CNG ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் பயன்பாட்டுக்கு வருவதற்கு இவ்வளவு காலம் ஆனது ஏன் ?

published on மார்ச் 01, 2024 06:21 pm by rohit for டாடா டியாகோ

  • 54 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா டியாகோ CNG மற்றும் டியாகோ CNG ஆகியவை இந்திய சந்தையில் கிரீனர் ஃபியூல் உடன் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்ற முதல் கார்களாகும்.

CNG automatic option: why it took so long

CNG தொழில்நுட்பம் என்பது 2000 -களின் முற்பகுதியில் இருந்து கார்களில் டிரைவிங் செலவுகளை குறைக்க இந்தியாவில் கார்களில் ரெட்ரோ-ஃபிட்டட் ஆக கொடுக்கப்பட்டு வந்தது. 2010 ஆம் ஆண்டில் தான் இது மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் பல்வேறு குறைவான விலை மாடல்களில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டதாக கிடைத்தது. ஆனால் அதன் பிறகு  CNG பவர்டிரெய்னுடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 2024 -ல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சொல்லப்போனால் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா CNG பிரிவுக்கு புதியது. பூட்டில் பயன்படுத்தக்கூடிய இடத்தை அதிகப்படுத்துவதற்காக இரட்டை சிலிண்டர் செட்டப்பில் தொடங்கி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுடன் இந்த பிரிவை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இப்போது டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகிய கார்களில் AMT -ன் தேர்வை அறிமுகப்படுத்துவதன் மேலும் பல படிகள் இந்த பிரிவை முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது.

எங்களின் லேட்டஸ்ட் ரீலில் CNG-ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் ஒரு காரில் கொடுக்கப்படுவதற்கு ஏன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எடுத்துக்கொண்டது என்பதற்கான சில முக்கிய காரணங்களை நாங்கள் இங்கே விளக்கியுள்ளோம்.

A post shared by CarDekho India (@cardekhoindia)

விலை ஒரு முக்கிய விஷயம்

Tata Tiago CNG AMT

சிஎன்ஜி கார்கள் இன்று ஒரு பயனுள்ள பட்ஜெட் டெக்னாலஜியாக இருந்து இப்போது முக்கிய தொழில்நுட்பம், வசதிகளை பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் வழக்கமான ஒரு காரை தேர்ந்தெடுப்பவர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனின் வசதிக்காக ஒரு AMT உடன் வரும்போது அதை விட சிஎன்ஜி காரை வாங்க விரும்புபவர் விலை விஷயத்தில் கவனம் செலுத்துபவராக இருப்பார் .

எடுத்துக்காட்டுக்கு டியாகோ CNG AMT உள்ளது அங்கு CNG கிட் ஸ்டாண்டர்டான பெட்ரோல் வேரியன்ட்டை விட கூடுதலாக ரூ.95000 அதிகமாக வருகின்றது. AMT கியர்பாக்ஸின் விலை ஏறக்குறைய ரூ. 50000 ஆக உயர்ந்துள்ளது இது வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்டின்  விலையை விட கிட்டத்தட்ட ரூ. 1.5 லட்சம் அதிகமாகும்.

CNG மற்றும் AMT - ஒரு சிக்கலான சேர்க்கை

Tata Tiago CNG cylinders

CNG-ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் தாமதமானதற்கு காரணம் CNG பவர்டிரெய்ன் மற்றும் ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் இடையே ஒரு சமநிலையான தொடர்பை கண்டறிவதில் உள்ள சவாலாக இருந்தது. CNG -யில் RPM மற்றும் இன்ஜின் லோட் போன்ற தரவுகளின் அடிப்படையில் கியர்களை மாற்றுவதற்கு பல சென்சார்கள் தேவைப்படுகின்றன. ஆகவேதான் CNG பவர்டிரெய்னை இதில் கொண்டு வருவதற்காக விஷயங்களை மிகவும் கடினமாக்குகிறது. ஒரு CNG மாடலில் ஏற்கனவே எரிபொருளை பொறுத்து இரண்டு ஸ்டேஜ்கள் உள்ளன - ஒன்று பெட்ரோலில் இயங்கும் போது ​​மற்றொன்று CNG -யில் இயங்கும் போது குறைவான பவர் மற்றும் டார்க்கை கொடுக்கின்றது. CNG-ஆட்டோமெட்டிக் செட்டப்பை கொடுக்க இந்த அனைத்து சென்சார்களிலிருந்தும் டேட்டாவை CNG மற்றும் பெட்ரோல் ட்யூன்கள் இரண்டிற்கும் ஏற்ப மீண்டும் டியூன் செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க: விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ள 2024 ஆம் ஆண்டின் டாப் 3 வேர்ல்டு கார்கள்

டியாகோ CNG AMT: வேரியன்ட்கள் மற்றும் விவரங்கள்

Tata Tiago CNG AMT gearbox

இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: XTA மற்றும் XZA+. இது ஹேட்ச்பேக்கின் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது இருப்பினும் லோவர் ட்யூன் நிலையில் (73.5 PS/ 95 Nm) இருக்கலாம். Tiago CNG 5-ஸ்பீடு MT மற்றும் AMT ஆப்ஷன்களை பெறுகிறது.

மேலும் படிக்க: டாடா WPL 2024 தொடரின் அதிகாரப்பூர்வ காராக Tata Punch EV அறிவிக்கப்பட்டுள்ளது

விலை மற்றும் போட்டியாளர்கள்

Tata Tiago CNG AMT rear

டாடா டியாகோ சிஎன்ஜி AMT -யின் விலை ரூ.7.90 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது. மாருதி வேகன் ஆர் சிஎன்ஜி மற்றும் மாருதி செலிரியோ சிஎன்ஜி ஆகியவை இதனுடன் போட்டியிடுகின்றன, ஆனால் அவை மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க: டாடா டியாகோ AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா டியாகோ

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience