• English
    • Login / Register
    • ஹூண்டாய் எக்ஸ்டர் முன்புறம் left side image
    • ஹூண்டாய் எக்ஸ்டர் side காண்க (left)  image
    1/2
    • Hyundai Exter
      + 13நிறங்கள்
    • Hyundai Exter
      + 37படங்கள்
    • Hyundai Exter
    • 3 shorts
      shorts
    • Hyundai Exter
      வீடியோஸ்

    ஹூண்டாய் எக்ஸ்டர்

    4.61.2K மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs.6 - 10.51 லட்சம்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
    மே சலுகைகள்ஐ காண்க

    ஹூண்டாய் எக்ஸ்டர் இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்1197 சிசி
    பவர்67.72 - 81.8 பிஹச்பி
    டார்சன் பீம்95.2 Nm - 113.8 Nm
    ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
    டிரைவ் டைப்ஃபிரன்ட் வீல் டிரைவ்
    மைலேஜ்19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்
    • பின்புற ஏசி செல்வழிகள்
    • பார்க்கிங் சென்ஸர்கள்
    • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
    • க்ரூஸ் கன்ட்ரோல்
    • சன்ரூப்
    • advanced internet பிட்டுறேஸ்
    • cooled glovebox
    • wireless charger
    • முக்கிய விவரக்குறிப்புகள்
    • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

    எக்ஸ்டர் சமீபகால மேம்பாடு

    • மார்ச் 20,2025: ஹூண்டாய் நிறுவனம் அதன் அனைத்து கார்களுக்கும் 3 சதவீதம் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு 2025 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்.

    • மார்ச் 17, 2025: ஹூண்டாய் எக்ஸ்டருக்கு சராசரியாக 2 மாதங்கள் வெயிட்டிங் பீரியட் உள்ளது. 

    • மார்ச் 07, 2025: ஹூண்டாய் மார்ச் மாதத்தில் எக்ஸ்டரில் ரூ.35,000 வரை தள்ளுபடி கொடுக்கிறது.

    எக்ஸ்டர் இஎக்ஸ்(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு6 லட்சம்*
    எக்ஸ்டர் இஎக்ஸ் ஆப்ஷனல்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு6.56 லட்சம்*
    Recently Launched
    எக்ஸ்டர் இஎக்ஸ் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 19.4 கிமீ / கிலோ2 மாத கால காத்திருப்பு
    7.51 லட்சம்*
    Recently Launched
    எக்ஸ்டர் எஸ் ஸ்மார்ட்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்
    7.68 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு7.73 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ் பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு7.93 லட்சம்*
    Recently Launched
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஸ்மார்ட்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்
    8.16 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு8.31 லட்சம்*
    Recently Launched
    எக்ஸ்டர் எஸ் ஸ்மார்ட் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்
    8.39 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு8.44 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் நைட் ஏஎம்டி1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு8.46 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் டெக் டீசல்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு8.51 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் டிடி ஏஎம்டி1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு8.55 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ் எக்ஸிக்யூட்டீவ் சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ2 மாத கால காத்திருப்பு8.56 லட்சம்*
    Recently Launched
    எக்ஸ்டர் எஸ் ஸ்மார்ட் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ
    8.63 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ் பிளஸ் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு8.64 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ் எக்ஸிக்யூட்டீவ் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ2 மாத கால காத்திருப்பு8.64 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் நைட் டிடி ஏஎம்டி1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு8.70 லட்சம்*
    Recently Launched
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஸ்மார்ட் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்
    8.83 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ் எக்ஸிக்யூட்டீவ் பிளஸ் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ2 மாத கால காத்திருப்பு8.86 லட்சம்*
    மேல் விற்பனை
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷன்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு
    8.95 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு8.98 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் நைட் சிஎன்ஜி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.13 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் tech அன்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.18 லட்சம்*
    மேல் விற்பனை
    Recently Launched
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஸ்மார்ட் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ
    9.18 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் டிடி டீசல்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.23 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ2 மாத கால காத்திருப்பு9.25 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ2 மாத கால காத்திருப்பு9.33 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் அட்வென்ச்சர் எடிஷன் ஐவிடி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.38 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் dual knight சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ2 மாத கால காத்திருப்பு9.48 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் tech சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 27.1 கிமீ / கிலோ2 மாத கால காத்திருப்பு9.53 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.62 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் ஏஎம்டி1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.64 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் நைட் ஏஎம்டி1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.79 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் டிடி ஏஎம்டி1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.79 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் நைட் டிடி ஏஎம்டி1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு9.94 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் டிடி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு10 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் நைட் டிடி1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு10.15 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் நைட்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு10.36 லட்சம்*
    எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் டிடி டீசல்(டாப் மாடல்)1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்2 மாத கால காத்திருப்பு10.51 லட்சம்*
    வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
    space Image

    ஹூண்டாய் எக்ஸ்டர் விமர்சனம்

    Overview

    Hyundai Exter

    இன்றைக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர்  காரானது கிராண்ட் i10 நியோஸுடன் கொண்டுள்ள தொடர்பை மறந்துவிடுவோம். சந்தையில் ஏதாவது போட்டியாளர் இருக்கிறார் என்பதையும் மறந்துவிடுவோம். நீங்கள் எக்ஸ்டர் மீதுதான் ஆர்வமாக உள்ளீர்கள். ஆகவே இந்த மைக்ரோ -எஸ்யூவியில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் குறித்து கவனம் செலுத்துவோம், மேலும் இது உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக இடம்பிடிப்பதற்கான சாத்தியம் உள்ளதா இல்லையா என்பதையும் நாம் கண்டுபிடிப்போம்.

    மேலும் படிக்க

    வெளி அமைப்பு

    Hyundia Exter Front

    இது ஒரு எஸ்யூவி -போல் இல்லை ஆனால் எஸ்யூவி -யின் ஸ்கேல் மாடல் போல் தோற்றமளிக்கிறது. இது பெரும்பாலும் ஹேட்ச்பேக் போன்ற செங்குத்தான ரேக் செய்யப்பட்ட விண்ட்ஸ்கிரீனுடன் தொடர்புடையது. ஆயினும்கூட, எக்ஸ்டெர் அதன் வடிவமைப்பில் நிறைய எஸ்யூவி வடிவத்தை கொண்டுள்ளது. கூடுதலான தட்டையான மேற்பரப்புகள், விரிவடைந்த சக்கர வளைவுகள், சுற்றிலும் பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன, அவை முரட்டுத்தனமான தோற்றத்திற்கு உதவுகின்றன. ஆனால் ஃபன் -னான பகுதி வடிவமைப்பில் உள்ளது. போலியான ரிவெட்டுகளுடன் கீழே ஒரு ஸ்கிட் பிளேட் உள்ளது. நவீன கால எஸ்யூவி -களைப் போலவே, கீழே பெரிய ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் LED H- வடிவ DRLகளைப் பெறுவீர்கள்.

    Hyundia Exter Side
    Hyundia Exter Rear

    பக்க வாட்டில், வடிவமைப்பானது வித்தியாசமாகத் தோன்றினாலும், பாக்ஸி தோற்றத்தைக் கொடுக்க முயற்சித்துள்ளனர். 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் நன்றாக இருக்கும் மற்றும் டூயல்-டோன் நிறமும் கொஞ்சம் பிரீமியமாக தோற்றமளிக்க உதவுகிறது. நேர்மையாக சொல்ல வெண்டுமானால், நான் எக்ஸ்டரின் பின்புற சுயவிவரத்தின் ரசிகன் அல்ல, ஏனெனில் இது சற்று தட்டையாக தோன்றுகிறது , இருப்பினும் ஹூண்டாய் இந்த H-வடிவ LED டெயில்லைட்கள் மற்றும் மேலே உள்ள ஸ்பாய்லர் போன்ற சில கூறுகளைக் கொடுக்க முயற்சித்திருப்பதால், வடிவமைப்பையும் ஒரளவுக்கு பார்க்கும் படியாக மாற்றுகிறது.

    மேலும் படிக்க

    உள்ளமைப்பு

    Hyundai Exter Cabin

    எக்ஸ்டரின் உட்புறம் முழுக்க முழுக்க கருப்பு தீம் கொண்டது, அதன் கான்ட்ராஸ்ட்-கலர் பாகங்களால் நிரம்பியுள்ளது. ஏசி கன்ட்ரோல்கள் மற்றும் ஏசி வென்ட்களில் இவற்றை பார்க்க முடிகிறது, மேலும் இவை பாடியின் கலரிலேயே இருக்கும். இருக்கைகளில் உள்ள பைப்பிங்கள் கூட எக்ஸ்டீரியரில் அதே உள்ள நிறத்தை பிரதிபலிக்கின்றன. பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாகங்களின் தரமும் நன்றாக உள்ளது. மேலே இருப்பது மென்மையானதாக கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் 3D பேட்டர்ன் நன்றாக இருக்கிறது. இருப்பினும், இந்த வடிவமைப்பு டாடாவின் ட்ரை-ஆரோவ் வடிவத்துடன் சற்று ஒத்திருக்கிறது.

    Hyundai Exter Seats

    இது தவிர, அனைத்து கட்டுப்பாடுகளும் - ஏசி, ஸ்டீயரிங் பொத்தான்கள் மற்றும் ஜன்னல் சுவிட்சுகள் போன்றவை - மிகவும் அருமையாக இருக்கின்றன. அப்ஹோல்ஸ்டரி கூட துணி மற்றும் லெதரெட் ஆகியவற்றின் கலவையாக கொடுக்கப்பட்டுள்ளது, இது பிரீமியமாக உணர வைக்கிறது. ஆனால் இந்த உயர்தர அனுபவம் டாஷ்போர்டின் மேல் பகுதி மற்றும் டச் பாயின்ட்டுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதையே டோர் பேட்கள் அல்லது டாஷ்போர்டின் கீழே உள்ள பிளாஸ்டிக்குகள் மீது கொடுத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    வசதிகள்

    Hyundai Exter Driver's Display

    ஹூண்டாய் எக்ஸ்டருக்கு அதிகமாக வழங்கியது எதுவென்று பார்த்தால், அதன் வசதிகளையே சொல்ல வேண்டும். முதலில், நீங்கள் ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுவீர்கள், அதன் ரீட்அவுட்கள் மிகப் பெரியதாகவும் தெளிவாகவும் இருக்கும், மேலும் மையத்தில் உள்ள MIDயும் மிகவும் பெரிதாக இருக்கும். உங்கள் டிரைவ் தகவல் மற்றும் பயணத் தகவல்களுடன், நீங்கள் டயர் பிரஷர் டிஸ்ப்ளேயையும் பெறுவீர்கள், இது மிகவும் எளிமையான அம்சமாகும்.

    Hyundai Exter Infotainment System

    அடுத்தது இன்ஃபோடெயின்மென்ட் செட்டப். இது 8 இன்ச் டிஸ்ப்ளே ஆனால் வழக்கமான 8 இன்ச் ஹூண்டாய் டிஸ்ப்ளேவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது பெரிய 10 இன்ச் சிஸ்டம்களில் காணப்படும் சிறந்த இன்டெர்பேஸை இயக்குகிறது. எனவே, நீங்கள் இன்டெகிரேட்டட் நேவிகேஷன், கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் வாய்ஸ் கமென்ட்களை பெறுவீர்கள், அவை பயன்படுத்த மிகவும் எளிதானவை. இந்த அமைப்பில், நீங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவைப் பெறுவீர்கள், ஆனால் வயர்லெஸ் கிடையாது. இந்த சிஸ்டமில், நீங்கள் ஒலிக்கான 4 ஸ்பீக்கர் செட்அப்பையும் பெறுவீர்கள் மற்றும் சவுட்ண்ட் குவாலிட்டியும் நன்றாக உள்ளது.

    Hyundai Exter Dash Cam
    Hyundai Exter Sunroof

    அதன் பிறகு முன் மற்றும் கேபின் கேமராவுடன் இரட்டை கேமரா டேஷ் கேம் வருகிறது. இப்போதெல்லாம், சாலையில் அதிகரித்து வரும் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் காரணமாக பல வாடிக்கையாளர்கள் வெளிச்சந்தையில் டாஷ் கேமராக்களை வாங்கி நிறுவுகின்றனர், எனவே தொழிற்சாலை பொருத்தப்பட்ட இந்த ஆப்ஷன் மிகவும் நல்ல விஷயம். கூடுதலாக, அனைத்து வயரிங் அனைத்தும் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, நீங்கள் ஒரு சன்ரூஃபை பெறுவீர்கள், இது எக்ஸ்டரை இந்த அம்சத்தை கொடுக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாற்றுகிறது.

    Hyundai Exter ORVM

    மேலும், இந்த காரில் எலக்ட்ரிக்கலி சரிசெய்யக்கூடிய ORVM -கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல், டில்ட்-அட்ஜஸ்ட்டபிள் ஸ்டீயரிங், உயரத்தை சரிசெய்யக்கூடிய இருக்கை, டைனமிக் வழிகாட்டுதல்களுடன் கூடிய பின்புற பார்க்கிங் கேமரா, ஃபுட்வெல் ஆம்பியன்ட் விளக்குகள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இவை அனைத்தையும் கொண்டிருப்பதால், காணாமல் போன அம்சங்களைக் கண்டுபிடிப்பது கடினமாகிறது. ஆனால் ஓட்டுநரின் பக்கவாட்டு ஜன்னலோடு ஆட்டோ டவுன், ஆட்டோ அப் ஆகியிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்கும். மேலும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்களுடன் ஆட்டோமெட்டிக் வைப்பர்களும் கிடைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    கேபின் நடைமுறை

    Hyundai Exter Wireless Phone Charger

    எக்ஸ்டர் ஒரு நடைமுறைக்கு ஏற்ற கேபினைப் பெறுகிறது. நீங்கள் வயர்லெஸ் சார்ஜரைப் பெறுவீர்கள், எனவே ஸ்மார்ட்போன்களை சேமிப்பது எளிது. அதன் பிறகு, டாஷ்போர்டின் பக்கத்தில் ஒரு பெரிய சேமிப்பகம் உள்ளது, அங்கு உங்கள் பர்ஸையும் பிற பொருட்களையும் எளிதாக சேமிக்க முடியும். நீங்கள் சென்டர் கன்சோலில் இரண்டு கப் ஹோல்டர்களை பெறுவீர்கள், மேலும் சாவிகளை வைக்க ஒரு பிரத்யேக சேமிப்பகம் வழங்கப்படுகிறது. குளோவ் பாக்ஸ் மிகவும் பெரியது மற்றும் கூலிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. டோர் பாக்கெட்டுகளில் 1-லிட்டர் தண்ணீர் பாட்டில்களை எளிதில் சேமித்து வைக்கலாம் மற்றும் உங்கள் துடைக்கும் துணி அல்லது ஆவணங்களை வைப்பதற்கும் அதிக இடம் உள்ளது.

    சார்ஜிங் ஆப்ஷன்களும் ஏராளமாக உள்ளன. டைப்-சி போர்ட் மற்றும் யூஎஸ்பி போர்ட் ஆகியவை முன்பக்கம் உள்ளன. 12V சாக்கெட்டில் வயர்லெஸ் சார்ஜர் ப்ளக் இன் உள்ளது ஆனால் நீங்கள் அதை USB போர்ட் போல பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் 12V சாக்கெட்டை விரும்பினால், அதுவும் பின்புறத்தில் இருக்கிறது. இறுதியாக, கேபின் விளக்குகள். இந்த காரில் மூன்று கேபின் விளக்குகள் உள்ளன: முன்பக்கத்தில் இரண்டு மற்றும் நடுவில் ஒன்று.

    பின் இருக்கை அனுபவம்

    பெரிய கதவு இருப்பதால், காரில் ஏறுவதும் இறங்குவதும் மிகவும் எளிதானது. உள்ளே நுழைந்த பிறகு, இடமும் பெரியது மற்றும் பெரிய ஜன்னல்களுடன் ஒட்டுமொத்த சுற்றுப்புறமும் சிறப்பாக இருக்கும்.

    இருக்கை குஷனிங் மென்மையானது மற்றும் இருக்கை தளம் சிறிது உயர்த்தப்பட்டுள்ளது, இது உங்களை வசதியாக உட்கார அனுமதிக்கிறது. முழங்கால் அறை மற்றும் கால் அறை போதுமானதாக உள்ளது, மற்றும் ஹெட்ரூம் சிறப்பாக உள்ளது. நீங்கள் இங்கு மூன்று பயணிகள் உட்கார முயற்சிக்கும் போது தான் உண்மையான பிரச்சனை தொடங்குகிறது, ஏனெனில் அகலம் குறைவாக இருப்பதால் நெருக்கடியை உணர முடியும்.

    அம்சங்களைப் பொறுத்தவரை, நீங்கள் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் 12V சாக்கெட் ஆகியவை இந்த காரில் இருக்கிறது, ஆனால் சேமிப்பகம் சற்று குறைவாக உள்ளது. நீங்கள் டோர் பாக்கெட்டுகளைப் பெறுவீர்கள், ஆனால் ஆர்ம்ரெஸ்ட் இல்லை, கப் ஹோல்டர்கள் இல்லை மற்றும் இருக்கையின் பின் பாக்கெட் பயணிகள் இருக்கைக்கு பின்னால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க

    பாதுகாப்பு

    Hyundai Exter 6 Airbags

    இந்த காரில் பேஸ் வேரியன்ட்டில் கூட  ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக உள்ளன. இது தவிர, நீங்கள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், EBD உடன் ABS மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பிளாட்பாரத்தில் உள்ள மற்ற காருக்கு கிராஷ் டெஸ்டில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் ஹூண்டாய், எக்ஸ்டர் சிறந்த க்ராஷ் டெஸ்ட் மதிப்பீட்டிற்காக வலுவூட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது, ஆனால் நாங்கள் இன்னும் 2 அல்லது 3 நட்சத்திர மதிப்பீட்டைமட்டுமே எதிர்பார்க்கிறோம். ஆனாலும், எங்களது கருத்து தவறாக இருக்கலாம் என்றும் நம்புகிறோம்.

    மேலும் படிக்க

    பூட் ஸ்பேஸ்

    எக்ஸ்டர் தன்னை ஒரு எஸ்யூவி என்று அழைக்க விரும்புவதால், அதற்கு நல்ல பூட் ஸ்பேஸை கொடுத்திருக்கிறது. பேப்பரில், இது 391 லிட்டர் இடத்தைக் கொண்டுள்ளது, இது பிரிவு சிறந்தது, மேலும் தரையில், பூட் தளம் மிகவும் அகலமாகவும் நீளமாகவும் இருப்பதால் பெரிய சூட்கேஸ்கள் எளிதில் பொருந்துகின்றன. மேலும், நல்ல உயரம் இருப்பதால், இரண்டு சூட்கேஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். ஒரு வார இறுதி சாமான்களை வைப்பதில் எக்ஸ்டர் -க்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் பெரிய லக்கேஜ்களை ஏற்ற விரும்பினால், இந்த ட்ரேவை அகற்றிவிட்டு, இந்த இருக்கையை மடித்தால் போதும், மேலும் நீண்ட பொருட்களையும் இங்கே வைத்துக்கொள்ளலாம்.

    மேலும் படிக்க

    செயல்பாடு

    ஹூண்டாய் எக்ஸ்டர் 1.2லி பெட்ரோல் இன்ஜினுடன் AMT மற்றும் CNG ஆப்ஷனுடன் வருகிறது. ஆனால் நீங்கள் டர்போ பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜினை தேடுகிறீர்களானால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. வாகனத்தை ஓட்டிப் பாருங்கள், ரீஃபைன்மென்ட் நன்றாக இருப்பதையும், நகரத்தின் உள்ளே வேகத்தில் கேபின் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.]

    ஆனால் இந்த இன்ஜின் சிரமமில்லாத பயண அனுபவத்திற்காக உருவாக்கப்பட்டதே தவிர செயல்திறனை தேடுபவர்களுக்கானது அல்ல. இருப்பினும், பயணம் என்று வரும்போது, அது உண்மையில் சிரமமற்றதாக இருக்கிறது. பவர் டெலிவரி மிகவும் மென்மையானது மற்றும் ஆக்சலரேஷனும் சீராக இருக்கிறது. நகரத்தில் முந்தும்போது வேகத்தை 20 முதல் 40 கிமீ, மற்றும் 40 முதல் 60 கிமீ வரை எளிதாக மாற்றலாம். ஆனால் இந்த இன்ஜின் நெடுஞ்சாலைகளில் தடுமாறுவதை உணர முடிகிறது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் முந்திச் செல்ல அதிக ஆக்சிலரேட்டரைப் பயன்படுத்த வேண்டியிருக்கும், மேலும் இங்கே இன்ஜின் சத்தமாகவும் இருக்கிறது.

    Hyundai Exter AMT

    எக்ஸ்டர் வசதிக்காக ஒரு AMT டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது, என் கருத்துப்படி, அதுதான் கிட்டத்தட்ட அனைவரும் வாங்க வேண்டிய ஒன்றாக இருக்கும். அதன் கியர் மாற்றத்திற்குப் பின்னால் உள்ள லாஜிக் மிகவும் சிறப்பாக உள்ளது மற்றும் ஆக்ச்லரேஷனுக்காக நீங்கள் எப்போது டவுன் செய்ய வேண்டும் என்பதை கியர்பாக்ஸ் புரிந்துகொள்கிறது, மேலும் க்ரூஸ் செய்யும் போது மீண்டும் மேலே செல்கிறது. இது இன்ஜினை ஒரு வசதியானஇடத்திலேயே வைத்திருக்கிறது, எனவே நீங்கள் சக்தியின் பற்றாக்குறையை உணர மாட்டீர்கள். மற்றும் மிக முக்கியமாக, AMT ஸ்டாண்டர்ட்டுகளுக்கு, கியர் மாற்றங்கள் விரைவாக இருக்கும். மேலும், முதல் முறையாக, சிறந்த மேனுவல் கட்டுப்பாட்டிற்காக, AMT உடன் பேடில் ஷிஃப்டர்களை இதில் ஹூண்டாய் கொடுத்துள்ளது. நீங்கள் கூடுதல் செலவு செய்ய விரும்பவில்லை என்றாலும் கூட, மேனுவல் டிரான்ஸ்மிஷன் உங்களால் எதுவும் குறை சொல்ல முடியாது. கிளட்ச் இலகுவானது, கியர் ஸ்லாட்டை எளிதாக மாற்றுகிறது மற்றும் வாகனம் ஓட்டும் வசதி எளிமையானதாக இருக்கிறது.

    Hyundai Exter Paddle Shifters

    நீங்கள் ஒரு எக்ஸைட்டிங்கான டிரைவிங்கை தேடுகிறீர்கள் என்றால், இந்த இன்ஜின் ஏமாற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். அதிக ஹை ரெவ்களில் ஆற்றல் பற்றாக்குறையை உணர முடிகிறது, அங்குதான் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. நியோஸின் பழைய 1-லிட்டர் டர்போ பெட்ரோல் இங்கே சரியான பொருத்தமாக இருக்கும். ஹூண்டாய் அந்த ஆப்ஷனை வழங்கியிருந்தால், இந்த கார் சிறந்த ஆல்ரவுண்டர் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும்.

    மேலும் படிக்க

    ரிடே அண்ட் ஹண்ட்லிங்

    Hyundai Exter

    ஹூண்டாய் எக்ஸ்டரின் சஸ்பென்ஷன் பேலன்ஸ் ஒரு விவேகமான ஒன்றாகும். அதன் பெரும்பாலான கிலோமீட்டர்களை நகரத்தில் செலவிடப் போகிறது என்பதால், சஸ்பென்ஷன் மென்மையான இடத்தில் செட் செய்யப்பட்டுள்ளது. குண்டும் குழியுமான சாலைகள், சாலைக்கு வெளியே மற்றும் உடைந்த சாலைகளில் எக்ஸ்டரை ஓட்டிச் சென்றோம் - அதன் மூலமாக சஸ்பென்ஷன் மிகவும் சீராக உள்ளது என்றே சொல்லலாம். சாலைகளில் உள்ள குழிகளை நீங்கள் அதிகம் உணர முடியாது மேலும் மேடுகள் கூட உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது. ஸ்பீட் பிரேக்கர்கள் நன்கு குஷனிங் ஆக உள்ளன, மேலும் குழிகள் கூட உங்களை பதட்டமடைய செய்யாது. மேலும் இது விரைவாகத் தீர்க்கப்படுவதால், நீண்ட சாலைப் பயணங்களும் வசதியாக இருக்கும். நெடுஞ்சாலைகளில், அது ஸ்டேபிளாக உணர வைக்கிறது மற்றும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அளவுக்கு பாடி ரோல் எதுவும் இல்லை.

    Hyundai Exter

    இப்போது, இந்த கார் ஒரு உயரமான கார் என்பதால், நீங்கள் கொஞ்சம் உயரமாக உட்கார்ந்தால் கூட, ஒரு பெரிய கண்ணாடிப் பகுதி இருப்பதால் சாலையின் தோற்றம் நன்றாக இருக்கிறது. இது உங்களின் முதல் காராக இருந்தால் அல்லது நீங்கள் இப்போதுதான் ஓட்டக் கற்றுக்கொண்டிருந்தால், அதைச் சரிசெய்வது எளிதாக இருக்கும். கையாளுதல் பாதுகாப்பானதாக உணர வைக்கிறது மற்றும் ஸ்டீயரிங் வளைவான மற்றும் சிக்கலான சாலைகளில் நம்பிக்கையைத் கொடுக்கிறது. எனவே நீங்கள் இந்த காரை மலைப் பகுதிக்கு கொண்டு செல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் பதட்டமடைய தேவையிருக்காது.

    மேலும் படிக்க

    வகைகள்

    ஹூண்டாய் எக்ஸ்டரை ஏழு வேரியன்ட்களில் வழங்குகிறது - அவை  EX, EX(O), S, S(O), SX, SX(O), SX(O) கனெக்ட்.

    ஹூண்டாய் எக்ஸெட்டர் மைக்ரோ எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ. 6 லட்சம் முதல் ரூ. 10.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அவை என்ட்ரி லெவல் வேரியன்ட்களில் போட்டியிடுகின்றன, அதே சமயத்தில் பெட்டர் எக்யூப்டு சிறந்த வேரியன்ட்கள்- போட்டியாளர்களை விட கூடுதல் பிரீமியமாக இருக்கின்றன.

