2024 மே மாத காம்பாக்ட் ஹேட்ச்பேக் விற்பனையில் Maruti Swift மற்றும் Wagon R ஆகியவை ஆதிக்கம் செலுத்தின
published on ஜூன் 13, 2024 07:36 pm by dipan for மாருதி ஸ்விப்ட்
- 63 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த வகை ஹேட்ச்பேக்குகளின் மொத்த விற்பனையில் சுமார் 78 சதவீதத்தை மாருதி கொண்டுள்ளது.
2024 மே மாதத்துக்கான கார் விற்பனை புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹேட்ச்பேக்குகளுக்கான பிரிவில் மாருதி மீண்டும் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் ஹாட்ச்பேக் இந்த மாதத்தில் அதிகம் விற்பனையான கார் என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் ஒவ்வொரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக்கும் விற்பனையின் அடிப்படையில் எவ்வாறு இருந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
மாடல்கள் |
மே 2024 |
மே 2023 |
ஏப்ரல் 2024 |
மாருதி ஸ்விஃப்ட் |
19,393 |
17,346 |
4,094 |
மாருதி வேகன் R |
14,492 |
16,258 |
17,850 |
டாடா டியாகோ |
5,927 |
8,133 |
6,796 |
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் |
5,328 |
6,385 |
5,117 |
மாருதி செலிரியோ |
3,314 |
3,216 |
3,220 |
மாருதி இக்னிஸ் |
2,104 |
4,551 |
1,915 |
மேலும் படிக்க: உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2024 நிகழ்வில் நெக்ஸ்ட்-ஜென் ஆப்பிள் கார்ப்ளே அறிமுகப்படுத்தப்பட்டது
முக்கிய விவரங்கள்
-
மாதாந்திர விற்பனையில் மாருதி ஸ்விஃப்ட் -க்கான மாதந்தோறும் (MoM) வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் 350 சதவீதத்திற்கு மேல் இருப்பதாகத் தெரிகிறது. ஆண்டுக்கு ஆண்டு (YoY) கிட்டத்தட்ட 12 சதவீத வளர்ச்சி ஹேட்ச்பேக்கின் தேவையை பற்றிய உண்மையான புரிதலை அளிக்கிறது.
-
மாருதி வேகன் R மே 2024 இல் MoM விற்பனையில் கணிசமான அளவு 18.8 சதவீதம் சரிவைக் கண்டது மற்றும் மே 2023 உடன் ஒப்பிடும்போது தோராயமாக 10.9 சதவீதம் குறைந்துள்ளது. புதிய ஸ்விஃப்ட்டின் வருகைக்கு இதன் தேவையில் ஏற்பட்ட குறைவுக்கு காரணமாக இருக்கலாம்.
-
டாடா டியாகோ -வுக்கான மாதாந்திர விற்பனை 2024 மே மாதத்தில் சுமார் 12.8 சதவீதம் சரிந்தது. அதே சமயம் ஆண்டு சரிவு தோராயமாக 27 சதவீதமாக இருந்தது. என்ட்ரி-லெவல் டாடா காரில் சமீபத்தில் CNG பவர்டிரெய்னுடன் AMT ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது பிரிவு போட்டியாளர்களுடன் போட்டித்தன்மையுடன் இருக்க இன்னும் முழுமையான மேம்படுத்தலைப் பயன்படுத்தலாம். இந்தக் கணக்கில் டாடா டியாகோ EV விற்பனையும் அடங்கும்.
-
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் -க்கு இது மெதுவான ஆனால் சாதகமான மாதமாக இருந்தது. கடந்த மாதத்தில் விற்பனை சுமார் 4 சதவீதம் (MoM) அதிகரித்துள்ளது. இருப்பினும் மே 2023 உடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கான தேவை சுமார் 16.6 சதவிகிதம் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
-
2024 மாதத்தில் மாருதி செலிரியோ விற்பனையானது ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தது. ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடும்போது MoM 2.9 சதவிகிதம் சிறிதளவு அதிகரித்துள்ளது. இருப்பினும் மே 2023 உடன் ஒப்பிடும்போது சுமார் 3.0 சதவிகிதம் மட்டுமே ஆண்டுக்கான அதிகரிப்பு இருந்தது.
மேலும் படிக்க: மாருதி ஆல்டோ K10, S-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகியவை ஜூன் மாதத்திற்கான ட்ரீம் எடிஷனை பெறுகின்றன
-
மாருதி இக்னிஸ் 2024 மே மாதத்துக்கான விற்பனையில் முன்னேற்றம் அடைந்தது. MoM கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், மே 2023 உடன் ஒப்பிடும் போது ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அளவு 53.7 சதவீதம் குறைந்துள்ளது. இக்னிஸ் மாருதி வரிசையில், சியாஸுக்கு இணையாக மிகவும் பழைய கார்களில் ஒன்றாகும். மேலும் சரியான அப்டேட் கொடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க: இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கான புதிய RTO விதிகள்: ஓட்டுநர் பள்ளிகள் தயாரா உள்ளனவா?
மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT
0 out of 0 found this helpful