவுட்புட்டை கொடுக்கும் 4.4 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது.
ஆஸ்டன் மார்ட்டின் வான்கிஷ்
விலை: ரூ.8.85 கோடி (எக்ஸ்-ஷோரூம்)
கடந்த ஆண்டு உலகளவில் இதை வெளியிட்ட பிறகு ஆஸ்டன் மார்ட்டின் இந்தியாவில் அதன் ஃபிளாக்ஷிப் காரான வான்கிஷ் காரை அறிமுகப்படுத்தியது . இது ஒரு பெரிய, ஆக்ரோஷமான தோற்றமுடைய கிரில் மற்றும் ஷார்ப்பான LED ஹெட்லைட் அமைப்புடன் கூடிய ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 15-ஸ்பீக்கர் போவர்ஸ் & வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளுடன், டிரைவர்-ஃபோகஸ்டு லே அவுட்டுடன் கூடிய பிரீமியம் பொருட்களை கேபின் கொண்டுள்ளது.
2025 வான்கிஷ் காரில் 5.2 லிட்டர் ட்வின்-டர்போ V12 பெட்ரோல் இன்ஜின் உள்ளது இது 835 PS மற்றும் 1000 Nm அவுட்புட்டை கொடுக்கிறது, இது வெறும் 3.3 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை எட்ட உதவுகிறது.
மெர்சிடிஸ்-மேபெக் SL 680 மோனோகிராம்
விலை: ரூ 4.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்)
மேபேக் சிகிச்சையைப் பெற்ற முதல் SL மாடலான மெர்சிடிஸ்-மேபெக் SL 680 மோனோகிராம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு மூன்று யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. SL 680 ஆனது 21-இன்ச் அலாய் வீல்களுடன், ஆங்குலர் LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்களுடன் வருகிறது. உள்ளே இது 11.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), ஹீட்டிங் ஃபங்ஷன் கொண்ட ஸ்டீயரிங் மற்றும் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் டூயல்-டோன் பிளாக்-வொயிட் கேபின் தீம் உடன் வருகிறது.
இதில் 4-லிட்டர் V8 இன்ஜின் உள்ளது, இது 585 PS மற்றும் 800 Nm அவுட்புட்டை கொடுக்கிறது, இது 9-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 4.1 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்ட உதவுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள எந்த காரை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.