Volvo XC40 Recharge மற்றும் C40 Recharge கார்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
published on பிப்ரவரி 21, 2024 08:11 pm by rohit for வோல்வோ ex40
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
XC40 ரீசார்ஜ் இப்போது 'EX40' ஆக மாற்றப்பட்டுள்ளது, C40 ரீசார்ஜ் இனிமேல் 'EC40' என்று அழைக்கப்படும்.
-
வோல்வோவின் சமீபத்திய EX30 மற்றும் EM90 போன்ற EV -களுடன் ஒன்றினைக்கும் வகையில் பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
-
மாடல் பெயர்களின் உள்ள மாற்றமானது வாடிக்கையாளர்களுக்கு மின்சார மற்றும் ஹைபிரிட் மாடல்களை அடையாளம் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது.
-
வோல்வோ தற்போது இந்தியாவில் இரண்டு EV -களை வழங்குகிறது: EX40 மற்றும் EC40.
வோல்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் C40 ரீசார்ஜ் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இப்போது EX40 மற்றும் EC40 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வோல்வோ இப்போது அதன் உலகளாவிய EV -களின் வரிசையில் இருந்து ‘ரீசார்ஜ்’ என்ற பெயர் சேர்ப்பை முற்றிலுமாக நீக்கியுள்ளது. 2030 -ம் ஆண்டிற்குள் முழுமையான EV தயாரிப்பாளராக மாறுவதற்கான அதன் மாற்றத்தின் ஒரு பகுதியாக மாடல் பெயர் மாற்றத்தை வோல்வோ இதை செய்துள்ளது. இரண்டு EV -களின் பெயர் மாற்றம் மற்றும் மறு பெயரிடுதல் விரைவில் இந்தியா-ஸ்பெக் மாடல்களிலும் செயல்படுத்தப்படும்.
பெயர் மாற்றம் பற்றிய கூடுதல் விவரங்கள்
புதுப்பிக்கப்பட்ட பெயர் மாற்றத்துடன் EX30, EX90 மற்றும் EM90 போன்ற வோல்வோவின் பரந்த அளவிலான முழு மின்சார வாகனங்களுடன் EX40 மற்றும் EC40 -யை மிகவும் நெருக்கமாக இணைக்கிறது. இந்த மாற்றம் EX40 -யை அதன் அசல் பெயரைத் தக்கவைத்துள்ள இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE)-இயங்கும் XC40 காரிலிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம், இது வாடிக்கையாளர்களுக்கு அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது, மின்சார மற்றும் ஹைபிரிட் மாடல்களை வேறுபடுத்தி காட்டுகின்றது. அதன் மாடல்களின் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியன்ட்கள் கூட இப்போது வெவ்வேறு நிலைகளில் உள்ள பவர் அவுட்புட்டை எடுத்துக்காட்டும் வகையில் 'T6' அல்லது 'T8' பெயரால் குறிக்கப்படுகின்றன.
வோல்வோவின் முந்தைய திட்டங்கள் வேறுவிதமாக இருந்தன
2021 ஆம் ஆண்டில் வெளியான பல்வேறு ஆன்லைன் அறிக்கைகள் வோல்வோ நிறுவனம் அதன் தற்போதைய எண் அல்லது எண் மற்றும் எழுத்து பெயரிடலில் இருந்து புதிய EV -களுக்கு மிகவும் வழக்கமான பெயர்களுக்கு மாறுவதற்கான திட்டங்களைக் கொண்டிருப்பதாகக் கூறியது. வோல்வோ கார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஹாகென் சாமுவேல்சன், புதிய EV -க்கு ஒரு [புதிதாகப் பிறந்த] குழந்தையைப் போன்ற ஒரு பெயர் இருக்கும் என்று தெரிவித்திருந்தார், மேலும் அந்த ஆண்டின் பிற்பகுதியிலும் பெயர் உயிரெழுத்தில் தொடங்கும் என்று சுட்டிக்காட்டினார். அப்போதைய 'விரைவில் வெளியிடப்படும்' EV காரான - EX90 - ஸ்வீடிஷ் கார் தயாரிப்பாளரால் டிரேட்மார்க் செய்யப்பட்ட 'எம்ப்லா' பெயர்ப்பலகையை கொண்டிருந்தது.
வோல்வோ 1995 ஆம் ஆண்டில், செடான்களைக் குறிக்க 'S', எஸ்டேட்டுகளுக்கு 'V', ஹேட்ச்பேக்குகள் மற்றும் கூபேக்களுக்கு 'C' மற்றும் SUV களுக்கு 'XC' ஆகியவற்றை இணைத்து, 1995 -ம் ஆண்டில்ல் தற்போதைய பெயரிடும் முறையை ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து அளவு அடிப்படையிலான எண் முறை வந்தது.
இருப்பினும், இந்த முறையான பெயர்கள் பெரும்பாலும் கடைபிடிக்கப்பட்டதில்லை. காரணம் இன்றும் அனைத்து வோல்வோ EV -களிலும் EX30 மற்றும் EX90 போன்ற எண் மற்றும் எழுத்து பெயர்கள் உள்ளன. இருந்தாலும் EM90 எலக்ட்ரிக் MPV -யின் உலகளாவிய அறிமுகத்துடன் சொகுசு MPV -யின் பிரிவில் நுழைந்தது வோல்வோ நிறுவனம், ஒரு பொதுவான வோல்வோ போன்ற பெயரிடல் உள்ளது. மேலே கூறப்பட்ட கூற்றின்படி, MPV பாடி டைப்பை குறிக்க வோல்வோ ஒரு ‘M’ என்ற எழுத்தை பயன்படுத்தக்கூடும்.
இருப்பினும், புதிய வோல்வோ கார்களின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜிம் ரோவன், 'பிராண்ட் பரிச்சயத்தை' மனதில் கொண்டு கடுமையான மாற்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு எதிராக முடிவு செய்தார்.
மேலும் பார்க்க: தீப்பிடித்த Volvo C40 Recharge எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி: பதிலளித்த வால்வோ நிறுவனம்
இந்தியாவில் வோல்வோவின் EV கார் விற்பனை
வோல்வோ தற்சமயம் இந்தியாவில் இரண்டு EV -களை விற்பனை செய்கிறது: இப்போது "பெயர்மாற்றப்பட்ட" EX40 மற்றும் EC40, மற்றும் சமீபத்தில் அதன் 10,000வது உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட EX40 தயாரிப்பை நிறைவு செய்துள்ளது. ஸ்வீடிஷ் கார் தயாரிப்பு நிறுவனம் புதிய ஃபிளாக்ஷிப் EX90 மற்றும் புதிய என்ட்ரி லெவல் EX30 எலக்ட்ரிக் எஸ்யூவி -யையும் விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் பார்க்க: இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் Kia EV9 எலக்ட்ரிக் எஸ்யூவி… இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் படிக்க: XC40 ரீசார்ஜ் ஆட்டோமெட்டிக்