இனிமேல் Maruti Alto K10 -ல் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக கிடைக்கும்
dipan ஆல் மார்ச் 03, 2025 09:30 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
கூடுதல் ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டது மட்டுமல்லாமல் ஆல்டோ K10 -ன் பவர் மற்றும் டார்க் அவுட்புட்டும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
7-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் மேனுவல் ஏசி உள்ளிட்ட வசதிகளுடன் வேறு எந்த மாற்றமும் இல்லை.
-
பாதுகாப்புக்கு உள்ள மற்ற விஷயங்களில் EBD, ESC மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் கொண்ட ABS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
இது 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜினுடன் வருகிறது. அது இப்போது 68.5 PS மற்றும் 91 Nm (1.5 PS மற்றும் 2 Nm) அவுட்புட்டை கொடுக்கிறது.
-
ஆப்ஷனலான CNG பவர்டிரெய்னிலும் கிடைக்கிறது. இது 57 PS மற்றும் 82 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
-
இதன் விலை ரூ.4.09 லட்சத்தில் இருந்து ரூ.6.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக உள்ளது.
மாருதி செலிரியோ மற்றும் பிரெஸ்ஸா சமீபத்தில் 6 ஏர்பேக்குகளுடன் (ஸ்டாண்டர்டாக) அப்டேட் செய்யப்பட்டதை போலவே இப்போது மாருதி ஆல்டோ K10 காருக்கும் அதே அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்டோ K10 ஆனது ஸ்டாண்டர்ட், LXi, VXi மற்றும் VXi பிளஸ் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. முன்னர் டூயல் ஏர்பேக்குகள் மட்டுமே இதில் கிடைத்தன. இப்போது, இந்த அனைத்து வேரியன்ட்களிலும் டிரைவர் மற்றும் பயணிகள் ஏர்பேக்குகள், கர்ட்டெயின் ஏர்பேக்குகள் மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் உள்ளன. ஆகவே காரிலுள்ள் மொத்த ஏர்பேக்குகளில் எண்ணிக்கை 6 ஆக மாறியுள்ளது. இதைத் தவிர ஆல்டோ K10 -க்கு வேறு எந்த அப்டேட்டும் வழங்கப்படவில்லை.
காரில் உள்ள மற்ற பாதுகாப்பு வசதிகள்
இதில் 6 ஏர்பேக்குகள் தவிர ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட், இன்ஜின் இம்மொபிலைசர் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன .
மேலும் படிக்க: இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 10 CNG கார்கள்
கம்ஃபோர்ட் மற்றும் வசதிகள்
7-இன்ச் டச் ஸ்கிரீன், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், முன் பவர் ஜன்னல்கள், மேனுவல் ஏசி, கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்
இப்போது மாருதி ஆல்டோ K10 -ல் 1-லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இப்போது இதன் அவுட்புட் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹேட்ச்பேக் சிஎன்ஜி ஆப்ஷன் உடன் கிடைக்கிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி |
பவர் |
68.5 PS |
57 PS |
டார்க் |
91 Nm |
82 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT / 5-ஸ்பீடு AMT* |
5-ஸ்பீடு MT |
மைலேஜ் (கிளைம்டு) |
24.39 கி.மீ/லி (MT) / 24.90 (AMT) |
33.40 கி.மீ/கிலோ |
*AMT = ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்
பெட்ரோல் இன்ஜின் 1.5 PS மற்றும் 2 Nm -க்கு கொஞ்சம் அதிகமாக அவுட்புட் கொடுக்கிறது. இருப்பினும் CNG ஆப்ஷன் அவுட்புட் புள்ளிவிவரங்கள் முன்பு போலவே உள்ளன.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி ஆல்டோ K10 காரின் விலை ரூ.4.09 லட்சம் முதல் ரூ.6.05 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. இது ரெனால்ட் க்விட் காருக்கு போட்டியாக இருக்கும். மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ -க்கு மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.