    மேலும் படிக்க

    வெர்டிக்ட்

    Hyundai Exter

    எக்ஸ்டர் அதனை எதிர்நோக்கியிருக்கும் பார்வையாளர்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறது, ஆகவே இது எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சுலபமானதாக்குகிறது. கேபின் அனுபவம், இடவசதி, நடைமுறைக்கு ஏற்ற தன்மை, வசதி, சுலபமான டிரைவிங் மற்றும் பூட் ஸ்பேஸ் போன்ற பல விஷயங்களை இது சரியாக பெற்றிருக்கிறது. மேலும் வசதிகளின் பட்டியலும் மிகவும் நன்றாக உள்ளது, அதை ரூ.10 லட்சத்திற்குள் கொடுப்பதும் மிகவும் கடினமாக இருக்கும். எப்படியிருந்தாலும், எக்ஸ்டெர் காரை ஓட்டும் போது உற்சாகம் இருப்பதில்லை, மேலும் இது ஒரு எஸ்யூவி -யாக இருக்க மிகவும் கடினமாக முயற்சிப்பது போல் தெரிகிறது. மேலும் இது பாதுகாப்பு தொழில்நுட்பம் சிறப்பானதாக தெரிந்தாலும், கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சோதனையில் நான்கு நட்சத்திரங்களை பெற முடிந்தால், பட்ஜெட்டில் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஏற்ற கார் வரிசையில் எக்ஸ்டர் முன்னணியில் இருக்கும்.

    மேலும் படிக்க

    ஹூண்டாய் எக்ஸ்டர் இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

    • முரட்டுத்தனமான எஸ்யூவி போன்ற தோற்றம்
    • உயரமான இருக்கைகள் மற்றும் உயரமான ஜன்னல்கள் நல்ல ஓட்டுபவருக்கு கூடுதலான நம்பிக்கையை அளிக்கின்றன
    • டாஷ்கேம் மற்றும் சன்ரூஃப் போன்ற பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சிறப்பான அம்சங்களின் பட்டியல்
    View More

    நாம் விரும்பாத விஷயங்கள்

    • தோற்றம் போலரைஸிங் ஆக உள்ளது
    • டிரைவிங்கில் உற்சாகம் இல்லை மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
    • பாதுகாப்பு மதிப்பீட்டில் நல்ல மதிப்பெண்னை பெற வேண்டும்

    ஹூண்டாய் எக்ஸ்டர் comparison with similar cars

    ஹூண்டாய் எக்ஸ்டர்
    ஹூண்டாய் எக்ஸ்டர்
    Rs.6 - 10.51 லட்சம்*
    டாடா பன்ச்
    டாடா பன்ச்
    Rs.6 - 10.32 லட்சம்*
    ஹூண்டாய் வேணு
    ஹூண்டாய் வேணு
    Rs.7.94 - 13.62 லட்சம்*
    மாருதி ஃபிரான்க்ஸ்
    மாருதி ஃபிரான்க்ஸ்
    Rs.7.54 - 13.04 லட்சம்*
    மாருதி பாலினோ
    மாருதி பாலினோ
    Rs.6.70 - 9.92 லட்சம்*
    மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.5.64 - 7.47 லட்சம்*
    க்யா சிரோஸ்
    க்யா சிரோஸ்
    Rs.9.50 - 17.80 லட்சம்*
    மாருதி ஸ்விப்ட்
    மாருதி ஸ்விப்ட்
    Rs.6.49 - 9.64 லட்சம்*
    Rating4.61.2K மதிப்பீடுகள்Rating4.51.4K மதிப்பீடுகள்Rating4.4435 மதிப்பீடுகள்Rating4.5609 மதிப்பீடுகள்Rating4.4614 மதிப்பீடுகள்Rating4.4451 மதிப்பீடுகள்Rating4.673 மதிப்பீடுகள்Rating4.5379 மதிப்பீடுகள்
    Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
    Engine1197 ccEngine1199 ccEngine998 cc - 1493 ccEngine998 cc - 1197 ccEngine1197 ccEngine998 cc - 1197 ccEngine998 cc - 1493 ccEngine1197 cc
    Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
    Power67.72 - 81.8 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower82 - 118 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower55.92 - 88.5 பிஹச்பிPower114 - 118 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பி
    Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.2 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்
    Airbags6Airbags2Airbags6Airbags2-6Airbags2-6Airbags6Airbags6Airbags6
    Currently Viewingஎக்ஸ்டர் vs பன்ச்எக்ஸ்டர் vs வேணுஎக்ஸ்டர் vs ஃபிரான்க்ஸ்எக்ஸ்டர் vs பாலினோஎக்ஸ்டர் vs வாகன் ஆர்எக்ஸ்டர் vs சிரோஸ்எக்ஸ்டர் vs ஸ்விப்ட்
    space Image

    ஹூண்டாய் எக்ஸ்டர் கார் செய்திகள்

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ
      Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ

      எக்ஸ்டர் எங்களுடனான 3000 கிமீ சாலைப் பயணத்தில் இணைந்து கொண்டது, மேலும் எங்களை இது ஆச்சரியப்படுத்தியது

      By arunDec 27, 2023
    • ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
      ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

      தோற்றத்தில் நன்றாக இருக்கின்றது, நகரத்திற்கு ஏற்ற வகையில் அளவு மற்றும் வசதியான சவாரியையும் கொண்டுள்ளது ,ஆனால் செயல்திறனில்தான் சற்று பின்தங்கியுள்ளது

      By anshDec 12, 2023

    ஹூண்டாய் எக்ஸ்டர் பயனர் மதிப்புரைகள்

    4.6/5
    அடிப்படையிலான1.2K பயனாளர் விமர்சனங்கள்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹1000
    Mentions பிரபலம்
    • All (1153)
    • Looks (322)
    • Comfort (317)
    • Mileage (217)
    • Engine (97)
    • Interior (154)
    • Space (89)
    • Price (299)
    • More ...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • Critical
    • J
      jangid abhay on May 06, 2025
      3.8
      Pros And Cons Of The Car
      (Pros) Good Features: Even the base model has many features. It comes with 6 airbags, which is great for safety. Looks Nice: The car looks modern and stylish from outside and inside. Comfortable: Seats are good and the car feels smooth while driving. Sunroof and Tech: Higher versions have a sunroof, rear AC, wireless charging, and even a dashcam. Easy to Drive: It is easy to handle in city traffic and on highways too. Mileage: The mileage is decent, especially with the CNG option. (Cons) Boot Space: The luggage space is not very big. Not for Off-Road: It looks like an SUV but it?s not good for rough roads or hilly areas. No Diesel Option: Only petrol and CNG are available, no diesel. Engine Power: It's okay for city use, but not very powerful for long drives with full load. --- It?s a great car for small families and city driving. If you want good features at a good price, Exter is a good choice.
      மேலும் படிக்க
      1
    • A
      aryan ghebad on May 02, 2025
      4
      My Opinion On Hyundai Exter
      Overall the car is good enough in this segment I guess it has a good milage+ good ground clearance boot space is also good as well as its a 5 seater comfort car so it would be an better option in this price I think the looks and maximize in future it is good but can be better and also the brand should focus on external safety also Thank you
      மேலும் படிக்க
      1
    • R
      rhul jat on May 02, 2025
      4.5
      For Amazing Exter
      Exter is my favourite car in a segment and very affordable price with excellent feature it has sunroof with only 10 lac and low maintenance wow this is amezing .exter look is very impressive in a segment 10/10 people living this car with price.i have driven many cars in a segment bt exter drive comfort is very impressive and it's milage is also very good in city
      மேலும் படிக்க
      1
    • R
      rohit dhaka on Apr 23, 2025
      4.3
      This Car Is A Budget Friendly Car And Well Defined
      Exter is a budget-friendly car that provides great mileage and a fine driving experience. Comfort, I can say, is fine. Features are limited in this car, but yeah, according to pricing, it's well enough. Overall, I can say that in this range, this is a better alternative than many of them. I can surely say that this is a mini creta.
      மேலும் படிக்க
      1 1
    • V
      volt pahadi on Apr 19, 2025
      5
      I Like This Car
      Very stylish and comfortable car with many different types of features anda unique car colour in a reasonable price you get a sunroof in a prise of 10 lakh Hyundai exter is a compact SUV it also have dashcam which is very stylish and useful it have comfortable seat and a touch screen display with smooth touch
      மேலும் படிக்க
    • அனைத்து எக்ஸ்டர் மதிப்பீடுகள் பார்க்க

    ஹூண்டாய் எக்ஸ்டர் மைலேஜ்

    இந்த பெட்ரோல் மாடல்கள் 19.2 கேஎம்பிஎல் க்கு 19.4 கேஎம்பிஎல் with manual/automatic இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை. இந்த சிஎன்ஜி மாடல்கள் 19.4 கிமீ / கிலோ க்கு 27.1 கிமீ / கிலோ இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை.

    ஃபியூல் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
    பெட்ரோல்மேனுவல்19.4 கேஎம்பிஎல்
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்19.2 கேஎம்பிஎல்
    சிஎன்ஜிமேனுவல்27.1 கிமீ / கிலோ

    ஹூண்டாய் எக்ஸ்டர் வீடியோக்கள்

    • Shorts
    • Full வீடியோக்கள்
    • Design

      Design

      6 மாதங்கள் ago
    • Performance

      செயல்பாடு

      6 மாதங்கள் ago
    • Highlights

      Highlights

      6 மாதங்கள் ago
    • Maruti Swift vs Hyundai Exter: The Best Rs 10 Lakh Car is…?

      Maruti Swift vs Hyundai Exter: The Best Rs 10 Lakh Car is…?

      CarDekho6 மாதங்கள் ago
    • Living with the Hyundai Exter | 20000 KM Long Term Review | CarDekho.com

      Living with the Hyundai Exter | 20000 KM Long Term Review | CarDekho.com

      CarDekho6 மாதங்கள் ago
    • Upcoming Cars In India | July 2023 | Kia Seltos Facelift, Maruti Invicto, Hyundai Exter And More!

      Upcoming Cars In India | July 2023 | Kia Seltos Facelift, Maruti Invicto, Hyundai Exter And More!

      CarDekho1 year ago
    • The Hyundai Exter is going to set sales records | Review | PowerDrift

      The Hyundai Exter is going to set sales records | Review | PowerDrift

      PowerDrift3 மாதங்கள் ago

    ஹூண்டாய் எக்ஸ்டர் நிறங்கள்

    ஹூண்டாய் எக்ஸ்டர் இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.

    • எக்ஸ்டர் நட்சத்திர இரவு colorநட்சத்திர இரவு
    • எக்ஸ்டர் காஸ்மிக் ப்ளூ colorகாஸ்மிக் ப்ளூ
    • எக்ஸ்டர் கடுமையான சிவப்பு colorகடுமையான சிவப்பு
    • எக்ஸ்டர் ஷேடோ கிரே with அபிஸ் பிளாக் roof colorஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப்
    • எக்ஸ்டர் உமிழும் சிவப்பு colorஉமிழும் சிவப்பு
    • எக்ஸ்டர் காக்கி டூயல் டோன் colorகாக்கி டூயல் டோன்
    • எக்ஸ்டர் ஷேடோ கிரே colorஷேடோ கிரே
    • எக்ஸ்டர் காஸ்மிக் டூயல் டோன் tone colorகாஸ்மிக் டூயல் டோன்

    ஹூண்டாய் எக்ஸ்டர் படங்கள்

    எங்களிடம் 37 ஹூண்டாய் எக்ஸ்டர் படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய எக்ஸ்டர் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

    • Hyundai Exter Front Left Side Image
    • Hyundai Exter Side View (Left)  Image
    • Hyundai Exter Front View Image
    • Hyundai Exter Rear view Image
    • Hyundai Exter Grille Image
    • Hyundai Exter Front Fog Lamp Image
    • Hyundai Exter Headlight Image
    • Hyundai Exter Taillight Image
    space Image

    புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் ஹூண்டாய் எக்ஸ்டர் மாற்று கார்கள்

    • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் டிடி
      ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் டிடி
      Rs8.45 லட்சம்
      202416,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ்
      ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ்
      Rs7.49 லட்சம்
      202317,101 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் அன்ட்
      ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் அன்ட்
      Rs8.65 லட்சம்
      20243,600 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் டிடி ஏஎம்டி
      ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் டிடி ஏஎம்டி
      Rs9.25 லட்சம்
      20235,700 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்
      ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்
      Rs7.20 லட்சம்
      20235, 500 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஹூண்டாய் எக்ஸ்டர் SX CNG 4 Cylinder
      ஹூண்டாய் எக்ஸ்டர் SX CNG 4 Cylinder
      Rs8.95 லட்சம்
      202318,000 Kmசிஎன்ஜி
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் டிடி
      ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் கனெக்ட் டிடி
      Rs7.90 லட்சம்
      202312,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் டிடி டீசல்
      ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்எக்ஸ் டிடி டீசல்
      Rs7.75 லட்சம்
      20235,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • ஹூண்டாய் எக்ஸ்டர் SX CNG 4 Cylinder
      ஹூண்டாய் எக்ஸ்டர் SX CNG 4 Cylinder
      Rs9.00 லட்சம்
      202340,000 Kmசிஎன்ஜி
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டொயோட்டா hyryder இ
      டொயோட்டா hyryder இ
      Rs12.00 லட்சம்
      202410,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      கேள்விகளும் பதில்களும்

      Jayprakash asked on 3 May 2025
      Q ) Exter ex available in others colour
      By CarDekho Experts on 3 May 2025

      A ) The Hyundai Exter EX is available in the following colors: Fiery Red, Cosmic Blu...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Mohsin asked on 9 Apr 2025
      Q ) Are steering-mounted audio and Bluetooth controls available?
      By CarDekho Experts on 9 Apr 2025

      A ) Yes, the Hyundai Exter comes with steering-mounted audio and Bluetooth controls...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Sahil asked on 26 Feb 2025
      Q ) What is the Fuel tank capacity of Hyundai Exter ?
      By CarDekho Experts on 26 Feb 2025

      A ) The Hyundai Exter's fuel tank capacity is 37 liters for petrol variants and ...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Mohit asked on 25 Feb 2025
      Q ) How many airbags does the vehicle have?
      By CarDekho Experts on 25 Feb 2025

      A ) The Hyundai Exter comes with 6 airbags, including driver, passenger, side and cu...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Singh asked on 21 Jan 2025
      Q ) Hyundai extra Grand height
      By CarDekho Experts on 21 Jan 2025

      A ) The Hyundai Exter, a compact SUV, has a height of approximately 1635 mm (1.635 m...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      இஎம்ஐ துவக்க அளவுகள்
      Your monthly EMI
      15,360Edit EMI
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer
      ஹூண்டாய் எக்ஸ்டர் brochure
      brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
      download brochure
      கையேட்டை பதிவிறக்கவும்
      space Image

      சிட்டிஆன்-ரோடு விலை
      பெங்களூர்Rs.7.44 - 13.17 லட்சம்
      மும்பைRs.7.25 - 12.49 லட்சம்
      புனேRs.7.25 - 12.49 லட்சம்
      ஐதராபாத்Rs.7.44 - 12.98 லட்சம்
      சென்னைRs.7.37 - 13.04 லட்சம்
      அகமதாபாத்Rs.6.94 - 11.76 லட்சம்
      லக்னோRs.7.06 - 12.17 லட்சம்
      ஜெய்ப்பூர்Rs.7.21 - 12.33 லட்சம்
      பாட்னாRs.7.18 - 12.39 லட்சம்
      சண்டிகர்Rs.7.18 - 11.84 லட்சம்

      போக்கு ஹூண்டாய் கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்

      Popular எஸ்யூவி cars

      • டிரெண்டிங்
      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க

      காண்க மே offer
      space Image
      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
      ×
      We need your சிட்டி to customize your experience