• English
  • Login / Register

Skoda Kylaq மற்றும் Tata Nexon: BNCAP மதிப்பீடுகள் ஓர் ஒப்பீடு

published on ஜனவரி 20, 2025 07:57 pm by shreyash for டாடா நிக்சன்

  • 8 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இரண்டு சப்காம்பாக்ட் எஸ்யூவி -களும் 5-ஸ்டார் மதிப்பீடு கொண்டவை. நெக்ஸானுடன் ஒப்பிடும்போது கைலாக் டிரைவரின் கால்களுக்கு சற்று கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது.

Skoda Kylaq VS Tata Nexon BNCAP ratings

இந்தியாவில் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் புதிதாக நுழைந்த ஸ்கோடா கைலாக் கார் சமீபத்தில் பாரத் NCAP ஆல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தபடியே கைலாக் ஆனது 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது. கைலாக் டாடா நெக்ஸானுக்கு நேரடி போட்டியாகக் இருக்கும். இது BNCAP -லிருந்து அதே மதிப்பீட்டை பெற்றது. கைலாக் மற்றும் நெக்ஸானின் கிராஷ் டெஸ்ட் முடிவுகளை இங்கே விரிவாக ஒப்பிட்டுப் பார்ப்போம்.

முடிவுகள்

அளவீடுகள்

ஸ்கோடா கைலாக்

டாடா நெக்ஸான்

பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP) மதிப்பெண் 

30.88/32

29.41/32

குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP) மதிப்பெண்

45/49

43.83/49

பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடு

5-ஸ்டார்

5-ஸ்டார்

குழந்தைகளுக்கான மதிப்பீடு

5-ஸ்டார்

5-ஸ்டார்

ஃபிரன்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் ஸ்கோர்

15.04/16

14.65/16

சைட் மூவபிள் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட் ஸ்கோர்

15.84/16

14.76/16

டைனமிக் ஸ்கோர் (குழந்தைகளுக்கான பாதுகாப்பு)

24/24

22.83/24

ஸ்கோடா கைலாக்

Skoda Kylaq

முன் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் சோதனையில் தொடங்கி ஸ்கோடா கைலாக் டிரைவர் மற்றும் இணை ஓட்டுநரின் தலை மற்றும் கழுத்துக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்கியது. அதே நேரத்தில் ஓட்டுநரின் மார்புக்கு வழங்கப்படும் பாதுகாப்பு 'போதுமானதாக' மதிப்பிடப்பட்டது. இணை ஓட்டுநரின் மார்புக்கு ‘நல்ல’ பாதுகாப்பு கிடைத்தது. மேலும் ஓட்டுநரின் இடது காலுக்கு 'போதுமான' பாதுகாப்பு கிடைத்தது. அதே நேரத்தில் முன் பயணிகளின் இடது மற்றும் வலது கால்கள் இரண்டும் 'நல்ல' பாதுகாப்பைப் பெற்றன. சைட் மூவபிள் டிஃபார்மபிள் பேரியர் சோதனையில் ஓட்டுநரின் மார்புக்கு வழங்கப்படும் பாதுகாப்பு 'போதுமானதாக இருந்தது. அதே நேரத்தில் தலை மற்றும் வயிற்றுக்கான பாதுகாப்பு நன்றாக இருந்தது. பக்கவாட்டு சோதனையில் ஓட்டுநரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதி அனைத்துக்கும் நல்ல பாதுகாப்பு கிடைத்தது.

18 மாத மற்றும் 3 வயது குழந்தைகளுக்கு டைனமிக் மதிப்பெண் 8 -க்கு 8 மற்றும் 4 -க்கு 4 முன் மற்றும் பக்கத்திற்கு ஆகியவற்றுக்கு கிடைத்தது.

டாடா நெக்ஸான்

Tata Nexon

முன்பக்க கிராஷ் டெஸ்ட் டாடா நெக்ஸான் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு நல்ல பாதுகாப்பை கிடைத்தது. ஓட்டுநரின் மார்புக்கான பாதுகாப்பு போதுமான மதிப்பீடு கிடைத்தது. அதே நேரத்தில் இணை ஓட்டுநருக்கு இது நல்லது என்ற மதிப்பீடு கிடைத்தது. ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுநரின் இரு கால்களுக்கும் போதிய பாதுகாப்பு கிடைத்தது. பக்க அசையும் தடை சோதனைக்கான முடிவுகள், கைலாக்கை போலவே இருந்தன. இதில் டிரைவரின் தலை மற்றும் வயிற்றுப் பகுதிக்கான பாதுகாப்பு நன்றாக மதிப்பிடப்பட்டது. அதே நேரத்தில் மார்பு போதுமான மதிப்பீட்டைப் பெற்றது. இதேபோல் ஓட்டுநரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதி அனைத்தும் பக்கவாட்டு சோதனையில் நல்ல பாதுகாப்பைப் பெற்றன.

18 மாத குழந்தையின் முன் மற்றும் பக்க பாதுகாப்பிற்கு, டைனமிக் ஸ்கோர் முறையே 8 -க்கு 7 மற்றும் 4 -க்கு 4 ஆகும். அதேபோல 3 வயது குழந்தைக்கு டைனமிக் மதிப்பெண் 8 -க்கு 7.83 ஆகவும், 4 -க்கு 4 ஆகவும் இருந்தது. 

முக்கிய விவரங்கள்

கைலாக் முன்பக்க விபத்து சோதனையில் அதிக மதிப்பெண்களைப் பெற்றது. ஏனெனில் இது நெக்ஸானுடன் ஒப்பிடும்போது கோ டிரைவரின் இடது மற்றும் வலது கால்கள் மற்றும் ஓட்டுநரின் வலது கால் ஆகிய இரண்டிற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கியது. இது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அதிக டைனமிக் மதிப்பெண்களைப் பெற்றது. இதன் காரணமாக ஸ்கோடா எஸ்யூவி -யின் ஒட்டுமொத்த குழந்தைகளின் பாதுகாப்பு மதிப்பெண் டாடா எஸ்யூ -வியை விட அதிகமாக உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

ஸ்கோடா கைலாக் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரண்டும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் EBD உடன் ABS போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது. இருப்பினும் டாடா நெக்ஸான் ஸ்கோடா கைலாக் மீது 360 டிகிரி கேமராவுடன் வருகிறது. பிந்தையது பின்புற பார்க்கிங் கேமராவுடன் மட்டுமே வருகிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

ஸ்கோடா கைலாக்

டாடா நெக்ஸான்

ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம்

ரூ.8 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம் வரை

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

இந்த இரண்டு எஸ்யூவி -களும் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Tata நிக்சன்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience