மார்க்கெட்டில் இருக்கும் அதிக ரேஞ்ச் -ஐக் கொண்ட 10 சிறந்த எலெக்ட்ரிக் வாகனங்கள்
published on மே 03, 2023 06:44 pm by shruti for மெர்சிடீஸ் eqs
- 78 Views
- ஒரு கருத்தை எழுதுக
பணம் ஒரு பொருட்டு இல்லை எனும் போது, ரீசார்ஜ்களுக்கு இடையில் அதிக ரேஞ்ச் கொண்ட இந்த எலக்ட்ரிக் வாகனங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மெதுவாக ஏற்றுக்கொண்டாலும் கூட அது சீரான விகிதத்தில் உள்ளது, பல உற்பத்தியாளர்கள் தங்கள் மின்சார கார்களின் ரேஞ்ச் -ஐ மெதுவாக விரிவுபடுத்துகின்றனர். அதிகரித்த உள்ளூர்மயமாக்கல் மற்றும் அதிக ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பங்களுடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து குறைந்து வருவதால், பயணதூரத்திற்கும் செலவினத்துக்கும் இடையே உள்ள விகிதம் இனிமேல் இணையாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். அதுவரை, இந்தியாவில் கிடைக்கும் அதிகபட்ச ரேஞ்ச் கொண்ட 10 சிறந்த எலெக்ட்ரிக் கார்கள் இதோ:
|
|
|
857கிமீ |
|
708கிமீ |
பிஎம்டபிள்யூ i7 |
625கிமீ |
|
631கிமீ |
பிஎம்டபிள்யூ i4 |
590கிமீ |
|
521கிமீ |
|
500கிமீ |
|
484கிமீ |
|
470கிமீ |
எம்ஜி ZS EV |
461கிமீ |
மெர்சிடிஸ் பென்ஸ் EQS
கிளைம்டு ரேஞ்ச்: 857கிமீ
-
மெர்சிடிஸ் பென்ஸ் 400 வோல்ட் எலக்ட்ரிக் கட்டமைப்பை பயன்படுத்தும் . மேலும், பேட்டரி 10 ஆண்டுகள் அல்லது 250,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது.
-
EQS 107.8 kWh பேட்டரி பேக்குடன் வழங்கப்படுகிறது மற்றும் 857 கிமீ வரை ரேஞ்ச் -ஐ வழங்குகிறது.
கியா EV6
கிளைம்டு ரேஞ்ச்: 708கிமீ
-
77.4 kWh பேட்டரி பேக் கொண்ட EV6 ஒரு முறை சார்ஜ் செய்தால் 708 கிமீ தூரம் வரை பயணிக்கும்.
-
கியா, EV6 -ஐ இரண்டு வேரியன்ட்களில் வழங்குகிறது. GT லைன் மற்றும் GT லைன் AWD.
-
AWD கார் வேரியன்ட் 325PS மற்றும் 605Nm அதிகபட்ச வெளியீட்டிற்கு இரண்டு மின் மோட்டார்களைப் பயன்படுத்துகிறது. EV6, ஏசி மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜிங் (100 கிலோவாட்) இரண்டையும் சப்போர்ட் செய்கிறது.
ஹூண்டாய் அயோனிக் 5
கிளைம்டு ரேஞ்ச்: 631கிமீ
-
அயோனிக் 5 ஆனது 217PS மற்றும் 350Nm ஆற்றலை வெளிப்படுத்தும் ஒற்றை மோட்டாருடன் 72.6kWh பேட்டரி பேக்குடன் வருகிறது.
-
இது 631 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.
-
WLTP படி, அயோனிக் 5 பயனர்கள் 100 கி.மீ ரேஞ்ச் -ஐப் பெற வாகனத்தை ஐந்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தால் போதுமானது.
பிஎம்டபிள்யூ i7
கிளைம்டு ரேஞ்ச்: 625கிமீ
-
பிஎம்டபிள்யூவின் i7 x டிரைவ் 60 மாடல் ஒவ்வொரு அச்சுகளிலும் அதன் இரண்டு மின் மோட்டார்களால் உருவாக்கப்பட்ட ஈர்க்கக்கூடிய 544hp மற்றும் 745Nm அவுட்புட்டைக் கொண்டுள்ளது.
-
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் படி, i7, 0-100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும் மற்றும் அதிகபட்ச வேக வரம்பு 239kphஆகும்.
-
எலெக்ட்ரிக் 7 கார் வரிசைகளை, ஏசி சிஸ்டத்தில் 11 கிலோவாட் வரையிலும், DC சிஸ்டத்தில் 195 கிலோவாட் வரையிலும் சார்ஜ் செய்ய முடியும்.
பிஎம்டபிள்யூ i4
கிளைம்டு ரேஞ்ச்: 590கிமீ
-
பிஎம்டபிள்யூ i4 காரில் 80 kWh பேட்டரி பேக் மற்றும் சிறிய 63 kWh பேட்டரி பேக் என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன.
-
i4 காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஒவ்வொரு ஆக்ஸில்க்கும் ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட டூயல் மோட்டார் அமைப்பு ஆகியவை இடம்பெறும்.
-
இது டாஷ்போர்டில் வளைந்த இன்டெகிரேட்டட் டிஸ்ப்ளேக்கள் உள்ளிட்ட ஒத்த அம்சங்களைக் கொண்ட 3 வரிசையை அடிப்படையாகக் கொண்டது.
பிஒய்டி அட்டோ 3
கிளைம்டு ரேஞ்ச்: 521கிமீ
-
பிஒய்டியின் பிளேடு பேட்டரி தொழில்நுட்பத்துடன் கூடிய 60.48kWh பேட்டரி பேக்கை அட்டோ 3 கொண்டுள்ளது.
-
புதிய அட்டோ 3 முன்புற சக்கர டிரைவ் 204hp மற்றும் 310Nm திறனையும் வெளிப்படுத்தும் நிரந்தர காந்த ஒத்திசைவு மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 80kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 50 நிமிடங்களில் 80% வரை அதனை சார்ஜ் செய்யலாம்.
ஆடி இ-டிரான் GT
கிளைம்டு ரேஞ்ச்: 500கிமீ
-
இ-டிரான் GTயின் மின்சார பவர்டிரெயின் இரண்டு மின் மோட்டார்களைக் கொண்டுள்ளது (ஒன்று முன்புறம் மற்றும் ஒன்று பின்புறம் உள்ளது). ஆடி இ-டிரான் GT அதன் 93kWh பேட்டரி பேக்கில் இருந்து ஒரு முறை சார்ஜ் செய்தால் (ARAI படி) 500 கிமீ வரை ஈர்க்கக்கூடிய ரேஞ்ச் -ஐ வழங்குகிறது.
-
637 hp ஆற்றலையும், 830 Nm டார்க் திறனையும் வழங்கும் ஸ்போர்ட்டியர் RS இ-டிரான் GT அதிகபட்சமாக 481 கிமீ ரேஞ்ச் தரும்.
ஆடி இ-டிரான் (SUV)
கிளைம்டு ரேஞ்ச்: 484 கி.மீ வரை
-
ஆடி நிறுவனத்தின் அறிமுக எலெக்ட்ரிக் மாடலான இ-டிரான் SUV இந்தியாவில் 95kWh பேட்டரி பேக் கொண்ட ஒரே கார் வேரியன்டாகக் கிடைக்கிறது.
-
இது இரட்டை மின்சார மோட்டார் அமைப்பைக் கொண்டுள்ளது, இது 408PS மற்றும் 664Nm உச்ச செயல்திறன் கொண்டது.
-
இ-டிரான் ஸ்போர்ட்பேக் என்ற வித்தியாசமான கூபே ஸ்டைல் பாடி ஷேப் ஆப்ஷனும் உள்ளது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஃபேஸ்லிப்டட் மூலமாக புதுப்பிக்கப்பட உள்ளது.
ஜாகுவார் ஐ-பேஸ்
கிளைம்டு ரேஞ்ச்: 470கிமீ
-
ஜாகுவார் ஐ-பேஸ் புதிய- எலக்ட்ரிக் எஸ்யூவி 90 kWh பேட்டரி பேக், டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 394 hp பவரையும், 696 Nm டார்க் திறனையும் கொண்டுள்ளது.
-
இது இந்திய சந்தையில் நுழைந்த முதல் ஸ்போர்ட்டியான மற்றும் ஆடம்பர மின்சார எஸ்யூவி -களில் ஒன்றாகும், மேலும் இது அதிகரித்து வரும் பிஸியான விற்பனைப் பிரிவில் அதன் வடிவமைப்பிற்காக இன்னும் தனித்து நிற்கிறது.
எம்ஜி ZS EV
கிளைம்டு ரேஞ்ச்: 461கிமீ
-
எம்ஜி ZS EV 44.5 kWh பேட்டரி பேக் மற்றும் 143 hp ஆற்றலையும், 353 Nm டார்க் திறனையும் வழங்கும் ஒற்றை எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி ஆகும்.
-
இந்த பட்டியலில் மிகவும் குறைவான கார், எம்ஜி யின் தயாரிப்பு வரிசையிலிருந்து வருகிறது, இது இந்தியாவில் முதன்முதலில் அறிமுகமானதிலிருந்து அதிக ரேஞ்ச் -ஐ வழங்குவதற்காக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்: EQS ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful