BYD Seal மற்றும் Hyundai Ioniq 5, Kia EV6, Volvo XC40 Recharge மற்றும் BMW i4: விவரங்கள் ஒப்பீடு
modified on மார்ச் 06, 2024 09:06 pm by shreyash for பிஒய்டி சீல்
- 44 Views
- ஒரு கருத்தை எழுதுக
BYD சீல் இந்த பிரிவில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஒப்பீட்டில் இது மிகவும் சக்திவாய்ந்த EV ஆகும்.
BYD சீல் எலக்ட்ரிக் செடான் இப்போது BYD -யின் மூன்றாவது காராக இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6, வால்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் BMW i4 போன்ற மாடல்களுடன் இந்த எலக்ட்ரிக் செடான் போட்டியிடுகிறது. எனவே அவற்றின் விலையில் தொடங்கி அவற்றின் விவரங்களின் ஒப்பீடு இங்கே:
முதலில் இந்த EV -களின் விலையை பற்றி பார்ப்போம்:
BYD சீல் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
கியா EV6 |
வால்வோ XC40 ரீசார்ஜ் |
BMW i4 |
ரூ.41 லட்சம் முதல் ரூ.53 லட்சம் வரை |
ரூ.46.05 லட்சம் |
ரூ.60.95 லட்சம் முதல் ரூ.65.95 லட்சம் |
ரூ.57.90 லட்சம் |
ரூ.72.50 லட்சம் முதல் ரூ.77.50 லட்சம் |
-
இந்த ஒப்பீட்டில் BYD சீல் மிகவும் விலை குறைவான மாடலாக உள்ளது. அதன் என்ட்ரி லெவல் வேரியன்ட் ஹூண்டாய் அயோனிக் 5 காரை விட 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.. அதன் டாப்-ஸ்பெக் AWD வேரியன்ட் இங்கே மிகவும் குறைவான செயல்திறன் கொண்ட ஆப்ஷனாகும். வோல்வோவின் AWD எலக்ட்ரிக் காரை விட சுமார் ரூ. 5 லட்சம் குறைவானது.
அளவுகள்
மாடல்கள் |
BYD சீல் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
கியா EV6 |
வால்வோ XC40 ரீசார்ஜ் |
BMW i4 |
நீளம் |
4800 மி.மீ |
4635 மி.மீ |
4695 மி.மீ |
4440 மி.மீ |
4783 மி.மீ |
அகலம் |
1875 மி.மீ |
1890 மி.மீ |
1890 மி.மீ |
1863 மி.மீ |
1852 மி.மீ |
உயரம் |
1460 மி.மீ |
1625 மி.மீ |
1570 மி.மீ |
1647 மி.மீ |
1448 மி.மீ |
வீல்பேஸ் |
2920 மி.மீ |
3000 மி.மீ |
2900 மி.மீ |
2702 மி.மீ |
2856 மி.மீ |
-
BYD சீல் இங்கு மிக நீளமான எலக்ட்ரிக் கார் ஆகும். இருப்பினும் அகலத்திற்கு வரும்போது அயோனிக் 5 மற்றும் EV6 ஆகியவை அகலமானவை.
-
வோல்வோ XC40 ரீசார்ஜ் அதன் 'சரியான SUV' நிலைப்பாட்டின் காரணமாக இந்த ஒப்பீட்டில் மிக உயரமான EV ஆகும்.
-
இருப்பினும் ஹூண்டாய் அயோனிக் 5 அதிகபட்ச வீல்பேஸை கொண்டுள்ளது.
பேட்டரி பேக் & எலக்ட்ரிக் மோட்டார்
விவரங்கள் |
BYD சீல் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
கியா EV6 |
வால்வோ XC40 ரீசார்ஜ் |
BMW i4 |
||||
பேட்டரி பேக் |
61.44 kWh |
82.56 kWh |
82.56 kWh |
72.6 kWh |
77.4 kWh |
78 kWh |
70.2 kWh |
83.9 kWh |
|
டிரைவ் டைப் |
RWD |
RWD |
AWD |
RWD |
RWD |
AWD |
AWD |
RWD |
RWD |
பவர் |
204 PS |
313 PS |
530 PS |
217 பிஎஸ் |
229 PS |
325 PS |
408 PS |
286 PS |
340 PS |
டார்க் |
310 Nm |
360 Nm |
670 Nm |
350 Nm |
350 Nm |
605 Nm |
660 Nm |
430 Nm |
430 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
510 கி.மீ |
650 கி.மீ |
580 கி.மீ |
631 கி.மீ |
708 கிமீ வரை |
419 கி.மீ |
590 கிமீ வரை |
-
BYD சீல் அதிக பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. கியா EV6 மற்றும் BMW i4 ஆகியவை இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகின்றன. அதே நேரத்தில் அயோனிக் 5 மற்றும் XC40 ரீசார்ஜ் ஆகியவை ஒன்றை மட்டுமே பெறுகின்றன.
-
சீலின் ஆல்-வீல் டிரைவ் (AWD) வேரியன்ட் இங்கு மிகவும் பவர் புல்லானது. இருப்பினும் கியா EV6 ஆனது 708 கிமீ (ARAI-மதிப்பீடு) என்ற அதிகபட்ச கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.
-
ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் BMW i4 ஆகிவற்றுக்கு இந்தியாவில் AWD டிரைவ் ட்ரெயின்கள் கொடுக்கப்படவில்லை.
-
BMW i4 ரியர்-வீல்-டிரைவ் மோட்டாருடன் இணைக்கப்பட்ட மிகப்பெரிய 83.9 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருந்தாலும் சீல் அயோனிக் 5 மற்றும் EV6 ஆகியவற்றை விட குறைவான ரேஞ்சை வழங்குகிறது.
மேலும் பார்க்க: இந்தியாவில் உள்ள அனைத்து பிரீமியம் கார்களை விடவும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள BYD Seal கார்
சார்ஜிங்
விவரங்கள் |
BYD சீல் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
கியா EV6 |
வால்வோ XC40 ரீசார்ஜ் |
BMW i4 |
|||
பேட்டரி பேக் |
61.44 kWh |
82.56 kWh |
82.56 kWh |
72.6 kWh |
77.4 kWh |
78 kWh |
70.2 kWh |
83.9 kWh |
ஏசி சார்ஜர் |
7 kW |
7 kW |
7 kW |
11 kW |
7.2 kW |
11 kW |
11 kW |
11kW |
DC ஃபாஸ்ட் சார்ஜர் |
110 kW |
150 kW |
150 kW |
50 kW 150 kW |
50 kW 350 kW |
150 kW |
180 kW |
205 kW |
-
கியா EV6 ஆனது 350 kW வரையில் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது. எனவே இதன் பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்ய முடியும். BYD சீல் மறுபுறம் 150 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. அதே நேரத்தில் அதன் சிறிய பேட்டரி பேக் பதிப்பு 110 kW வரை மட்டுமே ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது.
வசதிகள்
மாடல்கள் |
BYD சீல் |
ஹூண்டாய் அயோனிக் 5 |
கியா EV6 |
வால்வோ XC40 ரீசார்ஜ் |
BMW i4 |
வெளிப்புறம் |
|
|
|
|
|
உட்புறம் |
|
|
|
|
|
ஆறுதல் & வசதி |
|
|
|
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
|
|
|
பாதுகாப்பு |
|
|
|
|
|
-
வசதிகளை பொறுத்தவரை இங்குள்ள 5 எலக்ட்ரிக் கார்களும் நிறைய வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன.
-
BYD சீல் இங்கு மிகப்பெரிய 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. மேலும் இது போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப் ஆகியவற்றுக்கு இடையே ரொட்டேட் ஆகின்றது. சீலுக்கு பிறகு இது 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறும் BMW i4 ஆகும்.
-
சீல் எலக்ட்ரிக் செடான் ORVM களுக்கான மெமரி ஃபங்ஷனை பெறுகிறது. இதை வேறு எந்த EV -யும் இங்கு வழங்கவில்லை.
-
வால்வோ XC40 ரீசார்ஜ் சிறிய 9-இன்ச் போர்ட்ரெய்ட் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனை கொண்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி இல்லை என்றாலும் அதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கூகுளாலேயே இயக்கப்படுகிறது. எனவே கூகுள் மேப்ஸ் போன்ற வசதிகளை பெறுவீர்கள். அதே சமயத்தில் இந்த அமைப்பு ஆப்பிள் கார்பிளே -வுக்கு வயர்லெஸ் இணைப்பைக் கூட வழங்கவில்லை.
-
BMW i4 மற்ற அனைத்து EV -களிலும் சிறந்த 17-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டத்தை கொண்டுள்ளது. XC40 ரீசார்ஜ் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டத்தையும் பெறுகிறது. ஆனால் குறைவான ஸ்பீக்கர்களுடன் மறுபுறம் சீல் 12-ஸ்பீக்கர் டைனாடியோ சவுண்ட் சிஸ்டத்தை பெறுகிறது.
-
BMW i4 மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றை தவிர மற்ற அனைத்து EV -களும் வெஹிகிள் டூ வெஹிகிள் (V2L) ஃபங்ஷன் உடன் வருகின்றன. இந்த அம்சத்தின் மூலம் உங்கள் காரின் பேட்டரி பவரை பயன்படுத்தி உங்கள் வெளிப்புறச் சாதனங்களை இயக்கலாம்.
மேலும் பார்க்க: Hyundai Ioniq 5 Facelifted Unveiled: 7 முக்கிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன
-
இந்த ஒப்பீட்டில் BMW i4 மட்டுமே ரியர் ஆக்ஸிலில் உள்ள ஏர் சஸ்பென்ஷனுடன் வருகிறது. இதில் உள்ள சஸ்பென்ஷன் சாலையின் மேற்பரப்பைப் பொறுத்து அதற்கேற்றபடி உயரத்தை சரிசெய்து சீரான சவாரி தரத்தை வழங்குகிறது.
-
மேலும் i4 மட்டுமே ட்ரை-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதியை வழங்கும் ஒரே EV ஆகும் மற்ற அனைத்து EV -களும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் உடன் வருகின்றன.
-
பாதுகாப்பைப் பொறுத்தவரை BYD சீல் மட்டுமே அதிக ஏர் பேக்குகளை (மொத்தம் 9) பெறுகிறது. அதே நேரத்தில் அயோனிக் 5 மற்றும் BMW i4 ஆகியவை 6 ஏர்பேக்குகளுடன் மட்டுமே வருகின்றன.
-
BMW i4 -வை தவிர இங்குள்ள அனைத்து EV -களும் 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தின் முழுத் தொகுப்புடன் வருகின்றன.
BYD சீல் மற்ற அனைத்து பிரீமியம் எலக்ட்ரிக் கார்களுக்கும் கடுமையான போட்டியாக உள்ளது. மற்றும் இந்த ஒப்பீட்டில் பணத்திற்கு ஏற்ற மிகவும் மதிப்புமிக்க காராகவும் உள்ளது. இது அதிக வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் 650 கிமீ வரை கவர்ச்சியான டிரைவிங் ரேஞ்சையும் கொண்டுள்ளது. மறுபுறம் பிஎம்டபிள்யூ i4 விலையுயர்ந்த தேர்வாகத் தெரிகிறது. அது அதன் சொகுசு பேட்ஜ் காரணமாக இருக்கலாம். எனவே இந்த EV -களில் எது சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஏன்? என்பதை கமெண்டில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்
மேலும் படிக்க: சீல் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful