• English
  • Login / Register

Maruti Celerio VXi CNG மற்றும் Tata Tiago XM CNG: விவரங்கள் ஒப்பீடு

published on ஜூன் 21, 2024 06:44 pm by dipan for மாருதி செலரியோ

  • 73 Views
  • ஒரு கருத்தை எழுதுக

CNG -யில் இயங்கும் இரண்டு ஹேட்ச்பேக்குகள் அவற்றின் விலைக்கு சிறப்பான மைலேஜை கொடுக்கக்கூடியவை. இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

மாருதி செலிரியோ மற்றும் டாடா டியாகோ இரண்டும் நீண்ட காலமாக சந்தையில் உள்ளன. இந்த மாடல்கள் மாதாந்திர ஹேட்ச்பேக் விற்பனை அட்டவணையில் அடிக்கடி போட்டியிடுகின்றன. இந்த ஹேட்ச்பேக்குகள், ஒப்பிடக்கூடிய விலை மற்றும் வசதிகளுடன் CNG ஆப்ஷனை பெறுகின்றன. இரண்டு கார்களின் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு எது சிறந்தது என்பதைப் கண்டுபிடிப்போம்.

விலை

வேரியன்ட்

மாருதி செலிரியோ VXi CNG

டாடா டியாகோ

டாடா டியாகோ XM CNG

விலை

ரூ.6.74 லட்சம்

ரூ.6.60 லட்சம்

ரூ.6.95 லட்சம்

விலை, எக்ஸ்-ஷோரூம் (பான்-இந்தியா)

ஒன்-அபோவ்-பேஸ் செலிரியோ Vxi CNG -க்கு நேரடி போட்டியாளர் டியாகோ XM CNG ஆகும். ஆனால் பேஸ்-ஸ்பெக் டியாகோ XE CNG இங்கே விலை குறைவான ஆப்ஷனாக இந்த ஒப்பீட்டில் சேர்க்கப்படும் அளவுக்கு நெருக்கமாக உள்ளது. டாடா டியாகோ -வின் என்ட்ரி லெவல் XE வேரியன்ட் மாருதி செலிரியோ VXi CNG வேரியன்ட்டை விட ரூ.14,000 குறைவாக உள்ளது. இது செலிரியோ ரேஞ்சில் உள்ள ஒரே CNG வேரியன்ட் ஆகும். டியாகோ -வின் மற்றொரு XM CNG வேரியன்ட் உள்ளது. இது செலிரியோ CNG -யை விட ரூ.21,000 அதிகம்.

Celerio VXi CNG

அளவுகள்

அளவுகள்

மாருதி செலிரியோ CNG

டாடா டியாகோ CNG

நீளம்

3695 மி.மீ

3765 மி.மீ

அகலம்

1655 மி.மீ

1677 மி.மீ

உயரம்

1555 மி.மீ

1535 மி.மீ

வீல்பேஸ்

2435 மி.மீ

2400 மி.மீ

Tata Tiago CNG XM trim

பவர்டிரெய்ன்

பவர்டிரெய்ன்

மாருதி செலிரியோ CNG

டாடா டியாகோ CNG

இன்ஜின்

1-லிட்டர் மூன்று சிலிண்டர் இன்ஜின்

1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் இன்ஜின்

பவர்

57 PS

73 PS

டார்க்

82 Nm

95 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு மேனுவல்

5-ஸ்பீடு மேனுவல்

கிளைம்டு மைலேஜ்

35.60 கிமீ/கிலோ

26.49 கிமீ/கிலோ

டியாகோ CNG ஆனது செலிரியோ CNG -யை விட 16 PS மற்றும் 13 PS அதிக சக்தி வாய்ந்த இன்ஜினை கொண்டுள்ளது. இரண்டு கார்களும் அந்தந்த டிரிம் நிலைகளுக்கான 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இருப்பினும் டாடா டியாகோ CNG அதன் ஹையர் டிரிம் லெவல்களில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது.

Automatic transmission in the higher variants of Tiago CNG

(எடுத்துக்காட்டுக்காக படம் பயன்படுத்தப்பட்டுள்ளது)

வசதிகள்

வசதிகள்

மாருதி செலிரியோ VXi CNG

டாடா டியாகோ

டாடா டியாகோ XM CNG

வெளிப்புறம்

  • ஹாலோஜன் ஹெட்லைட்கள்

  • பாடி கலர்டு டோர் ஹேண்டில்கள் மற்றும் வெளிப்புற பின்புற பார்வை கண்ணாடிகள் (ORVMs)

  • முன் கிரில்லில் குரோம் ஆக்ஸன்ட்கள்

  • முழு வீல் கவர் கொண்ட 14-இன்ச் ஸ்டீல் சக்கரங்கள்

  • ஹாலோஜன் ஹெட்லைட்கள்

  • பிளாக் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் வெளிப்புற பின்புற பார்வை கண்ணாடிகள் (ORVMs)

  • கவர்கள் இல்லாத 14 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள்

  • ஹாலோஜன் ஹெட்லைட்கள்

  • பிளாக் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் வெளிப்புற பின்புற பார்வை கண்ணாடிகள் (ORVMs)

  • ORVM -களில் LED காட்டி

  • ஆல் வீல் கவர் கொண்ட 14-இன்ச் ஸ்டீல் சக்கரங்கள்

உட்புறம்

  • டே-நைட் இன்சைடு பின்புற பார்வை கண்ணாடி (IRVM)

  • முன் கேபின் லைட்

  • 60:40 ஸ்பிலிட் மடிப்பு பின் இருக்கை

  • பின்புற பார்சல் தட்டு

  • கோ-டிரைவர் சன்வைசரில் வேனிட்டி கண்ணாடி

  • முன் இருக்கை பின் பாக்கெட்டுகள்

  • துணி இருக்கைகள்

  • முன்னும் பின்னும் ஒருங்கிணைந்த ஹெட்ரெஸ்ட்கள்

  • டே-நைட் இன்சைடு பின்புற பார்வை கண்ணாடி (IRVM)

  • ஃபோல்டபிள் கிராப் ஹேண்டில்ஸ்

  • ஃபேப்ரிக் இருக்கைகள்

  • முன்பக்கத்தில் சரி செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள்

  • டே-நைட் இன்சைடு பின்புற பார்வை கண்ணாடி (IRVM)

  • ஃபோல்டபிள் கிராப் ஹேண்டில்ஸ்

  • ஃபேப்ரிக் இருக்கைகள்

  • முன்பக்கத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள்

இன்ஃபோடெயின்மென்ட்

  • இன்ஃபோடெயின்மென்ட் இல்லை

  • இன்ஃபோடெயின்மென்ட் இல்லை

  • 3.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே

  • 2 ட்வீட்டர்கள்

  • புளூடூத் கனெக்டிவிட்டி

கம்ஃபோர்ட் மற்றும் வசதி


  • MID உடன் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

  • மேனுவல் ஏசி

  • நான்கு பவர் விண்டோக்களும் டிரைவர்-சைட் ஆட்டோ மேல்/கீழ் 

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய வெளிப்புற பின்புற பார்வை கண்ணாடிகள் (ORVMs)

  • முன் பவர் அவுட்லெட் (12V)

  • இன்ஜின் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

  • மேனுவல் ஏசி

  • முன் பவர் அவுட்லெட் (12V)

  • மேனுவல் விண்டோஸ்

  • மேனுவலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ORVMகள்

  • செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

  • மேனுவல் ஏசி

  • நான்கு பவர் விண்டோஸ்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ORVMகள்

  • முன் பவர் அவுட்லெட் (12V)

பாதுகாப்பு

  • டூயல் முன்பக்க ஏர்பேக்குகள்

  • EBD உடன் ABS

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

  • ஸ்பீடு மற்றும் தாக்கத்தை உணரும் ஆட்டோமெட்டிக் டோர் லாக்

  • முன்பக்க டிஸ்க் பிரேக்குகள்

  • ரிவர்ஸிங் பார்க்கிங் சென்சார்கள்

  • டூயல் முன் ஏர்பேக்குகள்

  • EBD உடன் ABS

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • சென்ட்ரல் லாக்கிங்

  • இன்ஜின் இம்மொபிலைசர்

  • முன்பக்க டிஸ்க் பிரேக்குகள்

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • டூயல் முன் ஏர்பேக்குகள்

  • EBD உடன் ABS

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • சென்ட்ரல் லாக்கிங்

  • இன்ஜின் இம்மொபிலைசர்

  • முன்பக்க டிஸ்க் பிரேக்குகள்

  • ரிவர்ஸிங் பார்க்கிங் டிஸ்பிளே மற்றும் சென்சார்கள்

இங்குள்ள மூன்று ஆப்ஷன்களில் டாடா டியாகோ XM CNG எக்ஸ்ட்டீரியர் வடிவமைப்பில் முன்னணியில் உள்ளது. ORVM -ல் LED டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவற்றால் வெளியில் இருந்து  பார்க்கும் போது இது அதிக பிரீமியமாகத் தோன்றும். உட்புறத்தில் செலிரியோ மற்றும் டியாகோ ஆகியவை ஒரே அளவிலான வசதிகளை வழங்குகின்றன. ஆனால் முந்தையது ஃபோல்டபிள் பின்புற இருக்கை, பின்புற பார்சல் டிரே மற்றும் நாளிதழ்களுக்கான பாக்கெட்டுகள் போன்ற வசதிகளை உள்ளடக்கியது.

