20 லட்சம் எஸ்யூவி கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை Punch EV, Nexon EV, Harrier மற்றும் Safari ஆகியவற்றுக்கான சிறப்பு தள்ளுபடியுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டாடுகிறது
published on ஜூலை 10, 2024 06:38 pm by samarth for டாடா நிக்சன்
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
7 லட்சம் நெக்ஸான்களின் விற்பனையைக் கொண்டாடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான் சலுகைகளின் கால அளவையும் டாடா நீட்டித்துள்ளது.
-
இந்தியாவில் 20 லட்சம் எஸ்யூவி -கள் விற்பனை என்ற மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டியுள்ளது. ஆகவே அதைக் கொண்டாடும் வகையில் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
-
ஹாரியர் மற்றும் சஃபாரி விலை குறைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விலை தற்போது ரூ.14.99 லட்சம் மற்றும் ரூ.15.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.
-
மேலும் டாடா தனது மிகப்பெரிய எஸ்யூவி -களில் ரூ.1.4 லட்சம் வரை ஆஃபர்களை வழங்குகிறது.
-
நெக்ஸான் EV மற்றும் பன்ச் EV ஆகியவற்றில் ரூ.1.3 லட்சம் மற்றும் ரூ.30,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்.
-
கடந்த மாதம் டாடா நெக்ஸான் காரில் கிடைத்த சலுகைகள் இந்த மாதத்திலும் அப்படியே தொடரும்
-
இந்த சலுகைகள் வரும் ஜூலை 31 வரை செல்லுபடியாகும்.
இந்தியாவில் எஸ்யூவி -கள் மீதான மோகம் 2010 -களின் நடுப்பகுதியில் மக்களிடயே உருவானாலும் கூட டாடா மோட்டார்ஸ் 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எஸ்யூவி -களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இப்போது டாடா நிறுவனம் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை உள்ளடக்கிய எஸ்யூவி விற்பனையில் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. மேலும் அதை கொண்டாடும் வகையில் சலுகைகளை அறிவித்துள்ளது அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ரூ.1.4 லட்சம் வரையிலான ஆஃபர்கள்
டாடா மோட்டார்ஸ் "கிங் ஆஃப் எஸ்யூவிகள்" பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சஃபாரி மற்றும் இந்த ஹாரியர் என இரண்டு ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -களின் விலை குறைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விலை காரணமாக இப்போது சஃபாரி காரில் விலை ரூ.15.49 லட்சத்திலும் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ஹாரியர் காரின் விலை ரூ.14.99 லட்சத்திலும் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. ஆகவே இந்த காலகட்டத்தில் இந்த எஸ்யூவி -களின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களில் வாடிக்கையாளர்கள் ரூ.1.4 லட்சம் பலன்களை பெறலாம்.
மேலும் டாடா நெக்ஸான் (7 ஆண்டு கொண்டாட்ட சலுகை) காருக்கான தள்ளுபடிகள் இந்த மாதத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 1 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்கலாம்.
மேலும் படிக்க: Tata Nexon சிறப்பு தள்ளுபடியுடன் 7 லட்சம் விற்பனை மைல்கல்லை கொண்டாடுகிறது
டாடா EV -களுக்கான ஆஃபர்கள்
EV ரேஞ்சில் நெக்சன் இவி -க்கு ரூ. 1.3 லட்சம் வரையிலும் பன்ச் EV -க்கு ரூ.30,000 வரையிலும் ஆஃபர்கள் கிடைக்கும். வேரியன்ட்டை பொறுத்து இறுதி தள்ளுபடிகள் இருக்கலாம். ஜூலை 31 -ம் தேதிக்கு முன்னர் டாடா எஸ்யூவி -யை முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும்.
டாடா -வின் எஸ்யூவி லைன்அப்
டாடா நிறுவனம் தற்போது நான்கு ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) எஸ்யூவி -களை விற்பனை செய்கிறது: டாடா பன்ச் (ரூ. 6.13 லட்சம்), நெக்ஸான் (ரூ. 8 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது), ஹாரியர் (இப்போது ரூ. 14.99 லட்சத்தில் தொடங்குகிறது). மற்றும் ஃபிளாக்ஷிப் சஃபாரி (இப்போது ரூ.15.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது). டாடாவின் EV ரேஞ்சை பொறுத்தவரையில், டாடா இரண்டு எஸ்யூவி -களை வழங்குகிறது: பன்ச் EV (ரூ. 10.99 லட்சத்தில் தொடங்குகிறது) மற்றும் நெக்ஸான் EV (ரூ. 14.49 லட்சத்தில் தொடங்குகிறது).
டாடா கர்வ்வ், டாடா கர்வ்வ் EV, டாடா ஹாரியர் EV, டாடா சியரா மற்றும் டாடா நெக்ஸான் CNG போன்ற வரவிருக்கும் மாடல்களுடன் இந்த வரிசையை மேலும் விரிவுபடுத்த டாடா தயாராகி வருகிறது.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை (டெல்லி)
கார்கள் தொடர்பான ரெகுலர் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
மேலும் படிக்க: நெக்ஸான் AMT
0 out of 0 found this helpful