• English
    • Login / Register

    Tata Punch CNG: ரூ.7.10 லட்சம் தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    டாடா பன்ச் க்காக ஆகஸ்ட் 04, 2023 02:08 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 49 Views
    • ஒரு கருத்தை எழுதுக

      

    டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வேரியன்ட்கள் அவற்றின் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை விட ரூ 1.61 லட்சம் வரை கூடுதலான விலையில் கிடைக்கும்.

    Tata Punch CNG

    •      டாடா நிறுவனம் டியாகோ மற்றும் டாடா டிகோரின் சிஎன்ஜி பவர் ட்ரெயின்களையும் புதுப்பித்துள்ளது.
    •      டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் -ன் சிஎன்ஜி வேரியன்ட்கள் ரூ.5,000 விலை அதிகரித்துள்ளன.
    •      பன்ச் சிஎன்ஜி ஆனது ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி -யின் 73.5PS/103Nm 1.2-லிட்டர் பெட்ரோல் பவர்டிரெய்னைப் பெறுகிறது.
    •      டாடா 73.5PS/95Nm 1.2 லிட்டர் பெட்ரோல் பவர்டிரெய்னுடன் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி -யை கொடுக்கிறது.
    •      பன்ச் சிஎன்ஜி ஆனது வாய்ஸ்-என்பில்டு  சன்ரூஃப், இரண்டு முன் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்ற புதிய அம்சங்களை பெறுகிறது.

    டாடா நிறுவனம் ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி -யின் அறிமுகத்தைத் தொடர்ந்து, தற்போது அதே ஃபார்முலாவை டாடா பன்ச் காரிலும் பயன்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி மாடல்களுக்கும் அதே வசதியை கொடுத்துள்ளது. புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட டாடா சிஎன்ஜி மாடல்களுக்கான முழு விலைப் பட்டியல் இதோ:

    பன்ச்

    வேரியன்ட்

    விலை

    பியூர் சிஎன்ஜி

    ரூ. 7.10 லட்சம்

    அட்வென்ச்சர் சிஎன்ஜி

    ரூ. 7.85 லட்சம்

    அட்வென்ச்சர் ரிதம் சிஎன்ஜி

    ரூ. 8.20 லட்சம்

    அக்கம்பிளிஸ்டு சிஎன்ஜி

    ரூ. 8.85 லட்சம்

    அக்கம்பிளிஸ்டு டேஸில் S சிஎன்ஜி

    ரூ. 9.68 லட்சம்

    • பன்ச் காரின் சிஎன்ஜி ரேஞ்ச் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை விட ரூ.1.61 லட்சம் வரை கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.

    டியாகோ

    Tata Tiago CNG

    வேரியன்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    XE சிஎன்ஜி

    ரூ. 6.50 லட்சம்

    ரூ. 6.55 லட்சம்

    +ரூ. 5,000

    XM சிஎன்ஜி

    ரூ. 6.85 லட்சம்

    ரூ. 6.90 லட்சம்

    +ரூ. 5,000

    XT சிஎன்ஜி

    ரூ. 7.30 லட்சம்

    ரூ. 7.35 லட்சம்

    +ரூ. 5,000

    XZ+ சிஎன்ஜி

    ரூ. 8.05 லட்சம்

    ரூ. 8.10 லட்சம்

    +ரூ. 5,000

    XZ+ DT சிஎன்ஜி

    ரூ. 8.15 லட்சம்

    ரூ. 8.20 லட்சம்

    +ரூ. 5,000

    XT NRG சிஎன்ஜி

    ரூ. 7.60 லட்சம்

    ரூ. 7.65 லட்சம்

    +ரூ. 5,000

    XZ NRG சிஎன்ஜி

    ரூ. 8.05 லட்சம்

    ரூ. 8.10 லட்சம்

    +ரூ. 5,000

    •   புதிய ட்வின் சிலிண்டர் தொழில்நுட்ப அப்டேட் மூலம், டியாகோ சிஎன்ஜியின் விலை ஒரே மாதிரியாக ரூ.5,000 உயர்த்தப்பட்டுள்ளது.