மறுபுறம் டியாகோ XM CNG ஆனது புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் இரண்டு ஸ்பீக்கர்களுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (சிறிய டிஸ்ப்ளேவுடன்) உள்ளது. இவை  செலிரியோ VXi CNG -ல் இல்லை.

வசதியைப் பொறுத்தவரை அனைத்து ஆப்ஷன்களும் மேனுவலாக ஏர் கண்டிஷனிங்கை வழங்குகின்றன. மேலும் பேஸ்-லெவல் டியாகோ CNG மட்டுமே பவர் விண்டோக்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால் டிரைவரின் விண்டோவில் ஒரு டச் அப்-டவுன் வசதியை சேர்ப்பதன் மூலம் செலிரியோ மீண்டும் முன்னணிலையில் உள்ளது. இது டியாகோ XM CNG -யில் கூட கிடைக்காது. டாடா டியாகோ CNG வகைகளில் முன் ஹெட்ரெஸ்ட்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடியவை. அதேசமயம் செலிரியோவில் அவை இருக்கைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தொகுப்பும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்றாலும் கூட டியாகோ ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களை வழங்குகிறது. இது குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பானது.

பூட் எப்படி உள்ளது?

டாடா டியாகோ CNG மாருதி செலிரியோ CNG -யை கொண்டிருக்கும் ஒரு அம்சம் பூட்டின் நடைமுறைத்தன்மை. டியாகோ காரில் பூட் தளத்திற்குக் கீழே டூயல் CNG டேங்குகளை பெறுகிறது, இது பயன்படுத்தக்கூடிய ஸ்டோரேஜ் இடத்தை அனுமதிக்கிறது. அதேசமயம் செலிலியோ ஆனது பெட்ரோல்-பவர்டு செலிரியோவில் வழங்கப்படும் 313-லிட்டர் பூட் இடத்தை எடுத்துக் கொள்ளும் ஒரே ஒரு டேங்கை கொண்டுள்ளது.

Tata Tiago CNG dual-cylinder CNG tank

தீர்ப்பு

இந்த இரண்டு என்ட்ரி நிலை CNG ஹேட்ச்பேக்குகளுக்கு இடையே தேர்வு செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் டாடா டியாகோ XM CNG கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப அதிக சலுகைகளை வழங்குகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த பவர்டிரெய்ன் மற்றும் அடிப்படை வசதி வசதிகளை உள்ளடக்கிய வசதிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. 

மறுபுறம் மாருதி செலிரியோ VXi CNG, மிகவும் ரீஃபைன்மென்ட்டான இன்ஜினை கொண்டுள்ளது. இது கணிசமாக குறைந்த பவரை கொடுக்கிறது. தற்போதைய செலிரியோ சீரிஸில் கிடைக்கும் ஒரே CNG வேரியன்ட் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டியாகோ XM CNG உடன் ஒப்பிடும் போது நீங்கள் சேமித்த பணத்தை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற ஆக்ஸசரீஸ்களுக்காக பயன்படுத்தலாம். மாருதி அதன் விற்பனைக்குப் பிந்தைய நெட்வொர்க்கிலும் சிறப்பாக செயல்படுகிறது.

இதற்கிடையில் இங்கே மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக டியாகோ XE CNG -க்கான ஆதரவும் உள்ளது. ஏனெனில் செலிரியோ Vxi CNG -க்கான பிரீமியம் கூடுதல் வசதிகளால் முன்னிலையில் உள்ளது.

சுருக்கமாக சொல்லப்போனால் டாடா டியாகோ XM CNG ஆனது மாருதி செலிரியோ VXi CNGயை விட சிறந்த மதிப்பை வழங்குகிறது. டாடா டியாகோ XM CNG மற்றும் மாருதி செலிரியோ VXi CNG ஆகியவற்றில் எதை விரும்புகிறீர்கள்? கீழே உள்ள கமெண்டில் எங்களிடம் கூறுங்கள்.

ரெகுலர் அப்டேட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்

மேலும் படிக்க: மாருதி செலிரியோ ஏஎம்டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti செலரியோ

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க��்யா clavis
    க்யா clavis
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience