விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ள 2024 ஆம் ஆண்டின் டாப் 3 வேர்ல்டு கார்கள்
published on பிப்ரவரி 29, 2024 06:39 pm by rohit for பிஒய்டி சீல்
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த மூன்று கார்களும் பிரீமியம் எலக்ட்ரிக் மாடல்கள் ஆகும். இவற்றின் விலை ரூ.50 லட்சத்துக்கு (எக்ஸ்-ஷோரூம்) மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ICOTY) விருது இந்தியாவில் உள்ள கார்களை மட்டுமே கவனத்தில் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வேர்ல்டு கார் அவார்டு என்பது குறைந்தது இரண்டு கண்டங்களில் விற்பனை செய்யப்படும் மாடல்களை கருத்தில் கொண்டு வழங்கப்படுகின்றன. சமீபத்தில் 2024 ஆம் ஆண்டின் உலக காருக்கான இறுதிப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவற்றில் முதல் மூன்று மாடல்களாக BYD சீல் கியா EV9 மற்றும் வோல்வோ EX30 ஆகிய அனைத்தும் EVகள் ஆகும். ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இந்த கார்கள் அனைத்தும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றை பற்றிய விவரங்களை சுருக்கமாகப் பார்ப்போம்:
BYD சீல்
வெளியீடு: மார்ச் 5, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.55 லட்சம் முதல்
ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் முதல் முறையாக இந்தியாவுக்கான BYD சீல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இது e6 எம்பிவி மற்றும் அட்டோ 3 எஸ்யூவி -க்கு பிறகு இந்தியாவில் BYD நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள மூன்றாவது கார் ஆகும். இது 570 கிமீ வரை WLTC கிளைம்டு ரேஞ்சை கொடுக்கும்.இது பல பேட்டரி பேக்குகள் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் செட்டப்களுடன் 3 வேரியன்ட்களில் இருக்கும்.
ரொட்டேட்டிங் 15.6-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் முன் சீட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். BYD பாதுகாப்புக்காக 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை கொடுக்கும்.
கியா EV9
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 -ன் இரண்டாம் பாதியில்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.80 லட்சம்
கியா நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் அதன் முதன்மை EV -யான கியா EV9 காரை அறிமுகப்படுத்தியது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் தயாரிப்புக்கு முந்தைய கான்செப்ட் வடிவத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த 3-வரிசை ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி பல்வேறு பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆகிய இரண்டையும் வழங்குகிறது. EV9 ஆனது 541 கி.மீ.க்கும் கூடுதலாக கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. இது பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜினுடன் கூடிய வழக்கமான சொகுசு எஸ்யூவி -க்கு ஒரு மாற்றாக இருக்கும். கியா இந்திய சந்தையில் EV9 காரை பில்ட்-அப் யூனிட் (CBU) ஆக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இரண்டு 12.3-இன்ச் கனெக்டட் டிஸ்ப்ளேக்கள் மற்றும் 708W 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டமுடன் குளோபல்-ஸ்பெக் EV9 காரை கியா வழங்குகிறது. பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் கொடுக்கப்படும்.
மேலும் படிக்க: EV கார் திட்டங்களை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்: ஜெனரேட்டிவ் AI -மீது முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவிப்பு
வோல்வோ EX30
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2025 -ன் இரண்டாம் பாதியில்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.50 லட்சம்
வோல்வோ நிறுவனத்தின் புதிய என்ட்ரி-லெவல் எலக்ட்ரிக் எஸ்யூவி EX30 ஆகும். இது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது XC40 ரீசார்ஜ் (இப்போது EX40 என்று அழைக்கப்படுகிறது) காருக்கு கீழே விற்பனை செய்யப்படும். உலகளவில் மற்றும் பல மின்சார பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது அதிகபட்சமாக 474 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. உபகரணங்களைப் பொறுத்தவரை வோல்வோ 12.3-இன்ச் வெர்டிகல் டச் ஸ்கிரீன் செட்டப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை வழங்கியுள்ளது. EX30 ஆனது டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், பார்க் அசிஸ்ட் மற்றும் மோதல் தவிர்ப்பு உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை பெறுகிறது.
இந்த மூன்று EV -களில் எதைப் பார்க்க ஆர்வமாக உள்ளீர்கள் ? கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்