ஹூண்டாயின் டாடா பன்ச்- எஸ்யூவி போட்டி கார் 'எக்ஸ்டர்' என்று அழைக்கப்படும்

published on ஏப்ரல் 14, 2023 09:43 pm by tarun for ஹூண்டாய் எக்ஸ்டர்

  • 90 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய மைக்ரோ எஸ்யூவி விரைவில்,  ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Hyundai Exter

  • ஹூண்டாய் தனது வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவிக்கு 'எக்ஸ்டர்' என்று பெயரிட்டுள்ளது.

  • இது நேரான மற்றும் சில தனித்துவமான விஷுவல்களுடன் முரட்டுத்தனமான தோற்றமுடைய எஸ்யூவி ஆக இருக்கும்.

  • பெரிய டச் ஸ்கிரீன் அமைப்புடன் , எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் TPMS கொண்டதாக இருக்கும்.

  • 83PS 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் எதிர்பார்க்கப்படுகிறது; 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும்  பெறலாம்.

  • எக்ஸ்டரின் விலை ரூ. 6 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அதன் வரவிருக்கும் புத்தம் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு எக்ஸ்டர் என்ற பெயரை உறுதிப்படுத்தியுள்ளது. கார் தயாரிப்பாளர் அதன் அறிமுகம் உடனடியாக இருக்கும்  என்று உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் ஜூன் மாதத்திற்குள் இது அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறோம்.


சமீபத்திய டீஸர் எஸ்யூவியின் அவுட்லைனைக் காட்டுகிறது, இது ஒரு நேரான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள் மற்றும் ஸ்டப்பி பானட் போன்ற சில முரட்டுத்தனமான கூறுகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். H-வடிவ எல்இடி DRL -கள் மற்றும் டெயில் லைட்டுகள் மற்றும் ஃபங்கி அலாய் வீல்கள் உட்பட எக்ஸ்டரின் சில தனித்துவமான விஷுவலைக் கொண்டிருக்கும் என்பதை முந்தைய உளவுக் காட்சிகள்  நமக்குக் காட்டியுள்ளன.
ஹூண்டாய் எக்ஸ்டர் ஆனது கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூவின் கலவையோடு தனித்துவமான கேபினைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சம் வாரியாக, ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

Hyundai Micro SUV

எக்ஸ்டர் -ஐ இயக்குவது 83PS 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக இருக்கும், இது கிரான்ட்i10 நியாஸ், i20, ஆரா  மற்றும் வென்யூவின் அடிப்படை கார்களில் அதன் பணிகளைச் செய்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் ஆப்ஷன்  மற்றும் CNG ஆப்ஷன் வழங்கப்படும். எக்ஸ்டர் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 

மேலும் படிக்க: ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில்  ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்சனுடன் கூடிய 10 மிக மலிவான கார்கள்

சுமார் ரூ. 6 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் ஹீண்டாயின் விலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் தயாரிப்பாளரின் தயாரிப்பு வரிசையில், இது i20 இன் விலைகளுடன் கிரான்ட்i10 நியாஸ் க்கு ஒரு முரட்டுத்தனமான மாற்றாக நிலைநிறுத்தப்படும். டாடா பன்ச், சிட்ரோன் C3, மாருதி இக்னிஸ், மற்றும் பிற சிறிய ஹேட்ச்பேக்குகளுக்கு போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவி இருக்கும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் எக்ஸ்டர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience