நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது 2024 Maruti Dzire
published on செப் 27, 2024 05:11 pm by shreyash for மாருதி டிசையர்
- 81 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய தலைமுறை டிசையர் முற்றிலும் புதிய வடிவமைப்பு, ஸ்விஃப்ட் காரை போலவே டேஷ்போர்டு மற்றும் புதிய 1.2-லிட்டர் 3 சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றுடன் வரலாம்.
-
புதிய கிரில், ஸ்லீக்கர் ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகிய மாற்றங்கள் இந்த காரில் இருக்கலாம்.
-
உள்ளே, பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் கேபின் தீம் கிடைக்கும்.
-
போர்டில் உள்ள வசதிகளில் 9-இன்ச் டச் ஸ்கிரீன், சிங்கிள் பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 6 ஸ்டாண்டர்டான ஏர்பேக்குகள் ஆகியவை கொடுக்கப்படலாம்.
-
ஸ்விஃப்ட்டின் 82 PS 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதிலும் கொடுக்கப்படலாம்.
-
விலை ரூ.6.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான சப்காம்பாக்ட் செடான்களில் ஒன்றான மாருதி டிசையர் இந்த ஆண்டு ஒரு ஜெனரேஷன் அப்டேட்டுக்கு தயாராகியுள்ளது. இது நவம்பர் 4, 2024 அன்று அறிமுகப்படுத்தப்படும். 2024 மாருதி டிசையர் காரின் வெளிப்புற வடிவமைப்பில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உட்புறங்களிலும் நிறைய விஷயங்கள் மாற்றம் செய்யப்படலாம். மேலும் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் புதிய ஸ்விஃப்ட் காரில் இருந்து கடன் வாங்கப்படும். புதிய தலைமுறை டிசையரில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய விவரங்கள் இங்கே.
வடிவமைப்பு
முந்தைய தலைமுறை காரில் "ஸ்விஃப்ட்" பெயர் நீக்கப்பட்டது. அதுபோல வரவிருக்கும் புதிய-ஜென் டிசையர் வடிவமைப்பின் அடிப்படையில் ஸ்விஃப்ட்டிலிருந்து விலகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றங்களில் பெரிய கிரில், ஸ்லீக்கர் ஹெட்லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும் புதிய டெயில் லைட்களையும் பெறலாம் மேலும் இவை அனைத்தும் நவீன LED லைட் எலமென்ட்களும் கொடுக்கப்படலாம்.
மேலும் பார்க்க: மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: சிஎன்ஜி விவரக்குறிப்புகள் ஒப்பிடும்போது
கேபின் அப்டேட்கள் & எதிர்பார்க்கப்படும் வசதிகள்
மாருதி ஸ்விஃப்ட் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது
உள்ளே புதிய தலைமுறை டிசையர் அதன் பழைய பதிப்பைப் போலவே டூயல்-டோன் பிளாக் மற்றும் பீஜ் கேபின் தீம் உடன் வரக்கூடும். இருப்பினும் டாஷ்போர்டு செட்டப் 2024 ஸ்விஃப்ட் போலவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் மாருதி புதிய டிசையரை வழங்க வாய்ப்புள்ளது. 2024 டிசையர் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்த வசதியுடன் வரும் முதல்-இன்-செக்மென்ட் சப்காம்பாக்ட் செடானாகவும் இது மாறும்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மாருதி 2024 டிசையரை புதிய Z-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கும். இது 2024 ஸ்விஃப்ட்டில் அறிமுகமானது. விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் |
பவர் |
82 PS |
டார்க் |
112 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT |
ஒரு சிஎன்ஜி பவர்டிரெய்னின் ஆப்ஷன் பின்னர் அறிமுகப்படுத்தப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 மாருதி டிசையர் காரின் ஆரம்ப விலை ரூ.6.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர், மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மற்ற சப்காம்பாக்ட் செடான்களுடன் போட்டியிடும்
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful