ஃபேக்டரியில் CNG ஆப்ஷன் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் டாப் 10 விலை குறைவான கார்கள்
published on ஜூலை 09, 2024 05:48 pm by samarth for மாருதி ஆல்டோ கே10
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த பட்டியலில் ஹேட்ச்பேக்குகளை அதிகம் பார்க்க முடிகிறது. அதே சமயம் இரண்டு சப்-காம்பாக்ட் செடான்களும் உள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் பெட்ரோல் விலை வேகமாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் CNG மற்றும் EV -கள் என பசுமையான வழிகளுக்கு மாறுவதை சமீபத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. தற்போது கார் சந்தையில் மிகவும் பிரபலமான மாற்று எரிபொருள் விருப்பம் CNG ஆகும். இது சிறந்த மைலேஜை வழங்குகிறது மற்றும் ஒப்பீட்டளவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் உள்ளது. நீங்கள் CNG காரை வாங்க திட்டமிட்டிருந்தால் நீங்கள் இங்கே ஃபேக்டரியிலேயே CNG ஆப்ஷன் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் முதல் 10 விலை குறைவான மாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
மாருதி ஆல்டோ K10
-
இருப்பதிலேயே விலை குறைவான CNG காரைத் தேடுகிறீர்களானால் மாருதியின் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்கான ஆல்டோ K10 உங்களுக்குக்கான முதல் ஆப்ஷன் ஆகும்.
-
இது இரண்டு மிட்-ஸ்பெக் வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: Lxi மற்றும் Vxi மற்றும் 1-லிட்டர் பெட்ரோல்-CNG இன்ஜின் (CNG மோடில் 57 PS/82 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இது கிடைக்கும்.
-
ஆல்டோ K10 CNG -யின் விலை ரூ.5.74 லட்சத்தில் இருந்து ரூ.5.96 லட்சம் வரை உள்ளது.
மாருதி எஸ்-பிரஸ்ஸோ
-
மாருதி எஸ்-பிரஸ்ஸோ அதன் இரண்டு மிட்-ஸ்பெக் வேரியன்ட்களான Lxi மற்றும் Vxi ஆகியவற்றில் CNG ஆப்ஷனை பெறுகிறது.
-
S-பிரெஸ்ஸோ -வின் CNG வேரியன்ட்கள் 1-லிட்டர் பெட்ரோல்-CNG யூனிட் மூலம் இயக்கப்படுகின்றன. இது CNG மோடில் 57 PS மற்றும் 82 Nm வரை அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
-
மாருதி எஸ்-பிரஸ்ஸோ CNG -யை ரூ.5.92 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம் வரை விற்பனை செய்கிறது.
மாருதி வேகன் R
-
மாருதியின் மற்றொரு காரான மாருதி வேகன் R CNG பவர்டிரெய்னுடன் கிடைக்கும்.
-
காம்பாக்ட் ஹேட்ச்பேக்கின் லோவர்-ஸ்பெக் Lxi மற்றும் Vxi வேரியன்ட்களில் ஆப்ஷனலாக CNG கிட்டை மாருதி வழங்குகிறது. இது வேகன் R காரின் 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (CNG மோடில் 57 PS/ 82 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது.
-
ஹேட்ச்பேக் 1.2-லிட்டர் பெட்ரோல் பவர்டிரெய்னிலும் கிடைக்கிறது. ஆனால் அதில் CNG ஆப்ஷன் வழங்கப்படவில்லை.
-
வேகன் R காரின் CNG வேரியன்ட்களின் விலை ரூ.6.45 லட்சம் மற்றும் ரூ.6.89 லட்சம் வரை உள்ளது.
மாருதி இகோ
-
இந்திய கார் சந்தையில் நிறைய நபர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கார்களில் ஒன்று மாருதி இகோ ஆகும். தனியார் தேவைகளுக்காக இது பயன்படும். மேலும் இது மாருதியின் அதிகமாக விற்பனையாகும் தயாரிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
-
இகோ 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளில் கிடைக்கிறது. ஆனால் CNG ஆப்ஷன் 5-சீட்டர் AC (O) வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
-
இகோ ஆனது 1.2 லிட்டர் பெட்ரோல்-CNG இன்ஜினுடன் 72 PS மற்றும் 95 Nm அவுட்புட்டை CNG மோடில் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு MT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
மாருதி இகோ CNG -யை ரூ.6.58 லட்சம் விலையில் விற்பனை செய்கிறது.
மேலும் படிக்க: 2024 ஜூலை மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் கார்களின் விவரங்கள்
டாடா டியாகோ
-
டாடாவின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் ட்வின் சிலிண்டர் CNG தொழில்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. இது பூட் கொள்ளளவை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள உதவியுள்ளது.
-
மிட்-ஸ்பெக் XT(O) மற்றும் XZO+ தவிர அதன் அனைத்து வேரியன்ட்களிலும் இது CNG கிட்டின் ஆப்ஷனை பெறுகிறது.
-
இது 1.2 லிட்டர் பெட்ரோல்-CNG இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது CNG -யில் இயங்கும் போது 73.5 PS மற்றும் 95 Nm அளவுக்கு அவுட்புட்டை கொடுக்கிறது. டாடா டியாகோ CNG -யை மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது.
-
டியாகோ CNG வேரியன்ட்களின் விலை ரூ.6.60 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை உள்ளது.
மாருதி செலிரியோ
-
மாருதி செலிரியோ மிட்-ஸ்பெக் Vxi டிரிமில் மட்டுமே CNG ஆப்ஷனுடன் கிடைக்கிறது.
-
அதன் CNG வேரியன்ட் ஆனது 57 PS 1-லிட்டர் பெட்ரோல்-CNG இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
-
செலிரியோ Vxi CNG -யின் விலை ரூ.6.74 லட்சம் வரை இருக்கிறது.
டாடா ஆல்ட்ரோஸ்
-
டாடா ஆல்ட்ரோஸ் பட்டியலில் உள்ள ஒரே பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். மேலும் இது XE, XM+, XM+S, XZ, XZ Lux, XZ+S, XZ+S Lux மற்றும் XZ+OS ஆகிய எட்டு வேரியன்ட்களில் CNG பவர்டிரெய்னை வழங்குகிறது.
-
ஆல்ட்ரோஸ் CNG ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. ஆகவே இது 210 லிட்டர்களின் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய பூட் ஸ்பேஸை கொண்டிருக்கிறது.
-
இது 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல்-CNG இன்ஜினுடன் வருகிறது. இது 73.5 PS மற்றும் 103 Nm CNG மோடில் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
-
இதன் விலை ரூ.7.60 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரை உள்ளது.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
-
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் CNG -யுடன் அதன் இரண்டு மிட்-ஸ்பெக் வேரியன்ட்களில் கிடைக்கிறது: மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ்.
-
ஹூண்டாய் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக் 1.2 லிட்டர் பெட்ரோல்-CNG இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது NG மோடில் இயங்கும் போது 69 PS மற்றும் 95 Nm அவுட்புட்டை வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
-
கிராண்ட் i10 நியோஸ் CNG -யின் விலை ரூ.7.68 லட்சம் முதல் ரூ.8.23 லட்சம் வரை இருக்கும்.
மேலும் படிக்க: இந்தியாவில் 10 இன்ச் அல்லது அதை விட பெரிய டச்ஸ்கிரீனை கொண்டுள்ள விலை குறைவான 10 கார்கள்
டாடா டிகோர்
-
டியாகோவை போலவே டாடா டிகோர் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் CNG ஆப்ஷனையும் பெறுகிறது.
-
பேஸ் வேரியட்டை தவிர இது மூன்று வேரியன்ட்களிலும் (XM, XZ, மற்றும் XZ+) CNG ஆப்ஷனை பெறுகிறது, ஆனால் நீங்கள் CNG வரிசையில் உள்ள என்ட்ரி-ஸ்பெக் XM டிரிம் வாங்க முடிவு செய்தால் உங்களுக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்.
-
இது ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. ஆகவே டியாகோ மற்றும் ஆல்ட்ரோஸ் CNG -யில் காணப்படுவது போல் பயன்படுத்தக்கூடிய பூட் உடன் வருகிறது.
-
இது 1.2 லிட்டர் பெட்ரோல்-CNG இன்ஜின் மூலம் 73.5 PS மற்றும் 95 Nm CNG மோடில் அவுட்புட்டை கொடுக்கிறது.
-
CNG வேரியன்ட்களின் விலை ரூ.7.75 லட்சத்தில் தொடங்கி ரூ.9.55 லட்சம் வரை இருக்கின்றன.
ஹூண்டாய் ஆரா
-
பட்டியலில் உள்ள மற்றொரு சப்-காம்பாக்ட் செடான் ஹூண்டாய் ஆரா ஆகும். அதன் மிட்-ஸ்பெக் S மற்றும் SX வேரியன்ட்களில் CNG எரிபொருள் ஆப்ஷனை பெறுகிறது.
-
இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்ட கிராண்ட் i10 நியோஸ் CNG -யில் காணப்படும் அதே 1.2-லிட்டர் பெட்ரோல்-CNG இன்ஜினை கொண்டுள்ளது. இது 69 PS மற்றும் 95 Nm (CNGயில்) அவுட்புட்டை கொடுக்கிறது.
-
ஆரா CNG -யின் விலை ரூ.8.31 லட்சம் முதல் ரூ.9.05 லட்சம் வரை உள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலையிலேயே CNG கிட் ஆப்ஷன் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் மிகவும் விலை குறைவான விலை கார்கள் இவையாகும். இந்த பட்டியலில் இடம் பெற முடியாத பிற பிரபலமான CNG கார்களில் மாருதி பலேனோ, மாருதி டிசையர், டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவையும் உள்ளன. ஆனால் ஒப்பீட்டளவில் அதிக விலை காரணமாக இந்த பட்டியலில் அவை இடம்பெறவில்லை.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்க் -கானவை (டெல்லி)
கார்கள் பற்றிய அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடர மறக்காதீர்கள்.
மேலும் படிக்க: மாருதி ஆல்டோ K10 ஆன் ரோடு விலை