- + 12படங்கள்
- + 1நிறங்கள்
மாருதி இ vitara
change carமாருதி இ vitara இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 550 km |
பேட்டரி திறன் | 60 kwh |
இ vitara சமீபகால மேம்பாடு
மாருதி eVX -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
சமீபத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இ விட்டாரா என்று பெயரிடப்பட்டுள்ள மாருதி eVX -ன் தயாரிப்புக்கு தயாராகவுள்ள பதிப்பை சுஸூகி வெளியிட்டுள்ளது. தயாரிப்புக்கு தயாராகவுள்ள ஸ்பெக் eVX 2025 -க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி eVX-ன் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?
இதன் விலை ரூ.22 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி eVX என்ன வசதிகளை கொண்டிருக்கும் ?
மாருதியின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது இன்டெகிரேட்டட் டூயல் ஸ்கிரீன் செட்டப்பை பெறும் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளேக்காகவும்). இது ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி eVX உடன் என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் கிடைக்கும்?
eVX -ன் ஐரோப்பிய-ஸ்பெக் பதிப்பு இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது: 49 kWh மற்றும் 61 kWh.
-
49 kWh: 144 PS மற்றும் 189 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் உடன் ஃபிரன்ட்-வீல் டிரைவ் உள்ளது.
-
61 kWh: 2-வீல்-டிரைவ் (2WD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. முந்தையது 174 PS மற்றும் 189 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொன்று 184 PS மற்றும் 300 Nm அவுட்புட்டை கொடுக்கும் அதிக சக்திவாய்ந்த மோட்டாரை கொண்டுள்ளது.
eVX 550 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி eVX -ல் என்ன பாதுகாப்பு வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ?
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை இருக்கும்.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
eVX ஆனது MG ZS EV, டாடா கர்வ் EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்றவற்றுடன் போட்டியிடும்.
மாருதி இ vitara இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- மாருதியின் முதல் முழு மின்சார எஸ்யூவி
- கோரப்பட்ட வரம்பு 550 கிமீக்கு அருகில் இருக்கலாம்
- ஆல் வீல் டிரைவிற்காக டூயல் மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும்
நாம் விரும்பாத விஷயங்கள்
- ஆல்-வீல் டிரைவ் இந்திய சந்தைக்கு கொடுக்கப்படாமல் போகலாம்