    •    டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜியின் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கும் இதே விலை உயர்வு பொருந்தும்.

    இதையும் படியுங்கள்: 2022 டாடா டியாகோ iCNG: முதல் டிரைவ் விமர்சனம்

    டிகோர்

    Tata Tigor CNG

    வேரியன்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    XM சிஎன்ஜி

    ரூ. 7.75 லட்சம்

    ரூ. 7.80 லட்சம்

    +ரூ. 5,000

    XZ சிஎன்ஜி

    ரூ. 8.15 லட்சம்

    ரூ. 8.20 லட்சம்

    +ரூ. 5,000

    XZ+ சிஎன்ஜி

    ரூ. 8.80 லட்சம்

    ரூ. 8.85 லட்சம்

    +ரூ. 5,000

    XZ+ லெதரைட் பேக் சிஎன்ஜி

    ரூ. 8.90 லட்சம்

    ரூ. 8.95 லட்சம்

    +ரூ. 5,000

    • டிகோர் சிஎன்ஜி இப்போது ஒரே மாதிரியாக ரூ.5,000 விலை உயர்வை பெற்றுள்ளது.

    ஷேர் செய்யப்படும் பவர்டிரெய்ன்

    பன்ச் சிஎன்ஜி அதன் பவர்டிரெய்னை அல்ட்ராஸ் சிஎன்ஜியுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த யூனிட் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின்  (73.5PS/103Nm), 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மோடில், இது டியாகோ-டிகோர் ஆகிய கார்களில் 86PS மற்றும் 113Nm அவுட்புட்டை கொடுக்கிறது, அதே நேரத்தில் பன்ச் மற்றும் ஆல்ட்ரோஸ் -ல் 88PS/115Nm உற்பத்தி செய்கிறது. டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி மோடில் 73.5PS/95Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மூன்று சிஎன்ஜி கார்களிலும் 5-ஸ்பீடு MT மட்டுமே கிடைக்கும்.

    Tata Punch CNG voice-enabled single-pane sunroof
    Tata Punch CNG front armrests

    என்னென்ன வசதிகள் கிடைக்கும்

    பன்ச் சிஎன்ஜி ஆனது வாய்ஸ்-எனபில்டு சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஒரு USB டைப்-C சார்ஜிங் போர்ட் மற்றும் முன் ஆர்ம்ரெஸ்ட்கள் போன்ற சில முக்கிய அப்டேட்களை பெறுகிறது. இவை தவிர, இப்போது இந்த காரில் கிடைக்கும் 7-இன்ச் டச் ஸ்கிரீன், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரிவர்சிங் கேமரா போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

    டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி மாடல்களில் அவற்றின் அம்சங்களில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. அவை 7-இன்ச் டச் ஸ்கிரீன், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றுடன் தொடர்ந்து வருகின்றன. அவர்களின் பாதுகாப்பு வசதியை பொறுத்தவரையில் இரண்டு முன்பக்க ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    போட்டியாளர்கள்

    Tata Tiago, Tigor, Altroz and Punch CNG

    டாடா டியாகோ சிஎன்ஜியின் நேரடி போட்டியாளர்களாக மாருதி செலிரியோ மற்றும் வேகன் ஆர் சிஎன்ஜி, டிகோர் சிஎன்ஜி மாருதி டிசையர் மற்றும் ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி ஆகிய கார்கள் இருக்கின்றன. மறுபுறம், பன்ச் சிஎன்ஜியின் ஒரே போட்டியாளராக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி இருக்கும்.

    மேலும் படிக்க: டாடா பன்ச் AMT

      

    was this article helpful ?

    Write your Comment on Tata பன்ச்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience