BYD Atto 3, BYD Seal கார்களுக்கு MY2025 அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன
பிஒய்டி அட்டோ 3 க்காக மார்ச் 11, 2025 08:22 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
காஸ்மெட்டிக் அப்டேட்களை தவிர BYD அட்டோ 3 எஸ்யூவி மற்றும் சீல் செடான் ஆகிய இரண்டு கார்களிலும் இயந்திர ரீதியாகவும் சில அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
முதல் 3,000 வாடிக்கையாளர்களுக்கு MY2024 -யின் எக்ஸ்-ஷோரூம் விலையில் அட்டோ 3 MY25 கிடைக்கும்.
-
அட்டோ 3 -யில் இப்போது வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஆல் பிளாக் கேபின் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
அட்டோ 3 -ன் லோ வால்டேஜ் லெட் ஆசிட் பேட்டரி மாற்றப்பட்டு எல்எஃப்பி (லித்தியம் அயான் பாஸ்பேட்) பேட்டரி இப்போது புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.
-
BYD சீலின் அனைத்து வேரியன்ட்களும் இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் வருகின்றன.
-
சீல் பெரிய கம்ப்ரசர் திறன் உடன் புதுப்பிக்கப்பட்ட ஏசியையும் இப்போது கொண்டுள்ளது.
-
சீல் செடானின் பெர்ஃபாமன்ஸ் வேரியன்ட் இப்போது அடாப்டிவ் டேம்பர்களுடன் வருகிறது.
பிஒய்டி அட்டோ 3 எஸ்யூவி மற்றும் பிஒய்டி சீல் MY25 (மாடல் ஆண்டு) அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக சில வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதோடு இயந்திர ரீதியாகவும் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. அட்டோ 3 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 3,000 யூனிட்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இப்போது முதல் 3,000 வாடிக்கையாளர்களுக்கு MY2025 அட்டோ 3 காரை பழைய 2024 எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே BYD வழங்குகிறது. அப்டேட்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
2025 பிஒய்டி அட்டோ 3
விலை விவரங்கள்
வேரியன்ட் |
விலை |
டைனமிக் |
ரூ.24.99 லட்சம் |
பிரீமியம் |
ரூ.29.85 லட்சம் |
சுப்பீரியர் |
ரூ.33.99 லட்சம் |
MY2024 விலை விவரங்கள்
முதல் 3,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிஒய்டி அட்டோ 3 மேலே குறிப்பிட்டுள்ள விலையில் கிடைக்கும்.
அப்டேட்கள்
BYD அட்டோ 3 இப்போது வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் பிளாக் இன்ட்டீரியர் தீம் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.8 இன்ச் ரொட்டேடபிள் டச் ஸ்கிரீன், 5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 6 வே பவர்டு டிரைவர் இருக்கை, 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோ ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகிய வசதிகளும் கிடைக்கும்.
மேலும் அட்டோ 3 -ன் லோ வோல்டேஜ் பேட்டரி ஒரு LFP (லித்தியம் இரும்பு பாஸ்பேட்) பேட்டரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளாது. இதன் மூலம் காரின் ஒட்டுமொத்த எடையில் ஆறு மடங்கு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து மடங்கு குறைவாக டிஸ்சார்ஜ் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. BYD -ன் படி இது பேட்டரியின் ஒட்டுமொத்த ஆயுட்காலம் 15 ஆண்டுகளாக அதிகரிக்கிறது. BYD ஆனது அட்டோ 3 எஸ்யூவி -யை இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கொடுக்கிறது. விரிவான விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
49.92 kWh |
50.48 kWh |
கிளைம்டு ரேஞ்ச் (ARAI) |
468 கி.மீ |
521 கி.மீ |
பவர் |
204 PS |
|
டார்க் |
310 Nm |
பிஒய்டி சீல்
விலை விவரங்கள்
MY2025 சீல் காரின் விலை விவரங்கள் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் என்று BYD இந்தியா அறிவித்துள்ளது. இருப்பினும் அப்டேட்களை கருத்தில் கொண்டு பார்க்கையில் MY2024 பதிப்பில் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 2024 பிஒய்டி சீல் காரின் விலை விவரங்கள் எடுத்துக்காட்டுக்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
வேரியன்ட் |
விலை விவரங்கள் |
டைனமிக் |
ரூ.41 லட்சம் |
பிரீமியம் |
ரூ.45.55 லட்சம் |
பெர்ஃபாமன்ஸ் |
ரூ.53 லட்சம் |
MY2024 விலை
அப்டேட்கள்
BYD சீல் இப்போது புதிய சில்வர்-பிளேட்டட் டிம்மிங் ரூஃப் உடன் பவர்டு சன்ஷேடை ஸ்டாண்டர்டாக பெறுகிறது. கூடுதலாக சீலின் அனைத்து வேரியன்ட்களும் இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஸ்மார்ட்போன் இணைப்புடன் வருகின்றன. BYD ஆனது சீலின் ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தை பெரிய கம்ப்ரசர் திறன் மற்றும் ஏர் ஃபியூரிபிகேஷனுக்கான புதிய தொகுதியுடன் அப்டேட் செய்துள்ளது.
மிட்-ஸ்பெக் பிரீமியம் வேரியன்ட் இப்போது ஃபிரீக்வென்ஸி செலக்டட் டம்ப்பர்களையும் (FSD) கொண்டுள்ளது. அதே நேரத்தில் BYD சீலின் பெர்ஃபாமன்ஸ் வேரியன்ட்டிலும் DiSus-C செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வினாடிக்கு ஆயிரக்கணக்கான இன்புட்களின் அடிப்படையில் டம்பர்களை எலக்ட்ரானிக் முறையில் அட்ஜஸ்ட் செய்வதன் மூலம் நிலைத்தன்மை மற்றும் வசதியை மேம்படுத்த உதவும் ஒரு டேம்பிங் அமைப்பாகும்.
ரொட்டேடபிள் 15.6-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, இரண்டு வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் மற்றும் வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள் ஆகியவை உள்ளன. இது மெமரி ஃபங்ஷன் உடன் 8-வே பவர்டு ஓட்டுநர் இருக்கை, ஓட்டுநர் இருக்கைக்கு 4-வே லும்பார் பவர்டு அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் 6-வே பவர்டு கோ-டிரைவர் சீட் ஆகியவை சீல் செடானில் உள்ளன.
பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா,ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் சீல் செடான் கிடைக்கும்:
பேட்டரி பேக் |
61.44 kWh |
82.56 kWh |
82.56 kWh |
கிளைம்டு ரேஞ்ச் |
510 கி.மீ |
650 கி.மீ |
580 கி.மீ |
பவர் |
204 PS |
313 PS |
530 PS |
டார்க் |
310 Nm |
360 Nm |
670 Nm |
டிரைவ் டைப் |
RWD |
RWD |
AWD |
போட்டியாளர்கள்
BYD அட்டோ 3 ஆனது டாடா கர்வ் EV மற்றும் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஆகியவற்றிற்கு பிரீமியம் மாற்றாகக் இருக்கும். அதே சமயம் சீல் ஆனது ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6 மற்றும் வோல்வோ C40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.